search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவசக்தி"

    • இந்த பூ அபூர்வ நறுமணம் கொண்டவை.
    • இம்மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தூர சுற்றளவுக்கு நறுமணம் வீசும்.

    சிவபெருமானுக்கு உகந்தது குங்கிலிய மலர் ஆகும். அது சிவராத்திரியில் மட்டுமே பூக்கும் என்பதும் ஆச்சரியமானது.

    மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம்.

    இந்த மரத்தில் சால் மற்றும் ஜலரி எனும் இரு வகைகள் உள்ளன.

    ஜலரி மரங்களில்தான் சிவராத்திரியில் மட்டும் குங்கிலியப் பூக்கள் அபூர்வமாகப் பூக்கின்றன.

    சிவராத்திரி நாட்களில் பூப்பதால் தெய்வத்தன்மை கொண்டதாக விளங்கும் இப்பூக்களை சிவனுக்கு மாலையாகப் படைக்கும் மலை கிராம மக்கள், சிவனின் மலர் பூக்கும் மரம் எனக் கருதி, மறந்தும் அவற்றை கூட வெட்டுவதில்லை.

    கன்னடத்தில் குங்கிலிய மரத்தை "தளி" என அழைப்பர்.

    இப்பெயரிலேயே ஹோசூர் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ஒரு இடம் உள்ளது.

    இதன் அருகிலுள்ள தேவர் பெட்டா மலைப்பகுதியில் வருடந்தோறும் சிவராத்திரியின் போது குங்கிலியப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன! இந்த பூ அபூர்வ நறுமணம் கொண்டவை.

    இம்மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தூர சுற்றளவுக்கு நறுமணம் வீசும்.

    சிவராத்திரியில் பூக்கும் இந்த அதிசயப் பூக்களைக் காணவும், அதன் மணத்தை நுகரவுமே சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் தேவர் பெட்டா மலைப்பகுதிக்கு வந்து செல்வதுண்டு.

    • இறைவன் எடுக்கும் மேனி போகி, யோகி, வேகி என்று மூன்று வகைப்படும்.
    • இதில் போகம் என்பது இன விருத்தியைக்குறிக்கும்.

    இறைவன் எடுக்கும் மேனி போகி, யோகி, வேகி என்று மூன்று வகைப்படும்.

    இதில் போகம் என்பது இன விருத்தியைக்குறிக்கும். உலகில் உள்ள 84 லட்சம் ஜீவன்களுக்கும் இறைவன் இந்த சக்தியை கொடுத்துள்ளான்.

    சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதின் அடிப்படையில் சிவசக்தி சங்கமத்தால், இந்த உலகில் அனைத்தும் இயங்குகின்றன.

    இறைவன் போக வடிவத்தில், அந்த தத்துவத்தில் இல்லாமல் போனால் உலகத்து உயிர்கள் எதுவும் போக வாழ்க்கை வாழ இயலாது.

    இதை கருத்தில் கொண்டே ஆலயங்களில் இறைவனுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கும் வைபவத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.

    அதோடு அந்த திருக்கல்யாணத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற ஆகம விதிகளையும் வகுத்து தந்துள்ளனர்.

    நமது பெற்றோர் திருமணத்தை நாம் காண முடிவதில்லை.

    என்றாலும் சஷ்டியப்பூர்த்தி விழா மூலம் பெற்றோர் திருமணத்தை மகன்களும் மகள்களும் கண்குளிர கண்டுகளிக்க முடிகிறது.

    அது போல இறைவனது திருக்கல்யாணத்தை ஆண்டுக்கு ஒரு தடவை நடத்தி அவனது அருளை பக்தர்கள் பெற்று மகிழ்கிறார்கள்.

    ஒரு இடத்தில் புதிதாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினால், இறைவன், இறைவியின் திருக்கல்யாணத்தையும் நடத்துவார்கள்.

    நம் முன்னோர்கள் இதை ஒரு மரபாகவே வைத்திருந்தனர்.

    ஆனால் கும்பாபிஷேகம் நடத்தும் போது செய்யப்படும் திருக்கல்யாணமும், ஆண்டுக்கு ஒரு தடவை நடத்தும் திருக்கல்யாணமும் வேறு, வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

    • சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது.
    • எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும்.

    அம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு. "முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே" என்கிறார் அபிராமிபட்டார்.

    கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே.

    சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது.

    எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும்.

    வீட்டில் தினமும் காலை, மாலை இரு வேளையும் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி, அரளி ஆகிய மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம்.

    குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்பிகையை பூஜிக்க மிகவும் ஏற்ற தினங்களாகும். அதிலும் முறைப்படி, பயபக்தியுடன் அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம்.

    வேதங்கள் வகுத்தபடி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமி பட்டார்.

    லோக மாதாவான பராசக்திக்கு நாம் எல்லாருமே பிள்ளைகள் தான். நம் மீது கருணை, அன்பு காட்டி, நம்மையெல்லாம் பக்குவப் படுத்தி அவள் வளர்த்துள்ளாள்.

    • இதைத்தான் மாணிக்க வாசகர் இறைவனது தொன்மைக் கோலம் என்றார்.
    • முதல்வர் என்றார் சைவர் அருணந்தி சிவாச்சாரியார்.

    ஆண், பெண் கருத்து வேறுபாட்டைக்களைந்து பரஸ்வரம் அன்பு பாராட்ட வேண்டும் என்ற இல்லற தத்துவத்தை எடுத்துரைக்கும் இந்த அரிதான வடிவை திருச்செங்கோடு சிவஸ்தலத்தில் காணமுடியும்.

    இதைத்தான் மாணிக்க வாசகர் இறைவனது தொன்மைக் கோலம் என்றார். முதல்வர் என்றார் சைவர் அருணந்தி சிவாச்சாரியார். பெண்ணை துரு திறன் ஆகின்றது.

    அவ்ஷருவத்தன்னுள் அடக்கி சாக்கினும் சுரக்கும் என்று புறநானூறு எடுத்துரைக்கின்றது.

    நீலமேனி வாலிழை பாகத்து

    ஒருவன் இருதான் நிழற்கீழ்

    முவகை உலகும் முகழ்த்தன முறையே என ஐங்குறு நூறு சிறப்பிக்கின்றது.

    சங்க இலக்கியங்களிலிருந்து சந்தப்பாடல், வடநூலாரின் துதிகள் போற்றும் மாதொருபாகனை மகாசிவராத்திரி நாளில் நினைப்போம் நலம் பெருக வாழ்வோம்.

    மாதொருபாகன் வணக்கத்துதி:

    திங்கள் தோன்றிய தேவனே உன்னோடு

    பங்காக வந்தவன் சக்தி! நவங்கள்

    எங்கெழும் படியரு உருவிளைச் காட்ட

    எங்ஙனம் தவம் செய்தோமோ ஆதிசிவனே!

    • உமையை அருகில் நிறுத்தி ஆட்கொண்டவர் உமையருபாகன்.
    • திருமந்திரத்தில் குண்டலக்காதி என்று பாதி பெண் வடிவை இறைவன் ஏற்ற முறையைத் திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

    பாதித்திருமேனி பெண்ணுருவாக விளங்கும் அர்த்தநாரீஸ்வரருக்கும் பாதித்திருமேனிய பராசக்தியைக் கொண்டு அருள்புரிந்த உருவிற்கும் வேறுபாடுகள் உண்டு.

    உமையை அருகில் நிறுத்தி ஆட்கொண்டவர் உமையருபாகன்.

    பரப்பிரம்மாகத் தெரியும் அர்த்தநாரீஸ்வரக் கோலத்தின் திருஉருவங்கள் பக்தர்களது மனதில்

    மெய்யான கடவுள் பற்றிய மெய்ஞானத்தையும், முழுமையான விஞ்ஞானத்தையும், ஆண், பெண் வேறுபாடு இல்லாத சீரிய சமுதாயத்தையும்

    சிறந்த நாகரீகம் கொண்ட அரிய கலை உணர்வையும், மறுபடியும் வந்து பிறவாமல் கடவுளோடு சேர்ந்து வாழும் முதிர்ந்த முக்தி நிலையையும்

    தெளிவுபடுத்தும் அற்புத வடிவமாக உள்ளன என்பது உண்மையே.

    இத்திருமேனிகள் ஸ்ரீசைவம் மல்லிகார்ஜுனர் திருக்கோவில், திருக்கண்டியூர் வீரட்டேஸ்வரர் கோவில் திருவையாறு, திருவேதிக்குடி ஆகிய தலங்களில் உள்ளன.

    திருமந்திரத்தில் குண்டலக்காதி என்று பாதி பெண் வடிவை இறைவன் ஏற்ற முறையைத் திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

    • உமையரு பாகர் என்பவர் வளப்பாகத்தில் சிவந்த நிறமும், இடது பாகத்தில் நீலநிறமும், நான்கு திருக்கரங்களும் கொண்டவர்.
    • தெய்வப்புலவராகிய மாணிக்கவாசகர் அர்த்தநாரீச உருவைக் காஞ்சிபுரத்தில்தான் கண்டு தரிசித்தார்.

    உமையரு பாகர் என்பவர் வளப்பாகத்தில் சிவந்த நிறமும், இடது பாகத்தில் நீலநிறமும், நான்கு திருக்கரங்களும் கொண்டவர்.

    நந்தி தேவரது அம்சமாக விளங்கும் மாணிக்க வாசகப்பெருமான் இந்த உருவத்தைக் கண்டு.

    உமையரு பாகம் ஆதாய எங்கள் பிராட்டியும்

    எம்கோனும் போற்றிசைந்த என ஆனந்தம் அடைகிறார் ஞான சம்மந்தப்பெருமான்.

    தோடுடைய செவியன் என்று அர்த்தநாரீஸ்வரையும், வேயுறு தோனியங்கள் என்று உமையோரு பாகனையும் பாடி உள்ளார்.

    ஆச்சான்புரத்து மண்ணில் திருஞான சம்மந்தருக்குக் தங்கக் கிண்ணித்தில் பால் சாதம் அளித்து ஆட்கொண்ட அருட்தன்மையை சம்மந்தர் தேவாரம் மிக அருமையாகத் தமிழ்ச்சுவையோடு காட்டுவதைப் பாருங்கள்.

    தோடுடைய செவியென் விடையேறி

    பொற்கிண்ணத்து அழகில் பொல்லாது எனத்

    தாதையர் முனிவிறத்தான் என்ன ஆண்டவன்

    தோலும் துகிலும் காட்டித்தொண்டு ஆண்பீர்.

    இறைவனைக் கண்டுபாடிய முழு முதல் தெய்வப்புலவராகிய மாணிக்கவாசகர் அர்த்தநாரீச உருவைக் காஞ்சிபுரத்தில்தான் கண்டு தரிசித்தார்.

    பட்டினத்தடிகன் இந்தத்திருக்கோலத்தை மிக விளக்கத்துடன் பாடிப்போற்றி உள்ளார். திருமுறைப்பாடல்கள் யாவும் அர்த்தநாரீஸ்வரரையும், உமைபாகனையும் அழகுற வேறுபடுத்தி காட்டுவதை அறியலாம்.

    • அர்த்தநாரீஸ்வரர் தன் இடது பாகத்திலிருந்த பாரசக்தியைத் தோற்றுவித்து வீரத்திற்கு அதிதேவதையாக ஆக்கி விட்டார்.
    • அவர் தோற்றத்தில் மயங்கிய தேவி அம்மையப்பனின் பெண் உரு வைப்போன்று இடப்பாகத்தில் இடம் பெற விரும்பினார்.

    தொண்டை நாட்டுத்தலங்களில் லிங்கோற்பவரைப் போன்று சோழ நாட்டுத் திருத்தலங்களில் மாதொரு பாகன் விளங்குகிறார்.

    அர்த்தநாரீஸ்வரர் தன் இடது பாகத்திலிருந்த பாரசக்தியைத் தோற்றுவித்து வீரத்திற்கு அதிதேவதையாக ஆக்கி விட்டார்.

    அவர் தோற்றத்தில் மயங்கிய தேவி அம்மையப்பனின் பெண் உரு வைப்போன்று இடப்பாகத்தில் இடம் பெற விரும்பினார்.

    ஒரு காலகட்டத்தில் தட்சனுக்கு மகளாகப் பிறந்து வளர்ந்த பின், பரமனை மணம்புரிந்த பிறகும், பிறந்த வீட்டுப்பாசத்தினால் கட்டுண்டு இறைவனை விட்டுப்பிரிய நேர்ந்தது.

    தந்தை நடத்திய யாகத்தின் தீயில் விழுந்து மாண்டு போன பிறகு மறுபிறவி எடுத்து வந்த தேவி மீண்டும் பரம்பொருளையே திருமணம் செய்து கொண்டு பல தலங்களில் தவமும் சிவபூஜையும் செய்து ஆசார நியமங்களோடு பரமனை துதித்தாள்.

    இதனால் பரமேஸ்வரன் தன் இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டு அருள்புரிந்தார்.

    பராசக்தியைத் தனது பாதித்திருமேனியில் ஏற்றுக்கொண்ட இறைத்திருமேனியருக்கே உமைபாகன், சக்திபாகன், அர்த்த சக்தீஸ்வரர், தேவிபாகன், காயாரோகண ஈஸ்வரர் என்ற திருப்பெயர்கள் பூலோக பக்தர்களால் மட்டுமின்றி, தேவன் பெருமக்களாலும் கூறப்பட்டன. 

    • மாதொரு பாகனாம் அர்த்தநாரீவரர் தோலும் உடையும் உடைய இறைவன்.
    • திருநீறும் சந்தனமும் பூசி, சூலமும் மாமுவும் கிளியும் வளையலும் கொண்டவர்.

    மாணிக்க வாசக சுவாமிகள் பரமசிவனின் அத்தனை வடிவங்களையும்,

    பெண் ஆண் அலி எனும் பெற்றியன்

    பெண்டிர் ஆண் அலி என்று அறியன்கிலை

    என்று போற்றுகிறார்.

    பாகம் பெண்ணுக்கு ஆனாய் போற்றி என்று பாடிப்பரவுகிறார்.

    மாதொரு பாகனாம் அர்த்தநாரீவரர் தோலும் உடையும் உடைய இறைவன்.

    திருநீறும் சந்தனமும் பூசி, சூலமும் மாமுவும் கிளியும் வளையலும் கொண்டவர்.

    ஆண் பாகம், பெண் பாகங்களில் தலா இரண்டு கரங்களாகி நான்கு திருக்கரங்களோடு நந்தி வாகனத்துடன் ஏட்டி நின்றவராய் ஆண் பெண் அன்பினை உணர்த்துகிறார்.

    இந்த உருவங்கள் யாவும் காவிரிக் கரைத்தலங்களில் லிங்க உருவில் எழுந்தருளும் இறைவன் அருகே கருவறைச்சுற்றில் பின்புறம் அர்த்தநாரீஸ்வரர் தோன்றுகிறார்.

    • இவற்றில் சிவன் என்பது ஆண் வடிவம் எனவும், தாயுமானவன் என்பது பெண் வடிவம்.
    • அர்த்தநாரீவரர் என்பது ஆண்பெண் கலந்த அலி வடிவம்.

    அர்த்தநாரீஸ்வரன் என்பதற்கு தன் உடலில் பாதி பெண்ணுருவாகிய இறைவன் என்று பொருள்.

    தூயதமிழில் பெண்ணொரு பாகன். மாது பாதியின், தோடுடைய செவியன், அம்மையப்பன் என்று அழைக்கப்படுகிறார்.

    இது பரம்பொருளை சுட்டிக்காட்ட முடியாத அலிவடிவம் என்று கூடச் சொல்லலாம்.

    இன்னது என அறிய முடியாத பிறப்பு வளர்ப்பைத் கடந்த சிறந்ததான தூய செம்பொருளே பரமசிவம்.

    பரமாத்மா, ஜிவாத்மா போன்ற ஆன்மாக்களது நன்மைக்காக பல வடிவங்களில் வெளிப்பட்டு அருள்கின்றது.

    இவற்றில் சிவன் என்பது ஆண் வடிவம் எனவும், தாயுமானவன் என்பது பெண் வடிவம்.

    அர்த்தநாரீவரர் என்பது ஆண்பெண் கலந்த அலி வடிவம்.

    லிங்கம் என்பது அங்கமே இல்லாத அரும் பொருள் வடிவம் என்று அழைக்கப்படுகிறது.

    • சிவம் என்ற சொல்லுக்கு “மங்களமானது” என்று பொருள்.
    • சிவன்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார்.

    சிவம் என்ற சொல்லுக்கு "மங்களமானது" என்று பொருள்.

    சிவன்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார்.

    சிவபெருமானை காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும். நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும். மாலையில் தரிசிக்க - பாவம் அகலும். அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.

    படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது.

    அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்றுவகையான சிவ வழிபாட்டு முறையில் உருவ வழிபாடும் சைவர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

    சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா, இலங்கை, நேபாளம் உட்பட பல நாடுகளில் கோவில்கள் பல உண்டு.

    ஜோதி லிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள், பஞ்சபூத சிவத்தலங்கள், ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள், ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள்,சப்த விடங்க சிவத்தலங்கள், முக்தி தரவல்ல சிவத்தலங்கள், தமிழகத்தின் நவ கைலாயங்கள் (சிவதலங்கள்), தேவாரப் பாடல் பெற்ற சிவதலங்கள், அட்டவீரட்டானக் கோவில்கள் என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    மகாசிவராத்திரி, யோகசிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ஷிய சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகைகளாக கொண்டாடப்படும் சிவராத்திரி திருவிழா சைவர்களின் முக்கிய விழாவாகும்.

    மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி நாளை மகா சிவராத்திரி என்று அழைக்கின்றார்கள்.

    • விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெறவேண்டும்.
    • அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும்.

    சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று.

    அதிகாலையில் நீராடி திருநீறும் ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூஜை செய்து திரு ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதவேண்டும்.

    பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். மாலையில் மீண்டும் நீராடி சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.

    முடியுமானால் நெய்விளக்கு ஏற்றி மலரால் அர்ச்சனை செய்து உள்ளம் உருகி தேவாரம் மற்றும் திருவாசக பாடல்களை பாடி துதி செய்து வலம் வந்து அஷ்டாங்க வணக்கம் புரிந்து வழிபாடு செய்ய வேண்டும்.

    சிவராத்திரி அன்று இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும்.

    சிவபூஜை செய்ய இயலாதவர்கள் நான்கு காலங்களிலும் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு தரிசிக்க வேண்டும்.

    நிரம்பிய அன்புடன் திரு ஐந்தெழுத்து ஓதுதல் இன்றியமையாதது.

    மறுநாள் காலை நீராடி சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

    இப்படி விரதம் இருந்தவர்களின் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து சாம்பவாகும்.

    தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும்.

    சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர். அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார்.

    கோவிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும்.

    கொடி மரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி விநாயகரை ஒரு முறையும் சிவபெருமானை மூன்று முறையும், அம்பிகையை நான்கு முறையும் வலம் வரவேண்டும்.

    வழிபடும்போது மனம் இறைவன் மீது மட்டுமே இருக்க வேண்டும்.

    விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெறவேண்டும்.

    அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும்.

    சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது. சிவலிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் இடையே போகக்கூடாது.

    கோவிலில் பிரசாதங்களை சாப்பிட்டு விட்டு தூண்களில் துடைப்பது தவறாகும்.

    வழிபாடு முடிந்த பிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும்.

    அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்திரப் பாடல்களை பாடவேண்டும். கோவிலுக்கு செல்வோர் முக்கியமாக விளக்குகளில் எண்ணைய் ஊற்ற வேண்டும்.

    இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன், அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும், லட்சுமியின் அனுகிரகமும் உண்டாகும்.

    • துலாம் ராசிக்காரர்கள் பசு மாட்டு பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
    • கும்பம் ராசிக்காரர்கள் இளநீர் அல்லது கடுகு எண்ணை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    மேஷம் ராசிக்காரர்கள் சிவராத்திரி அன்று வெல்லம் கலந்த நீரை கொண்டு சிவலிங்கத்திற்கு படைத்து சிவபஞ்சாட்சர மந்திரத்தை சொல்ல வேண்டும்.

    ரிஷபம் ராசிக்காரர்கள் தயிரை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    மிதுனம் ராசிக்காரர்கள் கறும்பு சாறு கொண்டு அபிஷகம் செய்ய வேண்டும்.

    கடகம் ராசிக்காரர்கள் சர்க்கரை சேர்த்த பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

    சிம்மம் ராசிக்காரர்கள் சிவப்பு சந்தனம் கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    கன்னி ராசிக்காரர்கள் வெறும் பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    துலாம் ராசிக்காரர்கள் பசு மாட்டு பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    விருச்சிகம் ராசிக்கார்கள் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    தனுசு ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்து பஞ்சாராட்ர மந்திரத்தை படித்தால் இன்னல்கள் நீங்கும்.

    மகரம் ராசிக்காரர்கள் நல்லெண்ணையால் அபிஷேகம் செய்து வில்வ பழத்தை படைத்து வழிபட வேண்டும்.

    கும்பம் ராசிக்காரர்கள் இளநீர் அல்லது கடுகு எண்ணை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

    மீனம் ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    ×