search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசாலாட்சி"

    • ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி.
    • கோவிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இதுதான் ஆதி நந்தி.

    மூலவர்: காசி விஸ்வநாதர்

    அம்மன்/தாயார்: விசாலாட்சி

    தீர்த்தம்: கங்கையில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதிகங்கை என்ற தீர்த்தக் குளம் உள்ளது. ஞான வாவி என்ற சிறுதீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ரதீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள்.

    பழமை: 2000-3000 வருடங்களுக்கு முன்

    புராண பெயர்: வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம்.

    திருவிழா: தை அமாவாசை, ஆடி அமாவாசை, தீபாவளி (அன்னக்கொடி உற்ஸவம்), ஹோலிப் பண்டிகை, சிவராத்திரி, நவராத்திரி.

    தல சிறப்பு: இந்தியாவில் 12ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது, அம்மனின் சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா பீடமாகும். இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனி சிறப்பு.

    ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி. இத்தலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. மிகவும் பழமை வாய்ந்த நகரம். வாரணா, ஹசி என்ற நதிகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. இவ்வூரை பனாரஸ் என்றும் சொல்வார்கள். கல்வியை வழங்கும் கிரகமான புதன் காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக கிரகபதவி பெற்றார். கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும். காசி என்றால் ஒளிநகரம் என்பது பொருள். காசியில் இறந்து போவது சொர்க்கத்தைத் தரும் என்று சொல்வார்கள். இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம். ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.

    இந்த கோவிலை முதன்முதலில் கட்டியது யார் எனக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். முகலாய சக்ரவர்த்தி அக்பர் தனது வருவாய்துறை அமைச்சர் தோடர்மால் மூலமாக கட்டினார். தோடர்மால் தனது குருவான நாராயண் பட் உதவியுடன் ஷகி கஜானா நிதியிலிருந்து இந்தப் பணியைச் செய்துள்ளார். ஆனால் காசி விஸ்வநாதர் கோவிலின் பழங்கால வரலாற்றிலும் கல்வெட்டுகளிலும் இதுபற்றிய தகவல்கள் ஏதுமில்லை. கி.பி 1034ம் ஆண்டு முதல் காசி விஸ்வநாதர் கோவில் பலமுறை முகலாய பேரரசர்களால் இடித்து தள்ளப்பட்டுள்ளது. இதை இந்துக்கள் திரும்பத் திரும்ப கட்டி வந்துள்ளனர். 1669-ல் அக்பரின் பேரன் அவுரங்கசீப் விஸ்வநாதர் கோவிலில் உள்ள சிருங்கர் மண்டபத்தின் சுவரை ஆதாரமாகக் கொண்டு கோவில் அருகில் ஒரு மசூதியையும் கட்டினார். இப்போதும் இந்த மசூதி இருக்கிறது. சிருங்கர் மண்டப சுவரை ஆதாரமாகக் கொண்டு மசூதி கட்டப்பட்டுள்ளதை கண்கூடாகப் பார்க்கலாம். இதிலிருந்து காசி கோவில் ஒரு புண்ணி சத்திரம் மட்டுமல்ல ஒற்றுமையின் சின்னம் என்பதும் நமக்கு புரிகிறது.

    இங்கு அன்ன பூரணி, சத்திய நாராயணர், டுண்டி ராஜவிநாயகர், சாட்சி விநாயகர், இராமர், அனுமன், சனிபகவான், துர்காதேவி, கவுடி மாதா, பைரவர், மகாகாளர், மகா காளி, பாண்டுரங்கன், நீலகண்டர், தண்டபாணீச்வரர் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். விசுவநாதர் கோவில் கர்ப்பகிருகம் வடநாட்டுப்பாணியில் கோபுரம் உயரமாகவும், கொடியுடனும் காணப்படுகிறது. மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார். பக்தர்கள் மண்டிபோட்டுக் குனிந்து விசுவநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர். லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. லிங்கத்தைச் சுற்றிலும் வெள்ளித் தகடுக் கட்டு அமைத்துள்ளார்கள். லிங்கத்தின் மேல் ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்காதீர்த்தம் சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது.

    கோவிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இதுதான் ஆதி நந்தி. ஆதி விசுவநாதர் கோவிலிருந்த இடத்தில் மசூதி உள்ளது. அந்த நந்தியின் அருகேதான் ஞானவாவி என்ற தீர்த்தக் கிணறு உள்ளது. இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோவில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தூர் ராணி அகல்யாபாய் இக்கோயிலைக் கட்டினார். இந்த கோவில் மிகவும் சிறிய கோவில் தான். குறுகலான பாதையில் சென்று கோவிலை அடைய வேண்டும். பூஜை பொருட்களைக் கொண்டு பக்தர்களே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம். அர்ச்சகரிடம் கொடுத்து பூஜிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்னபூரணி கோவிலும், விசாலாட்சி கோவிலும் தனியே சிறிது தொலைவில் உள்ளன. விசாலாட்சி கோவில் நமது தென்னாட்டுப் பாணியில் உள்ளது. இங்கே நவக்கிரகங்களும் உள்ளன. அன்னபூரணி அம்பாள் கோவிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாள்.

    பிரார்த்தனை:

    வியாச காசியில், வியாசர் வழிபட்ட சிவலிங்கத்தை வழிப்பட்டால் தான், காசிக்கு வந்த முழுப் பலனையும் அடையலாம். காசிக் காவலர் பைரவர் கோயிலில், காசிக் கயிறு என்னும் கறுப்புக் கயிறு கட்டிக் கொண்டால், நம்மைத் தீய சக்திகள் அண்டாது. கங்கையில் நீராடினால் நமது தேகம் புனிதம் அடைகிறது. விசுவநாதரைத் தரிசித்தால் உயிர் புனிதம் அடைகிறது. ஞான வாவியைத் தரிசித்தால் அறிவு புனிதம் அடைகிறது - என்று முனிவர்கள் பலர் கூறியுள்ளனர்.

    நேர்த்திக்கடன்:

    பக்தர்கள் இங்குள்ள தீர்த்தக் கரையில் தம் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

    • தமிழகம் முழுவதும் கழகத்தை பலப்படுத்தும் பணிகளை விரைவு படுத்திட மக்கள் செல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
    • வெற்றியை பரிசளிக்க நாம் அயராது பணியாற்ற வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், ராயபுரம் பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாவட்டக் கழக அவைத் தலைவர் பாலுசாமி,மாவட்ட கழக பொருளாளர் சேகர், துணைச் செயலாளர்கள் சூர்யா செந்தில், புல்லட் ரவி, மாவட்டக் கழக இணைச்செயலாளர் ஹாஜிரா பானு,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ரத்தினசாமி, பொதுக்குழு உறுப்பினர் உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி பேசும்போது கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் கழகத்தை பலப்படுத்தும் பணிகளை விரைவு படுத்திட மக்கள் செல்வர் உத்தரவிட்டு உள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டி இருக்கிறது. ஏற்கனவே நடந்த தேர்தல்களை விட மிகவும் சிறப்பாக செயல்பட வேண்டும். அதற்காக கட்சியில் புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும். ஒவ்வொரு வார்டு, பகுதிகளில் உள்ள இளம் வாக்காளர்களை கட்சியில் இணைத்து உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

    பகுதி கழகங்கள் பிரிக்கப்பட்டு மேலும் நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வார்டில் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் செல்வருக்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளிக்க நாம் அயராது பணியாற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட செயலாளர் அ.விசாலாட்சி பேசினார்.கூட்டத்தில், ராயபுரம் பகுதி பொறுப்பாளர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×