search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார் கனமழை"

    • ஹெலிகாப்டரின் இருந்த 2 பைலட்டுகள் உள்ளிட்ட 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • ஹெலிகாப்டரில் இருந்த நிவாரணப் பொருட்களை படகில் வந்து மக்கள் எடுத்துச் சென்றனர்.

    பீகாரின் சீதாமர்ஹி என்ற பகுதியில் ராணுவத்தின் இலகு ரக ஹெலிகாப்டர் வெள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச்சென்றபோது ஹெலிகாப்டர் வெள்ளத்தில் இறங்கியது.

    ஹெலிகாப்டரின் இருந்த 2 பைலட்டுகள் உள்ளிட்ட 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    ஹெலிகாப்டரில் இருந்த நிவாரணப் பொருட்களை படகில் வந்து மக்கள் எடுத்துச் சென்றனர்.

    மேலும், மீட்பு பணி வராததால் பொது மக்கள் உதவியுடன் ஹெலிகாப்டரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    • பீகார் மாநிலத்தில் மழை பெய்து வருகிறது. அங்கு மின்னல் தாக்கி 17 பேர் பலியாகினர்.
    • மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.

    பாட்னா:

    பீகாரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    பகல்பூர் மாவட்டத்தில் 6 பேரும், வைஷாலி மாவட்டத்தில் 3 பேரும், பாங்கா, ககாரியா மாவட்டத்தில் தலா 2 பேர், முங்கர், கதிஹார், மாதேபுரா மற்றும் சஹஸ்ராவில் தலா ஒருவர் என மொத்தம் 17 பேர் பலியாகினர் என தெரிவித்தது.

    மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார், அவர்களது குடும்பத்துக்கு தலா 4 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.

    ×