search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைரியம்"

    • விழுப்புரம் மாவட்டத்தில் கல்பனாசாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிலிக்கப்பட்டுள்ளது.
    • சுதந்திரதின விழாவில் முதல்-அமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

    2022-ம் ஆண்டிற்கான கல்பனாசாவ்லா விருது வீரதீர செயல்புரிந்த பெண் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளது. சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாக வும், துணிச்சலுடனும், நல்ல பலசெயல்களை செய்திருக்க வேண்டும். மேற்படி நற்செயல்கள் செய்த தற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இவ்விருது சுதந்திர தினத்தன்று நடைபெறும். சுதந்திரதின விழாவில் முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளது.

    மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உறுப்பினர் செயலாளர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சூவரூர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை-600 003 என்ற முகவரிக்கு தபால் மூலமாக 26.06.2022 க்குள் அனுப்பிடவும். அல்லது இணையதளத்தில் விண்ணப்பிக்க விரும்பினால் 30.06.2022 க்குள் அனுப்பிவைக்க வேண்டும்.மேற்கண்ட விருது தொடர்பான இதர விபரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ, அல்லது தொலை பேசியிலோ (அ.பே.எண்: 7401703485) தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×