search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிகே சிவக்குமார்"

    • மேகதாது அணை திட்டத்தால் தமிழகம் ஆதாயமடையும் என்று கூறினார்.
    • திடக்கழிவு மேலாண்மை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

    பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கும் இந்த முறை சாதகமான சூழலை உருவாக்கி இருக்கியது என கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை திட்டத்தால் தமிழகம் ஆதாயமடையும் என்று அவர் கூறினார்.

    தமிழகம் வந்துள்ள டிகே சிவக்குமார் சென்னை சேத்துப்பட்டில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

    இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவக்குமார், "மேகதாது அணை தமிழ்நாட்டுக்காக தான். மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட அதிக பயன்பெறுவது தமிழ்நாடு தான். தற்போது போதுமான அளவு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மேகதாது அணை குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார்."

    "சென்னையில் உள்ள துப்புரவு திட்டம் என்னை வெகுவாக ஈர்த்துள்ளது. இதற்காக நான் அரசாங்கத்தையும் ஒட்டுமொத்த அதிகாரிகள் குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அவர்கள் வித்தியாசமான அணுகுமுறையை எடுத்துள்ளனர். இந்த வருகை எங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல கற்றல் செயல்முறையாக இருந்தது," என்று தெரிவித்தார்.

    • குமாரசாமி எம்.பி.யாக வெற்றி பெற்றதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    • டிகே சிவக்குமார் சகோதரர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    கர்நாடக மாநிலம் சன்னபட்னா சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன் என காங்கிரஸ் தலைவரும், கர்நாடக மாநில துணை முதல்வருமான டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் போட்டியிட்டாலும் தனக்கு கவலை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

    துணை முதல்வரான இவர் சன்னபட்னாவில் கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினார். அரசியல் உள்நோக்கத்துடன் இங்கு டிகே சிவக்குமார் சுதந்திர தினத்தை கொண்டாடியதாக கூறப்படுகிறது.

    தற்போது டிகே சிவக்குமார் கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ.-வாக உள்ளார். மத்திய மந்திரியாக உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் ஹெச்.டி. குமாரசாமி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    டிகே சிவக்குமாரின் சகோதரரும், முன்னாள் எம்.பி.யுமான டிகே சுரேஷ் மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தார். இவர் சன்னபட்னா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    அண்ணனின் தோல்விக்குப் பழிவாங்கவும், அப்பகுதியில் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டவும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் களம் இறங்கலாம் எனத் தெரிகிறது.

    சன்னபட்னா தொகுதியில் வெற்றி பெற்றால், அதன்பின் தற்போது அவர் வெற்றி பெற்ற தொகுதியை அண்ணனுக்கு விட்டுக்கொடுக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.

    • முடா ஊழல் குற்றச்சாட்டில் சித்தராமையா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.
    • சித்தராமையாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே செயல்பட்டு வருகிறார்கள்- டிகே சிவக்குமார்

    கர்நாடாக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையா முடா ஊழல் வழக்கில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை வலியுறுத்தி வருகின்றன. மேலும், மைசூரு நோக்கி நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சி பொதுகூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளை விமர்சனம் செய்து வருகின்றனர்.

    அவ்வாறு நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் வீடியோவை வெளியிட்டு பாஜகவும், மதசார்பற்ற கட்சியும் ஒருவருக்கொருவர் பேசியதை சுட்டிக்காட்டி டிகே சிவக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக டிகே சிவகுமார் கூறும்போது "காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் யுக்திகள் வேலை செய்யாது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சிதான் கர்நாடக மாநிலத்தில் ஆட்சி செய்யும்.

    கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டன. மக்களவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்தது.

    எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாதிகளின் கூட்டம். பழைய எதிரிகள் நண்பர்களாகிவிட்டார்கள். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் விரும்பத்தக்க பதவியை வகிப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாததால், சித்தராமையாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே செயல்பட்டு வருகிறார்கள். மக்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது தொடர்பாக பேரணி நடத்தினோம். பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டோம். பாஜக தற்போது அதை காப்பி அடிக்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்த நடைபயணம், தங்கள் பாவங்களையும், பெரும் ஊழலையும் கழுவுவதற்கான ஒரு பிராயச்சித்தம் அணிவகுப்பு

    இவ்வாறு டிகே சிவக்குமார் தெரிவித்தார்.

    • முடா முறைகேடு தொடர்பாக சித்தராமையா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.
    • விசாரணை நடத்த ஏன் உத்தரவிடக்கூடாது? பதில் அளிக்கும்படி கவர்னர் நோட்டீஸ்.

    மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (MUDA) மனைகள் ஒதுக்கியது தொடர்பான மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என அம்மாநில பாஜக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருந்த போதிலும் சித்தராமையா குற்றச்சாட்டை மறுத்து வருகிறார்.

    இதற்கிடையே முடா முறைகேடு தொடர்பாக உங்கள் மீது விசாரணை நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது?. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    இந்த நோட்டீஸ் தொடர்பாக ஆலோசனை நடத்த மந்திரிசபை கூட்டம் (Cabinet meeting) இன்று கூடியது. ஆனால் இந்த கூட்டத்தில் கர்நாடக மாநில முதல் சித்தராமையா கலந்து கொள்ளவில்லை.

    துணை முதல்வரான டி.கே. சிவக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக ஆலோசிக்க திட்டமிட்டது. மந்திரிகள் சித்தராமையா (முதல்வர்) இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர். இதனால் மந்திரிசபை கூட்டம் சித்தராமையா இல்லாமல் நடைபெற்றது என கர்நாடக மாநில மந்திரி பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

    ஆளுநர் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பான ஆலோசனையில் முதலமைச்சர் இருக்கக் கூடாது என்பதால், கலந்து கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுகொண்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

    • கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது.
    • சில தனியார் நிறுவனங்களை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறை பணியிடங்களில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மநாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    அதன்படி, கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது.

    இதற்கிடையே தனியார் துணை பணியிடங்களில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு சில தனியார் நிறுவனங்களை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    சொந்த மண்ணில் கன்னடர்களின் நலன் காக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    பண்பாடு, கலாச்சாரம் போல வேலைவாய்ப்பு விவகாரத்திலும் அரசு கவனம் செலுத்தும். இதன் காரணமாகவே வேலைவாய்ப்பு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

    • வரம்பு மீறி சொத்து சேர்த்ததாக 2020-ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
    • இதை எதிர்த்து டி.கே. சிவக்குமார் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.

    கர்நாடக மாநில துணை முதல்வராக இருக்கும் டி.கே. சிவக்குமார் வரம்பு மீறி சொத்து சேர்த்ததாக கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந்தேதி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

    2013 முதல் 2018 வரையிலான அவருடைய வருமானத்தை கணக்கில் கொள்ளும்போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது என சிபிஐ தெரிவித்தது.

    சிபிஐ-யின் இந்த வழக்குப்பதிவை எதிர்த்து டி.கே. சிவக்குமார் 2021-ல் கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் சிபிஐ விசாரணை நடத்த தடைவிதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி டி.கே. சிவக்குமார் தாக்குதல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

    இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் பீலா எம். திரிவேதி, எஸ்.சி. சர்மா அடங்கிய பெஞ்ச், "உச்சநீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என்றனர். மேலும், மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    2013 முதல் 2018 வரை டி.கே. சிவக்குமார் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கட்சியின் உயர்மட்டக்குழு என்ன முடிவு எடுத்தாலும் அதுதான் இறுதி முடிவு- சித்தராமையா.
    • யார் எந்த கோரிக்கையை வைத்தாலும், அவர்களுக்கு கட்சி தகுந்த பதில் அளிக்கும்- டிகே சிவக்குமார்.

    கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராகவும் இருந்து வருகிறார்கள்.

    மந்திரி சபையில் உள்ள சில மந்திரிகள் வீரசைவ-லிங்காயத், எஸ்சி-எஸ்டி மற்றும் சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது தெடர்பாக சித்தராமையாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "கட்சியின் உயர்மட்டக்குழு என்ன முடிவு எடுத்தாலும் அதுதான் இறுதி முடிவு" என ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார்.

    தற்போது துணை முதல்வராக இருக்கும் டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து முதல்வர் பதவியை கேட்க வாய்ப்புள்ளதாக சித்தராமையா அணி நினைக்கிறது. இதனால் அவருக்கு ஒரு செக் வைப்பதற்காக இப்படி ஒரு பரிந்துரை வெளிவந்துள்ளதாகவும், அரசு மற்றும் கடசியில் அவரின் ஆதிக்கத்திற்கு பதிலடி கொடுக்கவும் இந்த நடவடிக்கை எனக் கூறப்படுகிறது.

    சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமான மந்திரிகள் கே.என். ராஜண்ணா, ஜமீர் அகமது கான், சதீஷ் ஜர்கிகோலி மற்றும் சிலர் இந்த வார தொடக்கத்தில் மேலும் மூன்று துணை முதல்வர் கோரிக்கை வழியுறுத்தியுள்ளனர்.

    கடந்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது சித்தராமையா முதல்வராக இருப்பார். டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக இருப்பார் என காங்கிரஸ் முடிவு செய்தது.

    இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறுகையில் "நீங்கள் (ஊடகங்கள்) யாராவது ஏதாவது சொன்னால் செய்தியாக போடுங்கள். (செய்திகளில் தோன்றி) மகிழ்ச்சியாக இருப்பவர்களை நான் ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். யார் எந்த கோரிக்கையை வைத்தாலும், அவர்களுக்கு கட்சி தகுந்த பதில் அளிக்கும்" என்றார்.

    • நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
    • நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் மிகவும் தீவிரமானவை.

    நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் மாநிலங்கள், வட இந்தியாவிலும் பலத்த எதிர்ப்பும், சர்ச்சையும் கிளம்பியிருப்பது.

    மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நீட் விவகாரத்தால் வார்த்தைப்போர் ஏற்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

    மருத்துவ படிப்புகளுக்கு அந்தந்த மாநிலங்களே நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்.

    நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் மிகவும் தீவிரமானவை.

    மாநிலங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வில் பிற மாநில மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கலாம்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர், பா.ஜனதாவுக்கு வாக்களித்தனர்.
    • நேற்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உள்பட 15 எம்.எல்.ஏ.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இமாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் அனைவரும் வாக்களித்திருந்தால் அக்கட்சியின் வேட்பாளர் அபிஷேக் சிங்வி எளிதாக வெற்றி பெற்றிருப்பார்.

    ஆனால், ஆறு எம்.எல்.ஏ.-க்கள் மாறி வாக்களித்ததால் குறைந்த எம்.எல்.ஏ.-க்களை (25) கொண்ட பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    இதனால் இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்தது என பா.ஜனதா கூறியது. மேலும், சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி மேற்கொண்டது. இதனால் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று சட்டமன்றம் கூடியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட 15 எம்.எல்.ஏ.-க்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்பின் பட்ஜெட் மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை பா.ஜனதாவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் ஆறு பேர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என சபாநாயகர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    இமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நிதி மசோதாவை கொண்டு வர இருப்பதால், அனைத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-க்களும் அந்த மசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என கொறடா உத்தரவிட்டிருந்தார். 

    இந்த கொறடா உத்தரவை மீறியதாக ரஜிந்தர் ராணா, சுதிர் சர்மா, இந்தேர் தத் லகான்பால், தேவிந்தர் குமார் பூட்டோ, ரவி தாகூர் மற்றும் சேதன்யா சர்மா ஆகிய ஆறு எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்சித் தாவல் தடைசட்டத்தின் கீழ் அவர்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து. அவர்கள் மீதான உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா தெரிவித்துள்ளார்.

    • ஆறு எம்.எல்.ஏ.-க்களை பா.ஜனதா அரியானாவுக்கு அழைத்துச் சென்றுள்ளது.
    • மூத்த அரசியல் தலைவரின் மகனும், மந்திரியுமான விக்ரமாதித்யா சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரேயொரு தொகுதிக்கான மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 40 எம்.எல்.ஏ.-க்களை வைத்திருந்ததால் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் பா.ஜனதாவுக்கு மாறி வாக்களித்ததால் 25 எம்.எல்.ஏ.-க்கள் மட்டுமே வைத்துக் கொண்டு களத்தில் இறங்கிய பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    இதனால் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதேவேளையில் பா.ஜனதா இமாச்சல பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது எனக் கூறி வருகிறது. மேலும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருக்கிறது. சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான தீர்மானம் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் நடைபெற வேண்டும் என வலியுறுத்த இருக்கிறது. இது தொடர்பாக இன்று ஆளுநரை சந்தித்தனர்.

    இந்த நிலையில் சட்டமன்றம் கூடிய நிலையில் 15 பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார். இதற்கிடையே ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா அரியானா மாநிலத்திற்கு கடத்தி சென்றுள்ளதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு குற்றம்சாட்டினார்.

    இவ்வாறு சென்று கொண்டிருக்கும் நிலையில் மந்திரி சபையில் இருந்து விக்ரமாதித்யா சிங் விலகியுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வீரபத்ர சிங்கின் மகன் ஆவார்.

    இதனால் இமாச்சல பிரதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதனால் ஆட்சியை காப்பாற்ற பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. மேலும் எம்.எல்.ஏ.-க்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

    சுக்விந்தர் சிங் சுகு

    இதனால் கர்நாடக மாநில துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான டி.கே. சிவகுமாரை இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு அனுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளார். அவர் இமாச்சல பிரதேசம் சென்று கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அரியானா மாநில முன்னாள் முதல்வர் புபேந்தர் சிங் ஹூடாவும் இமாச்சல பிரதேசம் செல்ல இருக்கிறார்.

    2001-ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேஷ்முக் தலைமையிலான காங்கிரஸ் கட்சி சிக்கலை எதிர்கொண்டபோது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களை பெங்களூரு வரவழைத்து, அவர்களை உபசரித்து நெருக்கடியை தீர்த்தார். அதன்மூலம் சிக்கலை தீர்த்து வைக்கக் கூடியது தலைவர் என டி.கே. சிவக்குமார் பெயர் பெற்றார்.

    தற்போது இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் சிக்கலை தீர்த்து வைப்பார் என காங்கிரஸ் மேலிடம் நம்புகிறது.

    • கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் அமோக வெற்றி
    • டி.கே. சிவக்குமார் மட்டுமே காங்கிரசை ஆட்சியில் அமர்த்தவில்லை என மந்திரி விமர்சனம்

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை நீக்கி காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. சித்தராமையா முதல் மந்திரயாக பதவி ஏற்ற நிலையில், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

    கர்நாடகாவில் பெற்ற வெற்றி, காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா அளவில் மிகப்பெரிய உத்வேகமாக பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநில வெற்றிக்கு டி.கே. சிவக்குமாரின் உழைப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவர் மீது வருமானத்து அதிகமாக சொத்து குவித்த வழக்கு உள்ளது. இந்த வழக்கு அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில், கர்நாடக மாநில மந்திரி சதிஷ் ஜராகிகோலி வெளியிட்டுள்ள அறிக்கையில் ''சிவக்குமார் தனியாக காங்கிரஸ் கட்சியை ஆட்சி அதிகாரத்திற்கு கொணடு வரவில்லை'' எனக் கூறியிருந்தார்.

    இதுகுறித்து டி.கே. சிவக்குமாரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் பதில் அளிக்கையில் ''கட்சியில் உள்ள எந்தவொரு தனிப்பட்ட விவகாரம், அரசு தொடர்புடைய விவகாரம் குறித்து எம்.எல்.ஏ.-க்கள் முதலமைச்சர் மற்றும் என்னிடம் ஆலோசிக்க முடியும்.

    ஆனால், அவர் எந்தவொரு காரணத்திற்காகவும், மீடியா முன் பேசியிருக்கக் கூடாது. கட்சி தொண்டர்கள், நாங்கள், நீங்கள், நாட்டின் மக்கள் ஆகியோரால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. இன்று, நாளை, ஒருபோதும், என்னால்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது எனக் கூறமாட்டேன்'' என்றார்.

    • தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.
    • முழு அடைப்பு நடத்தும் முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும்.

    பெங்களூரு:

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் கன்னட அமைப்புகள் சார்பில் நாளை முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    இந்த முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இயல்பாகவே மழை உள்ளிட்ட பிற காரணங்களால் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு செல்லும். இன்னும் ஆயிரம் கனஅடி நீர் நாம் திறக்க வேண்டும். இந்த நீரை திறக்க மாற்று ஏற்பாடு செய்வோம். இனி எக்காரணம் கொண்டும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி நீர் திறக்கமாட்டோம்.

    தமிழகத்திற்கு கேட்ட அளவு நீரை திறக்க உத்தரவிட முடியாது என்று ஒழுங்காற்று குழு கூறிவிட்டது. தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்க மீண்டும் ஒரு முறை முழு அடைப்பு நடத்துவது ஏன்?. நாளை ( 29-ந் தேதி) மீண்டும் முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் வா்த்தகம் பாதிக்கும். பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் முழு அடைப்பு நடத்தும் முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×