என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவினாசி கோர்ட்டு"

    • வளர்மதி வழக்கு விசாரணைக்காக அவினாசி ஜே.எம்.கோர்ட்டுக்கு சென்றார்.
    • நீதிபதி சபீனா பெண்ணிற்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளியவைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    அவினாசி :

    அவினாசியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40). இவருடைய மனைவி வளர்மதி (36) ஆகியோர் வழக்கு விசாரணைக்காக அவினாசி ஜே.எம்.கோர்ட்டுக்கு சென்றனர். அப்போது அறைக்குள் சென்ற வளர்மதி திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த நீதிபதி சபீனா உடனடியாக தனது இருக்கையில் இருந்து எழுந்துவந்து அப்பெண்ணிற்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளியவைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    மயங்கி விழுந்த பெண் விசாரணைக்கு வந்தவர் என்று தெரிந்தும் உடனடியாக நீதிபதி சபீனா மனிதநேயத்துடன் உதவிய மனிதாபிமான செயலை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.

    • கோவை - சேலம் புற வழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலின் பூட்டை உடைத்து அங்கிருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள டி.வி. மற்றும் போகஸ் லைட்டை திருட்டு
    • 1 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.200 அபராதம் விதித்து தீர்ப்பு

    அவினாசி :

    கடந்த 26.1.2018-ம் ஆண்டு சேடர்பாளையம் சாய் கார்டன் பகுதியில் வீட்டு பூட்டை உடைத்து அங்கிருந்த 2 பவுன் சங்கிலி, ரூ. 45 ஆயிரம் மற்றும் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் 16.2.2018-ம் ஆண்டு கோவை சேலம் புற வழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலின் பூட்டை உடைத்து அங்கிருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள டி.வி. மற்றும் போகஸ் லைட்டை திருடி சென்ற வழக்கில் அவினாசி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சபீனா விருதுநகரை சேர்ந்த செல்வராஜ் (46) என்பவருக்கு தலா 1 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.200 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

    அவினாசியை அடுத்த பெருமாநல்லூர்வலசு பாளையத்தை சேர்ந்தவர் அம்மணியம்மாள் (வயது 53). இவர் கடந்த 25.7.2016 அன்று சாலையில் நடந்த சென்றபோது மர்ம ஆசாமி ஒருவர் அம்மணியம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 9 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றார். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளகோவில் நடுப்பாளையத்தை சேர்ந்த பிரபு என்கிற மோகன் பிரபுவை (38) கைது செய்தனர். இதையடுத்து இவர் மீதான வழக்கு அவினாசி கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் பிரபு என்கிற மோகன் பிரபுவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி சபீனா தீர்ப்பு கூறினார்.

    ×