என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதில் ரஷீத்"

    • டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
    • அப்போட்டியில் 18- வது ஓவரை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான ஆதில் ரஷீத் பந்து வீசினார்.

    டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. ஜூன் 8 ஆம் தேதி ஆஸ்திரேலயா மற்றும் இங்கிலாந்து இடையேயான போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.

    அப்போட்டியில் 18- வது ஓவரை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான ஆதில் ரஷீத் பந்து வீசினார். ஆனால் அப்பந்து டெட் பாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் அப்பந்தை தவிர்த்தார். ஆனால் அம்பயர் நித்தின் மேனன் அப்பந்தை டெட் பால் என அறிவிக்கவில்லை.

    இதனால் கோபமுற்ற வேட் அம்பயரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டார். கிரிக்கெட் விதிமுறைகளை மீறி அவதூராக பேசி அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் ஐ.சி.சி. சார்பில் ஆஸ்திரேலயா வீரர் வேட் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக அம்பயர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். எனினும், இந்த சம்பவத்தில் மேத்யூ வேட் தனக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மேத்யூ வேட்-க்கு இரண்டு டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டது.மேலும் தான் அம்பயரிடம் அவ்வாறு பேசியது தவறுதான் என்று ஒப்புக்கொண்டார்.

    • வருண் சக்கரவர்த்தி ஒருவரே பந்து வீச்சில் மிகவும் கடினமாக உழைத்துள்ளார்.
    • இனிவரும் போட்டியில் ஷமி சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

    3- வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து முதல் வெற்றியை பதிவு செய்தது

    குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 51 ரன்களும் லிவிங்ஸ்டன் 43 ரன்களும் எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி 24 ரன் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 26 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 40 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டும், மார்க் வுட், ஆதில் ரஷீத் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 127 ரன்னில் 8 விக்கெட்டை இழந்தது. இதை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம். 171 ரன்கள் வரை சென்றது மிகையானது. வருண் சக்கரவர்த்தி ஒருவரே பந்து வீச்சில் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். அவர் நேர்த்தியுடன் பந்து வீசுவது நல்ல பலனை கொடுக்கிறது. இனிவரும் போட்டியில் ஷமி சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்

    இங்கிலாந்து அணியில் ஆதில் ரஷீத் மிக சிறப்பாக பந்துவீசினார். எங்களை ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யவே ஆதில் ரஷீத் அனுமதிக்கவில்லை. அதனால்தான் அவர் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளராக இருக்கிறார் என்று தெரிவித்தார்.

    • இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பை மாட் பார்கின்சன் பெறுகிறார்.
    • டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக ஆதில் ரஷீத் அறிவித்தார்.

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 1 டெஸ்ட் மற்றும் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டெஸ்ட் போட்டி ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. அடுத்தப்படியாக டி20 அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

    இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் விலகியுள்ளார்.

    சுழற்பந்து வீச்சாளரான ஆதில் ரஷீத் ஒரு மூஸ்லிம் ஆவார். அவர் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதால் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார். ரஷீத் விளையாடத நிலையில் மாட் பார்கின்சன் இந்தியாவுக்கு எதிரான ஒயிட்பால் தொடரில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவார்.

    ×