என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கன்னிவாடி சந்தை"
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று கன்னிவாடி சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது.
- கன்னிவாடி சந்தை வாரம்ேதாறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.
குண்டடம்:
தமிழகத்தில் நடைபெறும் ஆடுகள் விற்பனை சந்தையில் திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள கன்னிவாடி சந்தையும் ஒன்றாகும். கன்னிவாடி சந்தை வாரம்ேதாறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று கன்னிவாடி சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது. அதே நேரம் ஆடுகள் வரத்து அதிகரிப்பால் விலையில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது.
இது குறித்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரி மகேந்திரன் கூறியதாவது:-
இந்த வார சந்தைக்கு மூலனூர், அரவக்குறிச்சி, தாராபுரம், பகவான் கோவில், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்குவதற்காக மேச்சேரி, கேரளா, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஆந்திரா, சென்னை, உடுமலை, பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காகவும், இறைச்சிக்காகவும் கொண்டு செல்கின்றனர்.
ஆடுகளின் வரத்து அதிகரித்திருந்ததாலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதாலும் புத்தாடைகள் போன்ற பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் வியாபாரிகள், விவசாயிகள் அதிக அளவில் ஆடுகளை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்
இதனால் கடந்த வாரங்களில் இறைச்சிக்காக வாங்கப்படும் 10 கிலோ எடையுள்ள ஒரு ஆடு ரூ.6 ஆயிரத்து 200க்கு விலை போனது. ஆனால் இந்த வாரம் ரூ.5 ஆயிரத்து 500க்கு விலைபோனது. ரூ.12 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடுகள் இந்த வாரம் ரூ.9 ஆயிரத்து 500ஆக குறைந்துவிட்டது. இதனால் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. மேலும் நேற்று நடைபெற்ற சந்தையில் சுமார் ரூ.10 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆடுகள் வரத்து அதிகமானதால் ஆடுகளின் விலை வெகுவாக குறைந்தது.
- சென்ற வாரம் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
மூலனூர் :
தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை ஆகும். இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.
இந்த வாரம் ஆடுகள் வரத்து அதிகமானதால் ஆடுகளின் விலை வெகுவாக குறைந்தது. சென்ற வாரம் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் அதே ஆடு ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த வாரம் ஆடுகளின் வரத்து அதிகமானதாலும், வியாபாரிகளின் வருகை குறைந்ததாலும் ஆடுகளின் விலை வெகுவாக குறைந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்