என் மலர்
நீங்கள் தேடியது "தாழ்வான நிலை"
- தியாகதுருகம் அருகே பராமரிப்பு இன்றி தேக்குமரங்கள் காய்ந்து போனது.
- அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து காய்ந்துபோன தேக்கு மரங்களை அகற்றிவிட்டு அதே இடங்களில் நிழல் மற்றும் கனி தரும் மரங்களை நடவு செய்ய வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சமுதாயக்கூடம் அருகே சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது.
இந்த இடத்தில் கடந்த 5- ஆண்டுகளுக்கு முன்பு வேம்பு, தேக்கு, நாவல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழைநீர் தேங்கியதால் சுமார் 50-க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் காய்ந்து போனது. மீதமுள்ள மரக் கன்றுகள் பராமரிப்பு இன்றி புதர் மண்டி காணப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து காய்ந்துபோன தேக்கு மரங்களை அகற்றிவிட்டு அதே இடங்களில் நிழல் மற்றும் கனி தரும் மரங்களை நடவு செய்ய வேண்டும் எனவும் மேலும் இந்த மரக்கன்றுகளுக்கு நடுவே மிகவும் தாழ்வான நிலையில் மின்கம்பி செல்கிறது.
இது எதிர்பாராத விதமாக யாரேனும் சென்றால் அசம்பாவிதம் ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து மின்கம்பிகளை இழுத்து கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.