என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அயர்லாந்து நியூசிலாந்து தொடர்"
- முதலில் ஆடிய நியூசிலாந்து 360 ரன்கள் குவித்தது.
- தொடர்ந்து ஆடிய அயர்லாந்து 359 ரன் எடுத்து மிரட்டியது.
டப்ளின்:
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் குப்தில் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 115 ரன்னில் அவுட்டானார். ஹென்றி நிகோலஸ் 79 ரன்னும், பிலிப்ஸ் 47 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 361 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிரிங் 120 ரன்னும், ஹாரி டெக்டர் 108 ரன்னும் குவித்து அசத்தினர். அடுத்து வந்த வீரர்களும் விடாது போராடினர்.
கடைசி 2 ஓவரில் அயர்லாந்து அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அயர்லாந்து அணி போராடி 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன்னில் தோற்றது.
இறுதியில், அயர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 359 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது.
ஆட்டநாயகன் விருது மார்ட்டின் குப்திலுக்கும், தொடர் நாயகன் விருது மைக்கேல் பிரேஸ்வெலுக்கும் வழங்கப்பட்டது.
எளிதில் வீழ்ந்து விடும் என நினைத்த நியூசிலாந்து அணிக்கு அயர்லாந்து வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி திணறடித்தனர்.
- அயர்லாந்து அணியில் ஹாரி டெக்டர் 113 ரன்கள் அடித்தார்.
- நியூசிலாந்து அணியில் மைக்கேல் பிரேஸ்வெல் 127 ரன்கள் குவித்தார்.
டப்ளின்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த நாட்டு அணியுடன் 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டி கொண்ட தொடரில் நியுசிலாந்து அணி விளையாடுகிறது.
இரு அணிகளுக்கும் இடையே டப்ளினில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஹாரி டெக்டர் 113 ரன்கள் குவித்தார். கர்டிஸ் கேம்பர் 43 ரன்னும், ஆண்ட் மெக்பிரைன் 39 ரன்னும் அடித்தனர்.
பின்னர் 301 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய விளையாடிய நியுஸிலாந்து அணியில் தொடக்க வீரர் மார்டின் குப்தில் 51 ரன்கள் எடுத்தார். க்ளென் பிலிப்ஸ் 38 ரன்கள் எடுத்தார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்த நிலையில், மறுபுறம் அதிரடி காட்டிய நியூசி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் 82 பந்துகளில் 127 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதனால் அந்த அணி 49.5 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்ததுடன், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
- அயர்லாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் தொடரில் டாம் லாதம் கேப்டனாக செயல்படுவார்.
- டி20 போட்டிகளில் சாட்னர் கேப்டனாக செயல்படுகிறார்.
நியூசிலாந்து அணி ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஐரோப்பா செல்ல உள்ளது. இந்த தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி வீரர்களான வில்லியம்சன், கான்வே, டிம் சவுத்தி, டிரண்ட் போல்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நடந்த முடிந்த ஐபிஎல் தொடரிலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடி கொண்டிருப்பதால் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் தொடரில் டாம் லாதம் கேப்டனாக செயல்படுவார். ஜுலை 10-ந் தேதி நடக்கும் 3 டி20 போட்டிகளில் சாட்னர் கேப்டனாக செயல்படுகிறார்.
ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக இரண்டும் டி20, 1 ஒருநாள் போட்டிகளும், நெதர்லாந்திற்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது.
3 அணிகளுக்கும் இடையேயான தொடரில் ஆல்ரவுண்டர் மைக்கெல் ரிப்பன் அறிமுகப் போட்டியில் விளையாட உள்ளார்.
நியூசிலாந்து அணி வீரர்கள் விபரம்:
டாம் லாதம் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேன் கிளீவர், ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், மார்ட்டின் கப்டில், மாட் ஹென்றி, ஆடம் மில்னே, ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, பிளேயர் டிக்னர்,
மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், மைக்கேல் ரிப்பன், பென் சியர்ஸ் ஆகியோர் அயர்லாந்து போட்டிகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணியில் இணைவார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்