என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மைடியர் பூதம்"
- தமிழ் சினினாவின் முன்னணி நடிகரான பிரபுதேவா, இயக்குனர் ராகவன் இயக்கத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் புதிய அப்டேட் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட பிரபு தேவா ரேக்ளா, பொய்க்கால் குதிரை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து, இவர் நடித்துள்ள படம் 'மைடியர் பூதம்'. இயக்குனர் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரம்யா நம்பீசன், மாஸ்டர் அஸ்வந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர்.
டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரெடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதை அடுத்து 'மைடியர் பூதம்' திரைப்படத்தில் இருந்து 'எனக்கு மட்டும் ஏன் ஏன்' லிரிக்கல் வீடியோ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.
ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரபுதேவா பூதமாக நடித்துள்ளார். பிரபுதேவாவின் இந்த கதாபாத்திரம், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.