search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலவஞ்சிபாளையம்"

    • பேருந்து வசதி இல்லாததால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • போக்குவரத்துக் கழக அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பலவஞ்சிபாளையம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1280 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் திருப்பூரில் உள்ள பள்ளிக்கும் கல்லூரிக்கும் அதே போல் ஏராளமான பொதுமக்கள் பனியன் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இப்பகுதியில் பேருந்து வசதி இல்லாததால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு 54 வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம் சொந்த முயற்சியால் திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியன்,4ம் மண்டல தலைவர் இல. பத்மநாதன் ஆகியோர் போக்குவரத்துக் கழக அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு பொது மக்களுக்கு 3 மினி பேருந்துகளை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இயக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சி வஞ்சி நகர் பகுதியில் நடைபெற்றது.மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் பத்மநாபன், 54 வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம், 57 வது வார்டு கவுன்சிலர் கவிதா கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று மினி பேருந்துகளை துவக்கிவைத்தனர். இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பயணித்தனர் . முதல் நாள் அனைவரும் இலவசமாக பயணித்தனர். 

    • சக்தி விநாயகர், மாகாளியம்மன் மற்றும் காளிகுமாரசுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
    • ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், அபிஷேகம் நடைபெற்றது.

    வீரபாண்டி :

    வீரபாண்டி பலவஞ்சிபாளையத்தில் உள்ள ஸ்ரீ காளிகுமாரசுவாமி கோவில் ஆண்டுவிழா மற்றும் பொங்கல் விழா நடந்தது. காலை 6மணிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து சக்தி விநாயகர் மற்றும் மாகாளியம்மன் மற்றும் காளிகுமாரசுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மகா தீபாராதனையை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.

    பின்பு மாலை 4மணி முதல் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் விக்னேஷ்வர பூஜை,கணபதி ஹோமம், அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ கருப்பராயன் கோவிலில் விக்னேஷ்வர பூஜை, மூல மந்திர ஹோமம், மற்றும் அபிஷேகம் நடந்தது. முடிவில் ஸ்ரீ காளிகுமாரசுவாமி கோவிலில் விக்னேஷ்வர பூஜை, மூல மந்திர ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • சத்ரு சம்ஹார திரிசதி பூஜை மற்றும் அமாவாசை அலங்காரம், பூஜைகள் நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் வீரபாண்டி பலவஞ்சிபாளையம் ஸ்ரீ காளிகுமாரசுவாமி கோவிலில் இன்று சத்ரு சம்ஹார திரிசதி பூஜை மற்றும் அமாவாசை அலங்காரம், பூஜைகள் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    • மழை நீர் தேங்கி சேறும் சகதியாக மாறியது.
    • வாகன ஓட்டிகள் காயம் அடைந்து வருகின்றனர்.

    வீரபாண்டி:

    வீரபாண்டி பிரிவிலிருந்து பலவஞ்சிபாளையம் செல்லும் சாலையில் 4வது குடிநீர் குழாய் பணிக்கும் பணி சென்ற வாரம் நடந்தது. அப்போது சாலையின் இடது புறமாக சாலையை தோண்டி குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. பணி முடிவுற்ற நிலையில் சரியாக மண் சமன்செய்யப்படாததால் நேற்று பெய்த மழை நீர் தேங்கி சேறும் சகதியாக மாறியது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் இதில் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இரு சக்கர வாகன ஓட்டிகள் சேறும் சகதியாக உள்ள சாலையில் ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக இந்த சேறும் சகதியாக உள்ள சாலையை சீரமைத்து தருமாறு வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×