என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரசாயன கழிவு"

    • ஐதராபாத் வெங்கடாத்ரி நகர் பகுதியில் தெரு முழுவதும் ரத்த ஆறு ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சி
    • தெலுங்கானா மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா தொழிற்பேட்டை அருகே வெங்கடாத்ரி நகர் பகுதியில் தெரு முழுவதும் ரத்த ஆறு ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள், நகராட்சி அதிகாரிகளை அழைத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த அதிகாரிகள், இது ரத்தம் இல்லை என்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சிவப்பு நிற ரசாயனம் என்று தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

    இத்தகைய ரசாயனக் கழிவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பின்னர் தெலுங்கானா மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்து, தொழிற்சாலைகள் ரசாயனங்கள் வெளியேற்றப்படுவதை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தனர்.

    • தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து சுமார் 6 மைல் தெற்கே உள்ளது.
    • இரத்தத்தில் மூழ்கியது போல் இருந்தது. இதுபோன்ற ஒன்றை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை.

    அர்ஜென்டினா தலைநகரான பியூனஸ் அயர்ஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஓடை நீர் ரத்த சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து சுமார் 6 மைல் தெற்கே மக்கள் அதிகம் வசிக்கும் புறநகர் பகுதியில் சரண்டி என்ற நதி ஓடுகிறது.

    அர்ஜென்டினாவிற்கும் உருகுவேவிற்கும் இடையிலான ஒரு முக்கிய நீர்நிலையான ரியோ டி லா பிளாட்டா நதியின் துணை நதியான இது பல கிலோமீட்டர் தூரம் பயணித்து கடைசியில் ஆற்றில் கலக்கும். பயணிக்கும் வழியில் ஏராளமான தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன.

    அங்கிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் இந்த ஓடையில் கலக்கிறது. இதற்கு முன்னரும் எண்ணெய் போலவும் சில நேரம் சாம்பல் அல்லது ஊதா நிறத்திலும் இந்த நீர்நிலை மாறியுள்ளது. இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

    ஓடை நிறம் மாறியது குறித்து பேசிய உள்ளுரர்வாசிகள், திடீரென சில நாட்களுக்கு முன்பு காலை இதுபோல நீரோடை நிறம் மாறியிருந்தது. அது இரத்தத்தில் மூழ்கியது போல் இருந்தது. இதுபோன்ற ஒன்றை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை என்கின்றனர்.

    இந்த நீரோடையை தவிர்த்து இந்தப் பகுதியில் உள்ள ஆறுகள் பலவும் மாசுபாடுகள் நிறைந்தவை. உதாரணமாக மடான்சா-ரியாசுலோ நதிப் படுகை, லத்தீன் அமெரிக்காவில் மிகவும் மாசுபட்ட நீர்நிலைகளில் ஒன்றாக அழைக்கப்படுகிறது.

    • திருப்பூரில் செயல்பட்டு வரும் அனைத்து சாய ஆலைகளும் பூஜ்ஜிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, சாயபட்டறைகளை மூடி நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • மழை பெய்யும் போதெல்லாம் இதேபோன்று கழிவு பொருட்கள், ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிநீர் கால்வாயில் கலந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம், வழியாக ஓடும் நொய்யல் ஆற்றில் கடந்த 2000மாவது ஆண்டில் சுத்திகரிப்பு செய்யப்படாத சாய தண்ணீர் வருடக் கணக்கில் திறந்து விடப்பட்டதால்,வழியோர விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்படைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இதனை தொடர்ந்து விவசாயிகள் தொடுத்த வழக்கின் காரணமாக திருப்பூரில் செயல்பட்டு வரும் அனைத்து சாய ஆலைகளும் பூஜ்ஜிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, சாயபட்டறைகளை மூடி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையம் அமைத்து,சாய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தியதால் சாய நீர் நொய்யல் ஆற்றில் நேரடியாக கலப்பது தடுக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நொய்யல் ஆற்றில் மழை பெய்யும் நேரங்களில் சாய நீர் கலப்பது வாடிக்கையாக வருவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் இயங்கும் நிறுவன சாய ஆலைகள் மழை பெய்யும்போது கழிவு நீர் கால்வாய் மற்றும் நொய்யல் ஆற்றில் நேரடியாகவே சுத்திகரிப்பு செய்யாத சாய நீரை கலந்து வருவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    மேலும் திருப்பூர் நகருக்குள் செயல்படும் பனியன் துணி உற்பத்தி சார்ந்த கெமிக்கல் ஆலைகளில் இருந்து வெளியாகும் கழிவு மற்றும் திரவ கழிவுகள் மழை பெய்யும்போது சாக்கடையில் திறந்துவிடப்பட்டு நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று மாலை திருப்பூர் நகரில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழை யின் போது,திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டு ராமமூர்த்தி நகரில் மழை வெள்ளத்துடன் கழிவுநீர் கால்வாயில் அதிக துர்நாற்றத்துடன் ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிவுகளை சாக்கடையில் கலந்துவிட்டனர்.

    ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதெல்லாம் இதேபோன்று கழிவு பொருட்கள், ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிநீர் கால்வாயில் கலந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.எண்ணெய் பசைபோல் உள்ள இந்த ரசாயனத்தால் சாலையில் வரும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுவது வாடிக்கையாகி உள்ளதால், அதிகாரிகள் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர், ஜூன்.17-

    திருப்பூர் மாவட்டம், வழியாக ஓடும் நொய்யல் ஆற்றில் கடந்த 2000மாவது ஆண்டில் சுத்திகரிப்பு செய்யப்படாத சாய தண்ணீர் வருடக் கணக்கில் திறந்து விடப்பட்டதால்,வழியோர விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்படைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இதனை தொடர்ந்து விவசாயிகள் தொடுத்த வழக்கின் காரணமாக திருப்பூரில் செயல்பட்டு வரும் அனைத்து சாய ஆலைகளும் பூஜ்ஜிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, சாயபட்டறைகளை மூடி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையம் அமைத்து,சாய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தியதால் சாய நீர் நொய்யல் ஆற்றில் நேரடியாக கலப்பது தடுக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நொய்யல் ஆற்றில் மழை பெய்யும் நேரங்களில் சாய நீர் கலப்பது வாடிக்கையாக வருவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் இயங்கும் நிறுவன சாய ஆலைகள் மழை பெய்யும்போது கழிவு நீர் கால்வாய் மற்றும் நொய்யல் ஆற்றில் நேரடியாகவே சுத்திகரிப்பு செய்யாத சாய நீரை கலந்து வருவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    மேலும் திருப்பூர் நகருக்குள் செயல்படும் பனியன் துணி உற்பத்தி சார்ந்த கெமிக்கல் ஆலைகளில் இருந்து வெளியாகும் கழிவு மற்றும் திரவ கழிவுகள் மழை பெய்யும்போது சாக்கடையில் திறந்துவிடப்பட்டு நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று மாலை திருப்பூர் நகரில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழை யின் போது,திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டு ராமமூர்த்தி நகரில் மழை வெள்ளத்துடன் கழிவுநீர் கால்வாயில் அதிக துர்நாற்றத்துடன் ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிவுகளை சாக்கடையில் கலந்துவிட்டனர்.

    ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதெல்லாம் இதேபோன்று கழிவு பொருட்கள், ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிநீர் கால்வாயில் கலந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.எண்ணெய் பசைபோல் உள்ள இந்த ரசாயனத்தால் சாலையில் வரும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுவது வாடிக்கையாகி உள்ளதால், அதிகாரிகள் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×