என் மலர்
நீங்கள் தேடியது "slug 233268"
- சாய் பல்லவி நடித்துள்ள விராட பர்வம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்தின் புரொமோஷன் நேர்காணலின் போது சாய் பல்லவி பேசியது சர்ச்சையானது.
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்திலேயே 'களி' என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். பின்னர் 'பிடா' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்கு சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்காராய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் நடிப்பில் விராட பர்வம் திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியானது. ராணா டகுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் புரொமோஷனுக்காக நடைபெற்ற நேர்காணலின்போது நடிகை சாய்பல்லவி பேசியது சர்ச்சைக்குள்ளானது. இவரின் கருத்து எதிர்ப்புகளும் ஆதரவுகளும் பெற்று வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

சாய் பல்லவி
இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் 'விராட பர்வம்' படம் குறித்து தன்னுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சமீபத்தில் நான் பார்த்த சிறந்த தெலுங்கு படம் 'விரத பர்வம்'. இயக்குனர் வேணு உடுகுலா, எந்த சமரசமும் இல்லாமல் இந்தப் படத்தை உருவாக்கியதற்காகப் பாராட்டப்பட வேண்டியவர். இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ராணா டகுபதிக்கு சிறப்பு பாராட்டுகள். சாய்பல்லவி சிறப்பாக நடித்துள்ளார்" என பா.ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
#Viraataparvam is the best Telugu film I've watched in recent times. Producers & dir @venuudugulafilm deserve much appreciation for making this film without any compromises.Special appreciations to @RanaDaggubati for accepting &doing this role & @Sai_Pallavi92 has done superbly👏
— pa.ranjith (@beemji) June 19, 2022
- சாய் பல்லவி நடித்துள்ள விராட பர்வம் படத்தின் புரொமோஷன் நேர்காணலின் போது பேசியது சர்ச்சைக்குள்ளானது.
- காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்ததும், இஸ்லாமியர்களுக்கு நடப்பதும் ஒன்றுதான் என்று சாய் பல்லவி தெரிவித்திருந்தார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி சமீபத்தில் மத ரீதியாக தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின. சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. சமூக வலைத்தளத்தில் கண்டனங்களும் கிளம்பின. இந்த நிலையில் சர்ச்சைக்கு விளக்கம் அளித்து சாய் பல்லவி சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சாய் பல்லவி
அதில், "சில தினங்களுக்கு முன்பு நான் தெரிவித்த கருத்து சர்ச்சையாக்கப்பட்டு உள்ளது. மனிதர்கள் அனைவரும் ஒன்று என்பதைத்தான் பேட்டியில் தெரிவித்தேன். என்னை பொறுத்தவரை ஒரு மருத்துவ பட்டதாரியாக, எந்த உயிரையும் இனம், மதம், சாதி, கலாசாரம், மொழி ரீதியாக பிரித்து பார்க்க கூடாது. எல்லோரின் உயிரும், உணர்வும் ஒன்று தான். எனது 14 வருட பள்ளி காலத்தில், தினமும் இந்தியர்கள் அனைவரும் சமம். அனைவரும் என் உடன் பிறந்தவர்கள். என் நாட்டை நேசிக்கிறேன் என்று உறுதிமொழி எடுத்து இருக்கிறேன்.

சாய் பல்லவி
சாதி, மதம், இனம் ரீதியாக யாரையும் வேறுபடுத்தி பார்த்தது இல்லை. நடுநிலையாகவே பேசுவேன். எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பலர் கருத்து கூறியது வேதனை அளிக்கிறது. எனக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- சாய் பல்லவி நடித்துள்ள விராட பர்வம் படத்தின் புரொமோஷன் நேர்காணலின் போது பேசியது சர்ச்சைக்குள்ளாகியது.
- காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்ததும், இஸ்லாமியர்களுக்கு நடப்பதும் ஒன்றுதான் என்று சாய் பல்லவி தெரிவித்திருந்தார்.
நடிகை சாய் பல்லவி, நடிகர் ராணா நடித்துள்ள விராட பர்வம் திரைப்படம் ஜூன் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தில் நக்சல் தலைவர் என்ற கேரக்டரில் ராணா நடித்துள்ளார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படத்தின் புரொமோஷனுக்காக நடைபெற்ற நேர்காணலின்போது பேசிய நடிகை சாய்பல்லவி, "எனது குடும்பத்தினர் எந்த கொள்கையையும் சாராதவர்கள். நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்றுதான் எனது குடும்பத்தினரால் நான் வளர்க்கப்பட்டுள்ளேன். யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களை பாதுகாக்க வேண்டும். இடது சாரிகள், வலது சாரிகள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பதை நம்மால் சொல்ல முடியாது.

சாய் பல்லவி
காஷ்மீர் பண்டிட்டுகள் அனுபவித்த கொடுமைகளை தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் கூறியிருந்தார்கள். மத அடிப்படையில் இந்த சம்பவங்களை நீங்கள் அணுகினால், சமீபத்தில் பசுக்களை ஏற்றிச் சென்ற இஸ்லாமிய டிரைவர் ஒருவர் தாக்கப்பட்டார். அவர் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல வேண்டும் என்று கூறி தாக்கினார்கள். காஷ்மீர் பண்டிட் பிரச்னை, இஸ்லாமிய டிரைவர் மீதான தாக்குதல் இவ்விரு சம்பவங்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்க முடியும்? நாம் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். நாம் நல்லவர்களாக இருந்தால் பிறரை காயப்படுத்த மாட்டோம்.
நான் மிகவும் நடுநிலையானவள். எனவே நான் நம்புவது என்னவென்றால், நீங்கள் என்னை விட வலிமையானவராக இருந்தால், நீங்கள் என்னை ஒடுக்குகிறீர்கள் என்றால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஒரு சிறிய கூட்டத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒடுக்குவது தவறு. சரிசமமாக உள்ள இருவருக்கிடையேதான் போட்டி இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ள இந்தக் கருத்துக்கு சமூக ஊடகங்களில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சாய் பல்லவி மீது ஹைதராபாத் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விஸ்வ இந்து ரிஷத் இயக்கத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த அகில் என்ற நபர் ஹைதராபாத் சுல்தான் பஜார் காவல்நிலையத்தில் சாய் பல்லவி மீது புகார் கொடுத்துள்ளார். பசு பாதுகாவலர்களையும், காஷ்மீரி தீவிரவாதிகளையும் சாய் பல்லவி ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை வேண்டும் என அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
'விரத பர்வம்' படத்தின் இயக்குனர் வேணு உடுகுலா மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.