என் மலர்
நீங்கள் தேடியது "கன்னட நடிகை"
- காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில், நான் தூங்கவோ சாப்பிடவோ அனுமதிக்கப்படவில்லை.
- வெற்றுப் பக்கங்களிலும் கையெழுத்திட உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டேன்.
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) தன் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ரன்யா ராவ், டிஆர்ஐயின் கூடுதல் இயக்குநர் ஜெனரலுக்கு (ஏடிஜிக்கு) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்த வழக்கில் நான் நிரபராதி என்று சொல்ல உங்கள் அதிகாரிகள் என்னை அனுமதிக்கவில்லை. காவலில் எடுக்கப்பட்டதிலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை 10 முதல் 15 முறை தன்னை அதிகாரிகள் அறைந்ததார்கள்.
ஏற்கனவே எழுதப்பட்ட எழுதப்பட்ட 50 முதல் 60 பக்கங்களிலும், சுமார் 40 வெற்றுப் பக்கங்களிலும் கையெழுத்திட உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டேன். திரும்பத் திரும்ப அடித்து, அறைந்த போதிலும், அவர்கள் (டிஆர்ஐ அதிகாரிகள்) தயாரித்த அறிக்கையில் கையெழுத்திட நான் மறுத்துவிட்டேன். காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில், நான் தூங்கவோ சாப்பிடவோ அனுமதிக்கப்படவில்லை.
இது தவிர, எனது தந்தையின் அடையாளத்தை வெளியிடுவதாகவும் ஒரு அதிகாரி என்னை மிரட்டினார். இந்த வழக்குக்கும் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னிடமிருந்து எந்த தங்கமும் மீட்கப்படவில்லை.

டெல்லியைச் சேர்ந்த சிலர் அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு என்னை ஒரு பொய் வழக்கில் சிக்க வைத்துள்ளனர். உண்மையான குற்றவாளிகள் காப்பாற்றப்படுகின்றனர் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ரன்யா ராவ் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ரன்யாவின் தந்தை டிஜிபி ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
ஆனால், கடந்த மார்ச் 3 ஆம் தேதி துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய ரன்யா ராவிடம் இருந்து ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக டிஆர்ஐ அறிக்கை குறிப்பிடுகிறது.
- உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் லீலாவதி அனுமதிக்கப்பட்டார்.
- அவள் ஒரு தொடர் கதையில் நடிகர் கமல்ஹாசனுடனும், அவர்கள், கர்ஜனை ஆகிய படங்களில் நடிகர் ரஜினிகாந்துடனும் நடித்துள்ளார்.
பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி பெங்களூரு அருகே சோழதேவனஹள்ளியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாக நோய்வாய்பட்டு அவர் கடந்த சில நாட்களாக படுத்த படுக்கையாக இருந்தார்.
இந்த நிலையில் உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் லீலாவதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் பிறந்த லீலாவதி கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'பட்டினத்தார்', 'சுமைதாங்கி', 'வளர்பிறை', 'அவள் ஒரு தொடா் கதை', 'நான் அவனில்லை', 'அவர்கள்', 'புதிர்', 'கர்ஜனை' ஆகிய 8 படங்களில் நடித்துள்ளார். அவள் ஒரு தொடர் கதையில் நடிகர் கமல்ஹாசனுடனும், அவர்கள், கர்ஜனை ஆகிய படங்களில் நடிகர் ரஜினிகாந்துடனும், வளர்பிறையில் நடிகர் சிவாஜிகணேசனுடனும் நடித்துள்ளார்.
இந்நிலையில் பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,
பழம்பெரும் கன்னட திரையுலக பிரபலம் லீலாவதியின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். சினிமாவின் உண்மையான அடையாளமான அவர், பல படங்களில் தனது நடிப்பால் வெள்ளித்திரையை அலங்கரித்தார். அவரது மாறுபட்ட பாத்திரங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க திறமை எப்போதும் நினைவில் பாராட்டப்படும். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ஐதராபாத்தில் இருந்து வனபர்த்தி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்மீது பயங்கரமாக மோதியது.
- போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
பெங்களூரு:
கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் பவித்ரா ஜெயராம். தெலுங்கு தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் அருகே காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஐதராபாத்தில் இருந்து வனபர்த்தி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் உடன் பயணித்த பவித்ரா ஜெயராமின் உறவினர் அபேக்ஷா, சக நடிகர் சந்திரகாந்த், டிரைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் உள்ள சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தபோது இந்த விபத்து நேர்ந்தது. போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
- கன்னட சின்னத்திரை வைஷ்ணவி கவுடா தொடர்பான ஒரு 'டீப் பேக்' ஆபாச வீடியோ வெளியாகி உள்ளது.
- பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப் ஆகியோரின் முகத்தை பயன்படுத்தி 'டீப் பேக்' ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்தநிலையில், கன்னட சின்னத்திரை வைஷ்ணவி கவுடா தொடர்பான ஒரு 'டீப் பேக்' ஆபாச வீடியோ வெளியாகி உள்ளது. அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவரது புகைப்படங்களை மர்ம நபர்கள் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர்.

அவற்றைப் பார்த்த நடிகை வைஷ்ணவி கவுடா அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுபற்றி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது கன்னட சின்னத்திரை நடிகைகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- `சப்த சாகரதாச்சே எல்லோ சைட் பி’ என்ற கன்னட படத்தில் நடித்ததன் மூலம் இந்திய திரை உலகில் பிரபலமானவர் சைத்ரா ஜே.ஆச்சார்.
- தமிழ் திரையுலகில் புதிதாக 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
`சப்த சாகரதாச்சே எல்லோ சைட் பி' என்ற கன்னட படத்தில் நடித்ததன் மூலம் இந்திய திரை உலகில் பிரபலமானவர் சைத்ரா ஜே.ஆச்சார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் தமிழ் திரையுலகில் புதிதாக 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அதில் ஒரு படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார். கிராமிய குடும்பக் கதையான இந்த படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவில் பட்டியில் நடைபெற்று வருகிறது.
படத்தில் சசிகுமாருடன் சைத்ரா ஜே.ஆச்சார் இணைந்து நடித்து வருகிறார். படத்துக்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் தலைப்பு மதர் இந்தியா என வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சைத்ரா இரண்டாவதாக தமிழில் நடிக்க இருக்கும் படம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராஜுமுருகன் அடுத்ததாக நடிகர் சசிக்குமார் நடிப்பில் 'மை லார்ட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை சைத்ரா நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவராவார் ராஜு முருகன். இவர் இயக்கிய குக்கூ, ஜோக்கர், மெஹந்தி சர்கஸ் , ஜிப்ஸி ஆகிய திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது. இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது ஜப்பான் திரைப்படம் . ஆனால் இப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் ராஜுமுருகன் அடுத்ததாக நடிகர் சசிக்குமார் நடிப்பில் 'மை லார்ட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை சைத்ரா நடித்துள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலிவுட இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப் இன்று வெளியிட்டார். அதில் சசிகுமாரும் சைத்ராவும் பீடி பிடிக்கும் புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் வாகா.
- கடந்த 15 நாட்களில் 4 முறை அவர் துபாய் சென்று வந்துள்ளார்.
தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் வாகா. இதில் கதாநாயகியாக கன்னட நடிகை ரன்யா ராவ் (31) நடித்திருந்தார். இவர் தற்போது தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நடிகை ரன்யா ராவ் சுமார் 14.8 கிலோ தங்கத்துடன் பிடிபட்டதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு துபாயில் இருந்து பெங்களூரு வந்திறங்கிய அவர் உடலில் அதிகபடியான நகைகளை அணித்திருந்ததை கண்டு சந்தேகமடைந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் தங்ககட்டிகள் இருப்பது கண்டரியப்பட்டது. கடந்த 15 நாட்களில் 4 முறை அவர் துபாய் சென்று வந்துள்ளார்.

இதனை கண்காணித்த அதிகாரிகள் இந்த முறை அவர் வருவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே விமான நிலையத்தில் காத்திருந்து அவரை மடக்கிப்பிடித்து சோதனை செய்து நகைகளை கைப்பற்றினர்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும்போது அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்கநகை, தங்க பிஸ்கட்டை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து நடிகை ரன்யா ராவிடம் இருந்த நகை, தங்கக்கட்டி என்று மொத்தம் 14.80 கிலோ மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நடிகை ரன்யா ராவை கைது செய்து வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கடத்தலின் பின்னணியில் இன்னும் வேறு பல நபர்கள் இருக்கலாம் என்ற அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஐ.பி.எஸ். அதிகாரியான ரன்யா ராவின் தந்தை கர்நாடகாவில் ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
- நடிகை சுவாதி கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
- தவறான சிகிச்சை காரணமாக கன்னட நடிகையின் முகம் பரிதாப நிலையில் உள்ளது.
பெங்களூர் ஜே.பி.நகரில் வசித்து வருபவர் நடிகை சுவாதி சதீஷ். இவர் கன்னடத்தில் ஒருசில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு பல் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர் சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மருந்துக்கு பதிலாக ஒரு ஊசியை கொடுத்து சுவாதியை அதை செலுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மருத்துவரின் அறிவுறுத்தலின்படி நடிகை சுவாதி அந்த ஊசியை செலுத்தி உள்ளார். இதன்பின்னர், சுவாதிக்கு தாடை உள்பட முகத்தில் வலி ஏற்பட்டதுடன் முகம் நன்றாக வீங்கி முகத்தின் அமைப்பு மாறி உள்ளது.

இதையடுத்து அவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை தொடர்பு கொண்டு கேட்டபோது முக வீக்கம் விரைவில் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது வரை சுவாதிக்கு முகவீக்கம் சரியாகவில்லை. மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டாலும் யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை என்று நடிகை சுவாதி குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அவர் கடந்த 20 நாட்களாக வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.