search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது பயன்பாட்டு மையம்"

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறிகள் மூலம் தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி ஆகின்றன.
    • மத்திய, மாநில அரசுகளின் மானியம் 14 கோடி என 21 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்து க்கும் அதிகமான விசைத்தறிகள் மூலம் தினசரி ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி ஆகின்றன. இவை வட மாநிலங்களில் மதிப்பு கூட்டு பொருளாக மாற்றப்பட்டு விற்பனைக்கு செல்கின்றன.

    துணிகளை மதிப்பு கூட்டுவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் இங்கு இல்லாததால் வடமாநில ங்களை நம்பியே விசைத்தறி யாளர்கள் உள்ளனர். இது குறித்து திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விசைத்தறி சங்க செயலாளர் பாலசுப்ர மணியம் கூறியதாவது:-

    விசைத்தறி தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல கடந்த 2016ல் பொது பயன்பாட்டு மையம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்ப ட்டது.விசைத்தறியாளர் சார்பில் 2 கோடி ரூபாய், வங்கி சார்பில் 3.5 கோடி, எந்திரங்களுக்கான மானியம் 1.5 கோடி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானியம் 14 கோடி என 21 கோடி ரூபாய் மதிப்பீடு செய்ய ப்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கேத்தனூரில் அமைய உள்ள பொது பயன்பாட்டு மையத்தில் நவீன சைசிங் மில், துணிகள் பிளீச்சிங் செய்யும் எந்திர ங்கள், பிரின்டிங் யூனிட் அமையும் என்பதால் துணிகளை மதிப்பு கூட்டு பொருளாக்கி விற்பனைக்கு கொண்டு செல்ல முடியும். இதில் 60க்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். வருகிற 2024ல் மையத்தை முழுமையான செயல்பா ட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டு ள்ளோம். இதனால் விசைத்தறி மற்றும் இது சார்ந்த தொழில்கள் முன்னேற்ற மடையும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பொது பயன்பாட்டு மையத்தில் அனைத்து மெஷின்கள் நிறுவும்பணி நிறைவடைந்துள்ளது.
    • நிட்டிங் நிறுவனங்களின் தேவையை பொருத்து துணி உற்பத்தியும் மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை உற்பத்தியின் முதல் நிலையில் உள்ள நிட்டிங் துறையை பலப்படுத்துவதற்காக பல்லடம் அருகே நாரணாபுரத்தில் நிட்டிங் பொது பயன்பாட்டு மையத்தை நிறுவியுள்ளது, சிம்கா சங்கம். 40 நிட்டிங் நிறுவனங்கள் கரம்கோர்த்து 26 ஆயிரம் சதுர அடியில் நிட்டிங் மெஷின் கூடம், தொழிலாளர் திறன் பயிற்சி மையம், ஒர்க்ஷாப் , நூல் மற்றும் துணி ஆய்வக கட்டமைப்பு வசதிகளுடன் இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 15.35 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 8.35 கோடி ரூபாய், மாநில அரசு 3 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளன. நிட்டிங் துறையினர் 4 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.தைவான், சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்து அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய நிட்டிங் மெஷின்கள் படிப்படியாக இறக்குமதி செய்து பொது பயன்பாட்டு மையத்தில் நிறுவப்பட்டு வந்தது. கடந்தாண்டு திருப்பூர் வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், நிட்டிங் பொது பயன்பாட்டு மையத்தை திறந்து வைத்தார்.

    இறுதிகட்டமாக தற்போது சீன கிளவுஸ் நிட்டிங் மெஷின்கள் வந்துள்ளன. இதனால் பொது பயன்பாட்டு மையத்தில் அனைத்து மெஷின்கள் நிறுவும்பணி நிறைவடைந்துள்ளது.

    பொது பயன்பாட்டு மைய செயல்பாடுகள் குறித்து, 'சிம்கா' சங்க தலைவர் விவேகானந்தன் கூறியதாவது:-

    நிறுவப்பட்டுள்ள எந்திரங்களில் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமின்றி நிட்டிங் நிறுவனங்களின் தேவையை பொருத்து துணி உற்பத்தியும் மேற்கொள்ளப்படும். நவீன மெஷின்களால் திருப்பூரில் மதிப்பு கூட்டப்பட்ட பின்னல் துணி உற்பத்தி அதிகரிக்கும். பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும், புதுமையான பின்னலாடை ரகங்களை தயாரித்து உலகளாவிய சந்தை வாய்ப்புகளை வசப்படுத்த முடியும்.

    பொது பயன்பாட்டு மையத்தில் அமைக்கப்படும் பயிற்சி மையத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். நிட்டிங் மெஷின் ஆபரேட்டர், போர்மேன், டெக்னீஷியன் பயிற்சி அளிப்பதற்காக சிறப்பு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அரசு அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் நிட்டிங் தொழிலாளர்களுக்கான பயிற்சியும் துவக்கப்படும்.நூல் மற்றும் துணியின் தரம் மற்றும் குறைபாடுகளை கண்டறிவதற்கான சர்வதேச தரத்தில் பரிசோதிக்க ஆய்வகம், மெஷின்கள் பழுதுநீக்கும் ஒர்க் ஷாப் ஆகியன அடுத்தடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ரூ.15.35 கோடி மதிப்பில், நிட்டிங் பொது பயன்பாட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • தமிழக முதல்-அமைச்சர் காணொலி மூலம் மையத்தை திறந்து வைத்தார்.

    திருப்பூர் :

    பல்லடம் அருகே நாரணாபுரத்தில் ரூ.15.35 கோடி மதிப்பில், நிட்டிங் பொது பயன்பாட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பூரை சேர்ந்த 40 நிட்டிங் நிறுவனத்தினரை ஒருங்கிணைத்து மத்திய, மாநில அரசு மானியத்துடன் தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம்(சிம்கா) இம்மையத்தை உருவாக்கியுள்ளது.திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், விழா மேடையில் இருந்தவாறு, காணொலி மூலம் மையத்தை திறந்து வைத்தார். பொது பயன்பாட்டு மைய நிர்வாக இயக்குனர் விவேகானந்தன், இயக்குனர் சிவானந்தம் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து பொதுபயன்பாட்டு மையம் செயல்பாட்டை துவக்கியுள்ளது.

    இது குறித்து விவேகானந்தன் கூறியதாவது :- பொதுபயன்பாட்டு மையத்தில் தைவான், சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்து அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய காலர் நிட்டிங், சர்க்குலர் நிட்டிங் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. திருப்பூரில் 10ஆயிரம் நிட்டிங் நிறுவனங்கள் உள்ளன.ஹெல்பர், ஆபரேட்டர், போர்மேன், சர்வீஸ் என்ஜினீயர், டெக்னீஷியன் என 5 வகை பணியிடங்கள் உள்ளன. பொதுபயன்பாட்டு மையத்தில் தொழிலாளர்களுக்கு இப்பிரிவுகளில் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    பயிற்சி முடிப்போருக்கு அரசு அதிகாரிகள் அங்கீகாரத்துடன் கூடிய சான்று மற்றும் நிட்டிங் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு அளிக்கப்படும். திறன்மிக்க தொழிலாளரை பணி அமர்த்துவதன் மூலம் நிட்டிங் துறை மேலும் பலம் பெறும்.அதிநவீன நிட்டிங் மெஷின்களை பயன்படுத்தி டெனிம், புள்பாடி கார்மென்ட், தொழிற்சாலை பயன்பாட்டு கிளவுஸ் என பல்வேறுவகை மதிப்பு கூட்டு ஆடை ரகங்கள் தயாரிக்கப்படும். பொதுபயன்பாட்டு மைய உறுப்பினர்கள் மட்டுமின்றி அனைத்து ஆடை உற்பத்தி துறையினரும் இம்மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இம்மையத்தால் பின்னலாடை துறையின் லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை நோக்கிய பயணம் அதிவேகம் பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிநவீன பிரின்டிங் எந்திரங்கள் பொது பயன்பாட்டு மையத்தில் நிறுவப்படுகின்றன.
    • இரண்டாம் கட்ட எந்திரம் கொள்முதலுக்கான பணிகள் தற்போது நடந்துவருகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் தாராபுரம் ரோடு, பலவஞ்சிபாளையம் ரிங் ரோட்டில் அப்பேரல் கிளஸ்டர் பொது பயன்பாட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.தொழில் பாதுகாப்புக்குழு, பின்னலாடை உற்பத்தி துறையினர் 50 பேர் இணைந்து மத்திய, மாநில அரசு மானியத்துடன் மொத்தம் 16.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில்இம்மையத்தை உருவாக்கி வருகிறது.

    மதிப்பு கூட்டு ஆடை உற்பத்திக்கு கைகொடுக்கும்வகையில் அதிநவீன பிரின்டிங் எந்திரங்கள் பொது பயன்பாட்டு மையத்தில் நிறுவப்படுகின்றன.முதல்கட்டமாக ஆர்டர் செய்யப்பட்ட எந்திரங்களில் ஆட்டோமேட்டிக் டிரையருடன் கூடிய கிளாஸ் பிரின்டிங் எந்திரம், காஸ் கியூரிங் எந்திரங்கள் சமீபத்தில் திருப்பூர் வந்து சேர்ந்தன. எந்திரங்களை நிறுவும் பணிகள் நடந்துவருகின்றன.துருக்கியிலிருந்து ஐந்து ரவுண்ட் டேபிள் பிரின்டிங் எந்திரம், சீனாவிலிருந்து ஒரு ஓவல் பிரின்டிங் எந்திரங்கள் வந்துகொண்டிருக்கின்றன.இவ்விரு எந்திரங்களும் வந்து சேர்ந்தவுடன் அப்பேரல் கிளஸ்டர் பொது பயன்பாட்டு மையத்தை இயக்கத்துக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து அப்பேரல் கிளஸ்டர் பொது பயன்பாட்டு மைய நிர்வாக இயக்குனர் மோகனசுந்தரம் கூறியதாவது:-

    அதிநவீன பிரின்டிங் எந்திரங்களுடன் அப்பேரல் கிளஸ்டர் பொது பயன்பாட்டு சேவை மையம் உருவாகிவருகிறது. முதல் கட்ட எந்திரங்கள் அனைத்தும் வந்து சேர்ந்தபின், வரும் ஜூலை மாதம் பொது பயன்பாட்டு சேவை மைய இயக்கத்தை துவக்க திட்டமிட்டுள்ளோம்.இரண்டாம் கட்ட எந்திரம் கொள்முதலுக்கான பணிகள் தற்போது நடந்துவருகின்றன. நவீன டிஜிட்டல் பிரின்டிங் எந்திரம், ராப்பியர் லேபிள் பிரின்டிங் எந்திரம், புதுமையான எம்ப்ராய்டரி எந்திரங்கள் வாங்குவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.பெரிய நிறுவனங்களுக்கு இணையாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும், அதிநவீன எந்திரங்களை பயன்படுத்தி சுலபமாக ஆடை ரகங்களில் பிரின்டிங் செய்வதற்கு இம்மையம் கைகொடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • பலவஞ்சிபாளையம் ரிங் ரோட்டில், அப்பேரல் கிளஸ்டர் பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது.
    • துணியில் டிசைன்களை மிக துல்லியமாக எந்திரம் பொறிக்கும்.

    திருப்பூர் : 

    பொது பயன்பாட்டு சேவை மையங்களை அமைத்து, பின்னலாடை உற்பத்தி துறையில் உள்ள தொழில் நுட்ப இடைவெளிகளை பூர்த்தி செய்யும் முயற்சியில் திருப்பூர் தொழில் துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

    தென்னிந்திய இறக்குமதி எந்திர பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம்(சிம்கா) பல்லடம் அருகே நாரணாபுரத்தில் நிட்டிங் பொது சேவை மையத்தை உருவாக்கியுள்ளது. அதிநவீன எந்திரங்களுடன் இம்மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    இதேபோல் திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு, பின்னலாடை உற்பத்தி துறையினர் 50 பேரை இணைத்து தாராபுரம் ரோடு பலவஞ்சிபாளையம் ரிங் ரோட்டில், அப்பேரல் கிளஸ்டர் பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது.

    ரூ.16.25 கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு, மத்திய அரசு ரூ. 8.56 கோடி, மாநில அரசு ரூ. 3 கோடி மானியம் வழங்குகின்றன. தொழில் துறை குழுவினர் ரூ. 4.69 கோடி முதலீடு செய்கின்றனர்.பொது பயன்பாட்டு மையம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் முதல் கட்ட மெஷினரிகள் வந்திறங்கின.

    மைய தலைவர் ராமசாமி, நிர்வாக இயக்குனர் மோகனசுந்தரம், தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாதுரை, விஜயகுமார் உள்ளிட்டோர் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.சீனாவில் இருந்து ஆட்டோமேட்டிக் டிரையருடன் கூடிய ஆட்டோமேட்டிக் கிளாஸ் பிரின்டிங் எந்திரம், 2 காஸ் கியூரிங் எந்திரம் 2 என இரண்டு வகையான நான்கு எந்திரங்கள் வந்துள்ளன.கிளாஸ் பிரின்டிங் எந்திரத்தில் 76க்கு 36 இன்ச் என்கிற பெரிய பரப்பளவில் துணியில் பிரின்டிங் செய்ய முடியும்.

    பிறப்பிக்கும் கட்டளையை ஏற்று தானாக இயங்கி, துணியில் டிசைன்களை மிக துல்லியமாக இந்த எந்திரம் பொறிக்கும். பிரின்டிங் செய்யப்பட்ட துணியே உடன் இணைக்கப்பட்டுள்ள டிரையருக்கு அனுப்பி உலர்த்தியும் கொடுத்துவிடும். அதிவேக உற்பத்தி திறன் மிக்கது. புதுமையான பிரின்டிங் சேம்பிள் தயாரிப்புக்கு இந்த எந்திரம் கைகொடுக்கும். எந்திரங்களை நிறுவும் பணிகள் நடந்துவருகின்றன. ரவுண்ட் பிரின்டிங் எந்திரம், எம்ப்ராய்டரி எந்திரங்களும் அடுத்தடுத்து வர உள்ளன. முதல்கட்ட எந்திரங்கள் வந்துவிட்டதால் விரைவில் இப்பொது பயன்பாட்டு மையமும் இயக்கத்தை துவக்க உள்ளது.

    ×