என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கலெக்டர் பாராட்டு"
- முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் நடைபெற்றது.
- வெற்றி பெற்ற 657 வீரர், வீராங்கனைகளும் சென்னையில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்குபெற சென்றனர்.
சேலம்:
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் நடைபெற்றது. இதில் நீச்சல், கூடைப்பந்து, வாலிபால், மேசைப்பந்து, இறகுப்பந்து, கிரிக்கெட், தடகளம், கால்பந்து, கபடி, சிலம்பம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற 657 வீரர், வீராங்கனைகளும் சென்னையில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்குபெற சென்றனர்.
இதில் முதற்கட்டமாக கடந்த 29-ந்தேதி சேலம் மாவட்டத்திலிருந்து மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பள்ளி பிரிவைச் சார்ந்த கபடி, வாலிபால் ஆண், பெண் அணிகளும், பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த சிலம்பம் ஆண், பெண் அணிகள் என 64 மாணவ, மாணவிகள் சேலத்திலிருந்து சென்னை சென்றனர்.
இதில் கல்லூரி அளவில் சுருள்வாள் வீச்சுப் பிரிவில் ஜாக்சன் வெள்ளிக் பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகை, அலங்கார வீச்சுப் பிரிவில் குமரேசன் வெள்ளிக் பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகையும்,
சுருள்வாள் வீச்சுப் பிரி வில் மல்லூர் அரசு பள்ளி யில் பயிலும் கிருஷ்ண மூர்த்தி வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகை, மேச்சேரி அரசுப் பள்ளியில் பயிலும் ஓவியா ஸ்ரீ வெண்கலப் பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை, கல்லூரிப் பிரிவில் ஜெனிபர் வெண்கலப் பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையும் பெற்று வெற்றி பெற்றனர்.
சிலம்பம் பிரிவில் சேலம் மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களைப் பெற்று வந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை மாவட்ட கலெக்டர் கார்மே கம் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் எஸ்.சிவரஞ்சன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை கலெக்டர் பழனி பாராட்டினார்.
- புத்தகப் பையினை பரிசாக வழங்கினார்.
விழுப்புரம்:
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் வாயிலாக இல்லங்களில் தங்கி 10-ம்வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படித்து அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை மாவட்ட கலெக்டர் பழனி பாராட்டி புத்தகப் பையினை பரிசாக வழங்கினார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கே.ஜி பார்கவி,பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- புத்தகத்தில் கையொப்பமிட்டு வாழ்த்து
- திட்டப்பணிகளை பார்வையிட்டார்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றிய பகு திகளில் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணி களை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டார்.
அப்போது அந்த வழியாக செல்லும்போது அகரம் ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கலெக்டர் சென்றார்.
அங்கு மாணவ-மாணவிகளிடம் திருக்குறள், வாய்ப்பாடு உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். அதில் 4-ம் வகுப்பு மாணவி. ராகவி கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறினார்.
இதையடுத்து மாணவியை கலெக்டர் வளர்மதி பாராட்டி புத்தகத்தில் தன் கையொப்பமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் பள்ளி ஆசிரியர், மாணவ மாணவிகளை அவர் பாராட்டினார்.
- கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.
- போலீஸ் அணிவகுப்பை கலெக்டர் பார்வையிட்டு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.
கடலூர்:
குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் சுத்தம் செய்யப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் காரில் வந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் காலை 8.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பை கலெக்டர் பார்வையிட்டு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருட்செ ல்வன் தலைமையில் அணி வகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறை, தீயணைப்பு துறை, ஊர்காவல்படை, தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட, சாரண-சாரணிய, செஞ்சிலுவை சங்க மாணவ- மாணவிகள் அணிவகுத்து வந்தனர். பின்னர் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 90 போலீஸ்காரர்களுக்கு முதல்-அமைச்சரின் காவலர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார். பின்னர் தியாகிகளுக்கும், மறைந்த தியாகிகளின் மனைவிகளுக்கும் கலெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை, மருத்துவம், வேளாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 183 பேருக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து வருவாய்த்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட தொழில் மைய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 35 பயனாளிகளுக்கு 2 கோடி 86 லட்சம் 35 ஆயிரம் 185 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்.
விழாவில் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- தாதனேந்தல் ஊராட்சியில் மகளிர் சுயஉதவி குழுக்களை ராமநாதபுரம் கலெக்டர் நேரில் சென்று பாராட்டினார்.
- மகளிர் குழுவை போல் ஒவ்வொரு குழுவும் அந்தந்த பகுதியில் சூழ்நிலைக்கு ஏற்ப உற்பத்தி பொருள்களை தயாரித்து விற்பனை செய்யலாம் என்றும் கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தாதனேந்தல் ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் பண்ணை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கீரை வகைகளை பொது மக்களுக்கான விற்பனையினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்து மகளிர் குழுவினை பாராட்டி இக்குழுவில் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறியதாவது:-
மகளிர் குழுவினர் ஒவ்வொரு ஊராட்சிகளும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் இருக்கும்போது பார்த்துவிட்டு பணிகள் இல்லாத இடைப்பட்ட காலங்களில் இது போல் சுய தொழில்கள் தொடங்கிட வேண்டும். நிலையான வருமானம் என்பதை நம்மால் உருவாக்க முடியும். இன்றைய காலகட்டத்தில் மக்களின் தேவைகள் அதிகரிக்கும் வண்ணம் இருந்து வருகின்றன. அதை இருந்த இடத்திலிருந்து வழங்கும் வகையில் திட்டமிட்டு செயல்படலாம். தாதனேந்தல் இணைந்த கைகள் மகளிர் குழுவை போல் ஒவ்வொரு குழுவும் அந்தந்த பகுதியில் சூழ்நிலைக்கு ஏற்ப உற்பத்தி பொருள்களை தயாரித்து விற்பனை செய்யலாம்.
அதுமட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுலாத்தலமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்க தாகும். கலை வண்ணப்பொருட்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டினார்.
- கள்ளக்கு றிச்சி மாவட்டத்தில் 27 இடங்கள் இயற்கை இடற்பாடுகளின் போது ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது.
விழுப்புரம் :
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். அவரது மகன் ராஜ்பிரியன். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவன் ராஜ்பிரியன் தோல்வி அடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். உடனே சக நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். என்றாலும் ராஜ்பிரியன் நேற்று மாலை வீட்டுக்கு வந்தார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.
சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். அப்போது ராஜ்பிரியன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ராஜ்பிரியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- பிளஸ்-2 பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்தமைக்காக மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை கலெக்டர் பாராட்டியுள்ளார்
- ஆசிரியர்களின் கடின முயற்சி மற்றும் மாணவர்களின் முழு கவன படிப்பினால் இந்த சாதனையை பெரம்பலூர் பெற்றுள்ளது
பெரம்பலூர்:
அரசு பொதுத்தேர்வில் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி விகிதத்தில் 97.95 சதவீதம் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், 10-ம் வகுப்பு தேர்வில் 97.15 சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து பெரம்பலூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3 ஆயிரத்து 933 மாணவர்களும், 3ஆயிரத்து 734 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 667 பேர் தேர்வெழுதினர். இதில் 3 ஆயிரத்து 836 மாணவர்களும், 3 ஆயிரத்து 674 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 510 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 97.95 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 4 ஆயிரத்து 186 மாணவர்களும், 3 ஆயிரத்து 704 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 890 பேர் தேர்வெழுதினர். இதில் 4 ஆயிரத்து 18 மாணவர்களும், 3 ஆயிரத்து 647 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 665 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 97.15 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இதற்கு ஆசிரியர்களின் கடின முயற்சி மற்றும் மாணவர்களின் முழு கவன படிப்பினால் இந்த சாதனையை பெரம்பலூர் பெற்றுள்ளது என மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்