search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை"

    • வஜிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
    • முகாமில் இருந்து துப்பாக்கி, வெடிமருந்து போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ராணுவம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

    இந்தநிலையில் அங்குள்ள வஜிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அவர்களது முகாமில் இருந்து துப்பாக்கி, வெடிமருந்து போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

    • குல்காம் மாவட்டத்தில் நடந்த இருவேறு தாக்குதலில் ராணுவத்தினர் 6 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர்.
    • இந்த சம்பவம் நடந்து 48 மணிநேரம் கூட ஆகாத சூழலில், ஜம்முவில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய ராணுவத்தின் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். 6 பேர் காயமடைந்து உள்ளனர்.

    கத்துவா நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் பத்னோட்டா கிராமத்தில் ராணுவத்தின் ரோந்து பணியின்போது, இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து கூடுதல் படையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    2 நாட்களுக்கு முன்பு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த இருவேறு தாக்குதலில் ராணுவத்தினர் 6 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர்.

    இந்த சம்பவம் நடந்து 48 மணிநேரம் கூட ஆகாத சூழலில், ஜம்முவில் ரோந்து சென்ற ராணுவ வீரர்களின் வாகனத்தின் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளதுடன், 6 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

    • பாதுகாப்பு படையினரை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாகிச்சூடு நடத்தினர்.
    • தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததை கண்டறிந்தனர். பாதுகாப்பு படையினரை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாகிச்சூடு நடத்தினர். இதையடுத்து பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

    இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல மற்றொரு பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரிலும் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார். பயங்கரவாதிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.





    • பயங்கரவாதிகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 10 மாதங்களில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 386 பேர் பலியாகி விட்டனர். இதனால் பயங்கரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கைபர் பக்துன்குவா மாகாணம் டேங்க் மாவட்டத்தில் உள்ள கிரி மசான் சேல் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படை வீரர்களும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.

    • ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடு மற்றும் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    • கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஏ.கே. ரகதுப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் 32 தோட்டாக்கள் ஆகியவை அடங்கும்.

    ஸ்ரீநகர்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடு மற்றும் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஜம்மு, காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை வழியாக 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திக்வார் பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதையடுத்து இந்திய ராணுவம் உஷார் ஆனது. குப்வாரா தங்தார் செக்டாரில் உள்ள டக்கேன்-அம்ரோஹி பகுதியில் ராணுவத்தினர் பயங்கரவாதிகளை சுற்றிவளைத்தனர். அப்போது நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான.

    அவனிடம் இருந்து பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஏ.கே. ரகதுப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் 32 தோட்டாக்கள் ஆகியவை அடங்கும்.

    இதேபோல் தங்தார் பகுதியில் இந்திய ராணுவம் குப்வாரா போலீசாருடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதியை சுட்டுக் கொன்றனர். அந்த பயங்கரவாதி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

    ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த சில மணி நேரத்தில் நடந்த 2-வது ஊடுருவல் முயற்சி இதுவாகும். தொடர்ந்து இந்திய ராணுவம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    • ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சல் செக்டரின் காலா வனப்பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பங்கரவாதிகளை ஜம்மு காஷ்மீர் போலீஸ் உதவியுடன் ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.

    அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    இந்நிலையில், சம்பவ இடத்தில் சோதனை நடத்தியபோது அவர்களிடம் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் போதை மருந்து பண்டல்கள், வரைபடங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கடந்த 16-ம் தேதி 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ராணுவம் நடவடிக்கை
    • ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து நுழைய முயன்றபோது சண்டை

    ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மச்சல் செக்டாரில் உள்ள காலா வனப்பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீர் போலீஸ் உதவியுடன் ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.

    அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்தத் தகவலை ஜம்மு- காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 16-ந்தேதி ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் கட்ட விசாரணையில் அவர்கள் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது.
    • சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்றனர் என தெரிய வில்லை.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவ்வப்போது திடீர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர், அவர்களை ஒழிக்க மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சர்வதேச எல்லையான குப்வாராஜுமகுந்த் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக இன்று அதிகாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படை போலீசார் அங்கு விரைந்து சென்று அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் அவர்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

    இதில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முதல் கட்ட விசாரணையில் அவர்கள் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது. அவர்கள் ஏன் சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்றனர் என தெரிய வில்லை.

    அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் நாசவேலைக்காக பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்பகுதியில் பயங்கரவாதிகள் வேறு யாரும் பதுங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    • மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
    • பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். அவர்களுக்கு இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் கைபர் பக்துங்வா மாகாணம் கோத் ஆசாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    இதனால் பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். அவர்களுக்கு இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பாதுகாப்பு படையினர் ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் அனைவரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதோடு அப்பாவி பொதுமக்களை கொல்வது போன்ற குற்றங்களையும் செய்து வந்தவர்கள் என பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

    • ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் கொட்டத்தை அடக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் இருந்து வெடிபொருட்கள், ஏ.கே. 47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் கொட்டத்தை அடக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்று காலை பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் சுட்டனர். இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் பெயர் சகீர் மஜீத்,மற்றும் அகமது என்பது தெரியவந்தது. இருவரும் லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் இருந்து வெடிபொருட்கள், ஏ.கே. 47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் நேற்று 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று மேலும் 2 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தாக்குதலின் போது பயங்கரவாதிகள் 2 பைகளில் வெடிபொருட்களை ஓட்டலுக்குள் எடுத்துச் சென்றுள்ளனர்.
    • சீனர்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷார்-இ-நவ் பகுதியில் உள்ள ஓட்டல் அருகே பயங்கரவாத கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது. தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை சுட்டுக் கொன்றனர்.

    சீனர்கள் வழக்கமாக தங்கும் விடுதி அருகே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும் போது, 'தாக்குதலின் போது பயங்கரவாதிகள் 2 பைகளில் வெடிபொருட்களை ஓட்டலுக்குள் எடுத்துச் சென்றுள்ளனர். சீனர்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த தலிபான் அதிகாரிகள் மீதும் கையெறி குண்டுகளை வீசி தாக்கி உள்ளனர்.

    ஓட்டலில் தங்கி இருந்த வெளிநாட்டினர் பயத்தில் அலறினர். தப்பிக்க நினைத்து பால்கனியில் இருந்து குதித்த 2 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என்றார்.

    இந்த பயங்கரவாத தாக்குதல் சீன தூதர் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு மந்திரியுடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்திய மறுநாள் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள துஜ்ஜன் பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
    • அதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒருவன் ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மஜித் நசீர் என்பது தெரிய வந்தது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் பாரமுல்லா துலிபால் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

    அதேபோல் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள துஜ்ஜன் பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

    அதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒருவன் ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மஜித் நசீர் என்பது தெரிய வந்தது.

    இவன் சில நாட்களுக்கு முன் சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்புடையவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×