search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்"

    • பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந்தேதி காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது
    • விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :

    பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந்தேதி காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரியலூரில், விவசாயிகளுக்கு ஜூன் மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
    • கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிப்பதாவது.

    அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஜூன் மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

    கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம்.

    மேலும், கொரோனா காலமாக இருப்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும்போது முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். மேலும் கூட்டத்தில் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×