என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை உணவுமுறை"

    • ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட பால் கொடுக்கலாம்.
    • குழந்தைக்கு செயற்கை பால் கொடுக்க வேண்டாம்.

    குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாத காலத்துக்கு வெறும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. 6 முதல் 12 மாதக் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து பிற உணவுகளையும் பழக்க ஆரம்பிக்கலாம்.

    தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டிய பருவத்தில், ஒருவேளை தாய்க்கு போதிய அளவு பால் சுரப்பு இல்லாவிட்டால் மருத்துவரை ஆலோசித்தே முடிவு செய்ய வேண்டும். நீங்களாக குழந்தைக்கு செயற்கை பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டாம்.

    ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட பால் கொடுக்க ஆரம்பிக்கலாம். 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு முழு கொழுப்புச்சத்துள்ள பால் கொடுக்கலாம்.

    பசும்பால் கொடுப்பதாக இருந்தால் குழந்தைக்கு ஒரு வயது முடிந்த பிறகுதான் தொடங்க வேண்டும். ஆவின் பால் கொடுப்பதாக இருந்தால் அதில் ஆரஞ்சு நிற பாக்கெட்டில் வரும் பால் குழந்தைகளுக்கு ஏற்றது. அதில் ஃபுல் க்ரீம் இருக்கும். அதில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே காய்ச்சி ஆறவைத்துக் கொடுக்கலாம்.

    குழந்தைக்கு ஒரு நாளைக்கு 400 மில்லி அளவு வரை பால் கொடுக்கலாம். அந்த அளவைத் தாண்டும்போது குழந்தைக்கு மலச்சிக்கல் வர வாய்ப்புண்டு. இது 5 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பொருந்தும். அந்த வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு ஆவினின் பச்சை நிற பாக்கெட் பால், அதன் பிறகு, நீல நிற பாக்கெட் என மாற்றலாம்.

    • கால்சியம் மற்றும் புரதத்திற்கு ஒரு சிறந்த ஆதாரமாக தயிர் உள்ளது.
    • அக்ரூட் பருப்புகள் சிறந்த புரத சிற்றுண்டி ஆகும்.

    சிறு குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் 10 உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

    1. பழங்கள் : பழங்களில் குழந்தைகளுக்கான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் பழங்களில் நார்ச்சத்துகளும் இருக் கின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு ஸ்ட்ராபெர்ரி, முலாம்பழம், கிவிப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்றவை மிகவும் சிறந்த பழங்களாகும்.

    2. பால் : பால் பொருட்களில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. பாலிலுள்ள கால்சியம், குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்கவும், அதே நேரத்தில் புரதம், மூளைத் திசுக்களை உருவாக்கவும் உதவுகிறது.

    3. தயிர் : கால்சியம் மற்றும் புரதத்திற்கு ஒரு சிறந்த ஆதாரமாக தயிர் உள்ளது. இந்த தயிர், குழந்தைகளுக்கு வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பெரிதும் உதவுகிறது.

    4. முட்டை : முட்டையில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், முட்ைடயில் கால்சியம் மற்றும் அவற்றை உடலில் உறிஞ்சுவதற்கு உதவும் வைட்டமின் டி போன்றவை நிறைந்துள்ளது. எனவே முட்டையை காலை வேளையில் கொடுத்தால், குழந்தைகளுக்கு நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும்.

    5. பசலைக் கீரை : பசலைக் கீரையில் எலும்புகள் மற்றும் மூளைக்கு தேவையான சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ, சி போன்றவை நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருளை குழந்தைக்கு கொடுத்தால் மிகவும் நல்லது.

    6. முட்டைக்கோஸ் : குறுக்குவெட்டு தோற்றம் கொண்ட காய்கறியான முட்டைக்கோஸ், செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதனை குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவை குழந்தைகளை நோய்கள் எளிதில் தாக்காதவாறு பாதுகாக்கும். இந்த காய்கறியானது அப்படியே தின்பதற்கும் மற்றும் அதன் மென்மையான சுவை தன்மையினால் பல உணவுகளில் பச்சையாக சேர்த்தும் கொடுக்கலாம்.

    7. முழு தானியங்கள் : முழு தானியங்களாலான உணவுகளில் ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின் பி, டி மற்றும் கால்சியம் நிறைந்து காணப்படுகிறது. எனவே தானிய வகை உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுத்தால், குழந்தைகளை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

    8. ஓட்ஸ் : எந்த குழந்தைகள் ஓட்ஸ் சாப்பிடுகிறார்களோ, அந்த குழந்தைகளுக்கு கவனக்குறைவு நீங்கி, படிப்பில் ஆர்வத்துடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. ஓட்ஸ் மெதுவாக செரிமானமடைவதோடு, நிலையான ஆற்றலை குழந்தைகளுக்கு வழங்கும்.

    9. நட்ஸ் : நட்ஸ்களில் நல்ல கொழுப்புகள் அதிகம். அதனை குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவை உடலின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக நட்ஸில் பேரீச்சம்பழம் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள்.

    10. அக்ரூட் : அக்ரூட் பருப்புகள் சிறந்த புரத சிற்றுண்டி ஆகும். இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது குழந்தைகளின் மூளை செயல்பாடுகளை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைக்கிறது.

    • நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து அடிக்கடி சளி பிடிக்கும்.
    • குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுக்கலாம்.

    குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். சரியாக சாப்பிடவும் மாட்டார்கள். குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து அடிக்கடி சளி பிடிக்கும். ஆகவே குழந்தைகள் பசி எடுத்து சாப்பிட பஞ்ச தீபாக்கினி லேகியம் கால் முதல் அரை டீ ஸ்பூன் காலை, இரவு இருவேளை கொடுக்கவும். இது பசியை தூண்டும், நல்ல சீரணமுண்டாகும். அதுபோல, நெல்லிக்காய் லேகியம் அரை முதல் ஒரு டீஸ்பூன் காலை, இரவு கொடுக்க வேண்டும். இதிலுள்ள வைட்டமின் சி, கால்சியம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

    இவை தவிர பொதுவாக, திரிபலா சூரணம் குழந்தைகளுக்கு 200-500 மி.கி. அளவில் கொடுக்கலாம், இரவு வேளையில் கொடுப்பது நல்லது. இதனால் பக்க விளைவுகள் இல்லை. குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுக்கலாம். அன்றைக்கு வெந்நீரில் குளிக்க வைப்பது நல்லது.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • உலர் திராட்சையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • குழந்தைகளுக்கு திராட்சை மிகவும் பிடிக்கும்.

    உலர் பழங்களில் அனைவருக்கும் பிடித்தமானது உலர் திராட்சை. இவை குழந்தைகளுக்கு செய்யும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

    உணவுகளிலிருந்து பெற முடியாத அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உலர்திராட்சை மூலம் குழந்தைகளுக்கு கொடுக்க முடியும். குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுப்பது அவர்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

    உலர் திராட்சையில் அதிக அளவு கலோரி, குளுக்கொஸ் மற்றும் பிரக்டோஸ் கொண்டுள்ளது. இது எடையை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் குழந்தையின் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    குழந்தைக்கு உலர் திராட்சை கொடுப்பதால் நினைவாற்றல் மேம்படும். மூளைக்கு ஊட்டமளிக்கும். செரிமானத்தை ஊக்குவிக்கும்.

    காய்ச்சலின் போது உலர்ந்த திராட்சை ஊறவைத்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம். இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.

    உலர் திராட்சையை குழந்தைகளுக்கு எப்போது கொடுக்கலாம்?

    குழந்தைகள் உணவை மெல்ல தொடங்கும் போது அல்லது 8 மாத காலத்துக்கு பிறகு உலர் திராட்சையை சாப்பிட கொடுக்கலாம். சிறிய குழந்தைக்கு கொடுக்கும் போது உலர் திராட்சையை ஊறவைத்து கூழ் போல் மசித்து கொடுக்கலாம்.

    நாள் ஒன்றுக்கு 1 டீஸ்பூன் அளவு சாறு கொடுக்கலாம். குழந்தைக்கு உலர் திராட்சை கொடுக்கும் போது ஒவ்வாமை உண்டாகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

    • ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2 லட்சம் பேர் இந்தியாவில் மரணம் அடைகிறார்கள்.
    • ஒட்டுமொத்த மக்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள்.

    இந்தியாவுக்கு 'இளமையான நாடு' என்று பெயர் இருக்கிறது. மக்கள் தொகையை பொறுத்தவரை இந்தியாவுக்கு சாதகமான நிலைதான் உள்ளது. 8 முதல் 24 வயதுக்குள் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது, சீனாவை விட இந்தியா இளமையாகத்தான் இருக்கிறது. இது மகிழ்ச்சி தந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 4 லட்சம் குழந்தைகள், பிறந்த 24 மணி நேரத்துக்குள் இறந்து போவதாக சர்வதேச அமைப்பான 'சேவ் த சில்ரன்' கூறுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2 லட்சம் பேர் இந்தியாவில் மரணம் அடைகிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம் சரியான உணவு இல்லாததுதான்.

    2008-ம் ஆண்டு தகவலின்படி இந்தியாவில் 800 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

    இந்தியாவில் 45 கோடி பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். ஒட்டுமொத்த மக்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள். அப்படி இருந்தும் கூட மொத்த பட்ஜெட்டில் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    எனவே நிதியை இன்னும் அதிகப்படுத்தி குழந்தைகள் நலத்திட்டங்களையும், அவர்களுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்காமல் இல்லை. எனவே இதுசம்பந்தமான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டியது அவசியமானது.

    • சில தாய்மார்கள் ஒவ்வொரு கவளம் உணவிற்கு இடையில் சிறிது தண்ணீர் கொடுக்கிறார்கள்.
    • பிடிவாதம் பிடிக்கும் போக்கு அதிகரிக்கும்.

    குழந்தைகளுக்கு பொதுவாக சாதாரண பசி இருக்கும். இது பிறந்ததிலிருந்தே அது அழுது பாலை தேடும் போது தெளிவாகத் தெரியும். கருப்பைக் காலத்தில் இருக்கும் விரைவான வளர்ச்சியின் காலம், பிறப்புக்குப் பிறகும் சிறிது காலம் நீடிக்கும், பின்னர் குறைகிறது, இது பசியின்மை குறைவதை ஒரு பெரிய அளவிற்கு விளக்குகிறது, இருப்பினும், குழந்தை வளரும்போது, உணவு உட்கொள்ளும் அளவும் அதிகரிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கருதுகின்றனர்.

    குழந்தைக்கு வலுக்கட்டாயமாக உணவளிப்பது அல்லது டிவி, செல்போன் பொம்மைகள் மூலம் கவனத்தை சிதறடிப்பது அல்லது உணவளிக்க வீட்டிற்கு வெளியே செல்வது போன்ற முறைகளைப் பயன்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல. இதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க, குழந்தை தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து உணவை எடுத்துச் கொள்ளச் சொல்வது நல்லது, குழந்தை தேவையான அளவு எடுத்துக் கொள்ளவில்லை என்றால், அடுத்த உணவுக்காகக் காத்திருப்பது நல்லது, அல்லது சிறிது நேரம் கழித்து குழந்தை கேட்டால் உணவு கொடுக்கலாம்.

    பல தாய்மார்கள், தங்கள் குழந்தைகள் வேறு இடங்களில் அல்லது ஹோட்டல்களில் நன்றாக சாப்பிடுகிறார்கள் என்று நினைப்பதுண்டு. இதை வேறுவிதமாகக் கூறினால், குழந்தைகள் உணவகங்களில் உணவைப் பார்ப்பது மட்டுமல்ல, அந்த உணவின் சுவையான வாசனையையும் உணர்கிறார்கள். இதுதான் குழந்தைகளின் பசியைத் தூண்டுகிறது, பெற்றோர் இல்லாததால். பெற்றோர்கள் அருகில் இல்லாததால், அவர்களின் அழுத்தம் இல்லாததால், மற்ற வீடுகளில் குழந்தைகள் தானாக சாப்பிடுவதும் அதிகமாக இருக்கும்.

    பழச்சாறுகள் மற்றும் பிற சர்க்கரை பானங்களை கொடுப்பது குழந்தைகளின் வயிற்றை நிரப்பலாம், ஆனால் தேவையான அளவு கலோரிகளைக் கொடுக்காது. மேலும் சில தாய்மார்கள் ஒவ்வொரு கவளம் உணவிற்கு இடையில் சிறிது தண்ணீர் கொடுக்கிறார்கள். இதுவும் தவறு. சிறிது தண்ணீர் கொண்ட உணவு வயிற்றை நிரப்ப மட்டுமே உதவும். இத்தைகைய பழக்கமும் குழந்தை சாப்பிட மறுக்கும் போக்கை வலுப்படுத்தும். பிடிவாதம் பிடிக்கும் போக்கு அதிகரிக்கும்.

    குழந்தைகள் சாதத்தை விட ரொட்டி, இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றை எளிதாக சாப்பிடுவார்கள் என்ற உணர்வும் உள்ளது. கை வாய் ஒருங்கிணைப்பு நன்றாக இருக்கும் குழந்தைக்கு, அரிசி சாதத்தை ஒரு உருண்டையாக்கி சாப்பிடுவது குழந்தைக்கு கடினமாக இருக்கலாம், எனவே அரிசியை பருப்புடன் கலந்து சிறிய உருண்டைகளாக ஆக்குவது குழந்தைகளை சாப்பிட தூண்டும்.

    சாதாரண வளர்ச்சி முறைகள், வளர்ச்சி வேகம், குழந்தைக்கு பசிக்கும் நேரம், செரிமானமாவதற்கு எடுக்கும் நேரம் போன்ற புரிதல்கள், குழந்தைகளை புரிந்து கொள்ள சிறந்த டானிக் என்பதை புரிந்துகொள்வது பெரிதும் உதவும். குழந்தை மருத்துவரைச் சந்தித்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தொடர் எடைகள் மற்றும் உயரங்களைத் திட்டமிடுவது குழந்தையின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை மற்ற சக குழுவிற்கு இணையாக வைத்திருக்க நீண்ட தூரம் செல்லும்.

    • குழந்தை பிறந்து 6 மாதம் வரையில் கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
    • குடற்புழுக்களும் குழந்தைகளுக்கு பிரச்சினையை கொடுக்கக்கூடியது.

    குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கள் தொடர்பாக, குழந்தைகள் நல டாக்டர் எஸ்.முகுந்தன் கூறியதாவது:-

    நுண்ணூட்டச் சத்து குறைபாடால் குழந்தைகளின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் எழுகிறது. குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடின்றி ஆரோக்கியமாக இருப்பதற்கு, குழந்தை பிறந்து 6 மாதம் வரையில் கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தண்ணீர், கிரைப்வாட்டர், தேன், பசும்பால், பவுடர் பால், வாய் சூப்பான் போன்றவற்றை கொடுக்க வேண்டாம்.

    அது கேடு விளைவிக்க கூடியது. 6 மாதத்துக்கு பின்னர் 12 மாதங்கள் வரைக்கும் குழந்தைகளுக்கான இணை உணவுகளையும், 2 வயது வரைக்கும் சத்து மாவுக்களையும் தயார் செய்து வழங்கலாம். இவ்வாறு வழங்குவதன் மூலம் குழந்தைகளின் சரியான ஊட்டச்சத்து அளித்து, ஆரோக்கியமான குழந்தைகளை வளர்க்க முடியும்.

    இதில் குடற்புழுக்களும் குழந்தைகளுக்கு பிரச்சினையை கொடுக்கக்கூடியது. காய்கறிகள், பழங்களை சுத்தம் செய்யாமல் சாப்பிடுவது, கடைகளில் தின்பண்டங்கள் அதிகம் சாப்பிடுவதால் குடற்புழுக்கள் அதிகமாக வருகிறது. இதற்கான மாத்திரையை 6 மாதத்துக்கு ஒருமுறை சாப்பிட வேண்டும். அவ்வாறு இருந்தும் பூச்சிகள் வரத்தான் செய்யும். இதற்கு நிரந்தர தீர்வு நம்மை சுற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதேபோன்று குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தடுப்பூசிகள் முக்கியத்துவம் பெறுகிறது. அரசு அளிக்கும் தடுப்பூசிகளை அதற்கென வரையறுக்கப்பட்ட காலக்கட்டத்தில் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உணவின் முக்கியத்துவத்தை அவனுக்கு எடுத்துக் கூறுங்கள்.
    • குழந்தைகள் சாப்பிடும் போது, உணவில் மட்டும் கவனம் வைக்கும்படி செய்யுங்கள்.

    உங்கள் குழந்தையை எப்படி நன்கு சாப்பிட வைப்பது என்பதைப் பற்றி இங்கே உங்களுக்கு சில எளிய குறிப்புகள் நிச்சயம் கிடைக்கும். தற்போது, எப்படி உங்கள் குழந்தையைச் சாப்பிட வைப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

    ஒரே சமயத்தில் அனைத்து உணவையும் கொடுத்து தட்டை நிரப்பிச் சாப்பிட அவனைக் கட்டாயப் படுத்தாமல், சிறிது சிறிதாகத் தந்து அவனைச் சாப்பிட ஊக்கப்படுத்துங்கள். மேலும், ஒரே சமயத்தில் நிறைய உணவைச் சாப்பிடச் சொல்வதை விட, அவ்வப்பாது சிறிது சிறிதாகச் சாப்பிட ஊக்கவிக்கலாம். இதனால் அவனுக்குப் பசியின்மை போய், சரியாகச் சாப்பிடத் தொடங்கி விடுவான்.

    எப்போதும் ஒரே வகையான உணவைச் செய்து தராமல், அவனுக்குச் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில், வகை வகையாக உணவைத் தினமும் சமைத்துக் கொடுங்கள். இந்த விசயம் அவனை விரும்பி சாப்பிட ஊக்கப்படுத்தும்.

    ஒரு குறிப்பிட்ட உணவுப் பட்டியலை மட்டும் பின் பற்றி தினமும் சமைக்காமல், உங்கள் குழந்தைக்காக, அவ்வப்போது புதிதாக ஏதாவது ஒன்றை முயற்சி செய்து சமைத்து தாருங்கள். இது அவனை நன்கு சாப்பிட ஊக்கவிக்கும். மேலும் அவனே உங்களிடம் ஏதாவது ஒன்றை புதிதாகச் செய்து தரச் சொல்லி சாப்பிடுவான்.

    உங்கள் குழந்தைக்கு பிடிக்கின்றதோ அல்லது பிடிக்கவில்லையோ, அவனை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். இது அவனுக்கு உணவின் மீது வெறுப்பை உண்டாக்கலாம். ஒருவித அன்பான அணுகுமுறையைக்

    கடைப்பிடியுங்கள்.

    உங்கள் குழந்தைக்குப் புரியும்படி, அவன் சாப்பிடும் உணவு எவ்வளவு சத்துக்கள் நிறைந்தவை,ஆரோக்கியமாக வாழ எவ்வளவு முக்கியமானவை என்று விளக்கிச் சொல்லுங்கள். உணவின் முக்கியத்துவத்தை அவனுக்கு எடுத்துக் கூறுங்கள். இதனால் அவனுக்கு உணவின் மீது மரியாதை வரும். அதனால் அவன் சரியாகச்சாப்பிடுவான்.

    எவை எல்லாம் உங்கள் குழந்தை சாப்பிடும் போது அவனது கவனத்தை ஈர்க்கின்றதோ, அவற்றை எல்லாம் அகற்றி விடுங்கள். குழந்தைகள் சாப்பிடும் போது, உணவில் மட்டும் கவனம் வைக்கும்படி செய்யுங்கள். இது அவன் சரியாக சாப்பிட உதவும்.

    எப்போதும் பானங்களை உணவோடு கொடுக்காமல், அவன் சாப்பிட்ட பின்னரே கொடுக்க முயற்சி செய்யுங்கள். இதனால் உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவான்.

    உங்கள் குழந்தை தினமும் சாப்பிடும் நேரத்திற்குச் சரியாகத் தானாக வந்து அமரும் படி அவனைச் சிறு வயதிலிருந்தே பழக்கப் படுத்துங்கள். இப்படிச் செய்வதால்,அவனுக்கு அந்த நேரம் வந்து விட்டாலே தானாகப் பசி எடுக்கத் தொடங்கி விடும்.அதனால் நன்கு சாப்பிடுவான்.

    உங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்கிறான் என்றால், பொதுவாகக் காலை நேரங்களில் சரியாகச் சாப்பிட மாட்டான். இதற்கு நேரமின்மை, அவசரம் என்று பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், எந்த ஒரு சூழலிலும் காலை உணவைத் தவிர்க்காமல் அவனை முழுமையாகச் சாப்பிட வைத்துப் பழக்குங்கள். இது மிக முக்கியமான ஒன்று.

    இந்த குறிப்புகள் நிச்சயம் உங்கள் குழந்தைக்கு நன்கு பசி எடுத்துச் சரியான நேரத்திற்கு முழுமையான உணவைச் சாப்பிடச் செய்ய உதவும் என்று நம்புகின்றோம். மேலும், உணவில் பருப்பு, தயிர், நார்ச்சத்து நிறைந்த காய்கள், கீரை வகைகள், முளைக் கட்டிய பயிர் வகைகள் என்று சமமாக அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒரு உணவை குழந்தைகளுக்கு தர முயற்சி செய்யுங்கள். இது குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உதவும்.

    • முதல் 6 மாதம் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது.
    • காலம் கடந்து திட உணவு ஆரம்பிப்பதும் தவறானதே.

    குழந்தைகள் சிறப்பாக வளர பிறந்த முதல் நாளில் இருந்து 12 மாத காலம் வரை எந்த உணவை எப்போது கொடுக்கலாம் என்பதை இதில் பார்ப்போம்.

    முதலில் தாய்ப்பால் மட்டுமே போதும். வேறு எந்த உணவும் கொடுக்க தேவையில்லை. தண்ணீர் கூட கொடுக்க தேவையில்லை. வியாதிகளை தடுக்கும் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் மட்டுமே இயற்கையாக உள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையை மடியில் வைத்து கொடுக்க வேண்டும். பால் கொடுத்த உடனே படுக்க வைக்காமல் 20 நிமிடம் தோளில் போட்டு தட்டிக் கொடுக்க வேண்டும். முதல் 6 மாதம் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதன்பிறகு மெது, மெதுவாக திட உணவுகளை கொடுக்கலாம். காலம் கடந்து திட உணவு ஆரம்பிப்பதும் தவறானதே.

    6 முதல் 8 மாதம் வரை அரிசி கஞ்சி, ராகி கஞ்சி, வேக வைத்த காய்கறி அதாவது வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, பீட்ரூட் ஆகியவற்றை சுழற்சி முறையில் ஊட்டலாம். வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம் ஆகியவற்றை வேக வைக்காமல் மசித்து மட்டும் கொடுத்தால் போதுமானது. பழச்சாறுகளும் கொடுக்கலாம்.

    9 மாதம் முதல் 1 வயது வரை நெய்யுடன் கீரை சேர்த்து பருப்பு சாதம், கீரை சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை கொடுக்கலாம். புரதச்சத்துடைய உணவு அதாவது பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, காராமணி வகைகளை நன்றாக வேக வைத்து நாளுக்கு ஒரு தடவை ஊட்டலாம். தினமும் 2-3 பேரீச்சம் பழம் தரலாம். இட்லி, இடியாப்பம், வேக வைத்த இறைச்சியின் சாறு, கோழி மற்றும் இறைச்சியால் செய்த சூப், முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை கொடுக்கலாம். உணவில் கலோரி அதிகரிக்க சிறிது நெய்யோ, தேங்காய் எண்ணெய்யோ விடலாம்.

    ஒரு வயதுக்கு மேல் சராசரி குடும்ப சாப்பாட்டை கொடுக்க ஆரம்பிக்கும் நேரம் என தக்கலை குமார் மருத்துவமனை மணலி குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.கே.சஜித்குமார் தெரிவித்துள்ளார்.

    • ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு உப்பு கொடுக்கக்கூடாது.
    • குழந்தைகளின் உடல் எடையை வாழைப்பழம் இலகுவாக அதிகரிக்கும்.

    குழந்தைகளின் உணவு எனும் போது சத்துக்களைத் தாண்டி ,குழந்தைகளின் எடைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதாவது குழந்தைகளுக்கு உணவளிப்பதன் முக்கிய நோக்கம் வளர்ச்சியுடன், அவர்களின் எடையையும் அதிகரிப்பது ஆகும்.

    குழந்தைகள் பொதுவாக உணவு சாப்பிட அடம்பிடிப்பதால், அவர்கள் சாப்பிடுவது சிறிய அளவு உணவு என்றாலும் அது சத்து மிக்கதாகவும், குழந்தையின் எடை அதிகரிப்பதாகவும் இருக்கவே தாய்மார்கள் விரும்புகிறார்கள்.

    வாழைப்பழம்

    வாழைப்பழத்தில் பொட்டாசியம், விட்டமின் C மற்றும் B மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளது.. இது ஒரு அதிக கலோரிகளைக் கொண்ட உணவும் ஆகும்.குழந்தைகளின் உடல் எடையை வாழைப்பழம் இலகுவாக அதிகரிக்கும். வாழைப்பழங்கள் குழந்தைகளுக்கு பிடித்த உணவு. அவர்களுக்கு ஒரு தனி பழமாக கொடுக்கலாம். வாழைப்பழத்தை விரும்பாத குழந்தைகளுக்கு பான்கேக் (pan cake) , வாழைப்பழ பணியாரம், வாழைப்பழ கேக் செய்யும் போது அதில் கலந்து கொடுக்கலாம். அல்லது ஏனைய பழங்களுடன் சேர்த்து ஸ்மூதியாகவும் (Smoothie) கொடுக்கலாம். வெளியில் செல்லும் வேளைகளில் கூட, உங்களுடன் எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு இலகுவாக கொடுக்கலாம்.

    தானியங்களும் பருப்புவகைகளும் (Nuts & Grains)

    அவல், கொண்டைக்கடலை, குரக்கன், தினை,சோளம் ,பயறு போன்ற தானிய வகைகள் மற்றும் கச்சான், பிஸ்தா, பாதாம் போன்ற பருப்பு வகைகளில் புரதம், மெக்னீசியம், கல்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் அதிக நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. இந்த வகை தானியங்களில் இறைச்சியிலிருந்து நாம் பெறுவதை விட அதிக புரதத்தை பெறலாம். அதோடு இவை இறைச்சி மற்றும் மீன்களை விடவும் மிகவும் மலிவாக இருப்பது இன்னும் நல்லது. ஆறு மாதத்திலிருந்து, குழந்தையின் உணவில் தானிய வகைகளை கஞ்சியாக ,கூழாக,களியாக சேர்க்கலாம்.

    அவகாடோ

    அவகாடோ அல்லது ஆனைக்கொய்யா என்பது ஒரு ஆரோக்கியமான பழமாகும். குழந்தைகளின் உணவில் அவகாடோவை சேர்ப்பது உடல் எடையை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கும்.இது விட்டமின்கள், கலோரிகள் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவாகும். இதனால் குழந்தைக்கு உணவு கொடுக்கும் ஆரம்ப நாட்களிலிருந்து கொடுக்கக்கூடிய மிகவும் சத்தான உணவாகும். குழந்தைகளுக்கு இதை நேரடியாகவோ அல்லது அவகாடோ ஜூஸ், அவகாடோ ஸ்மூதியாக தயாரித்துக் கொடுக்கலாம்.

    நெய்

    சந்தையிலும் பல்பொருள் அங்காடிகளிலும் வாங்கி சாப்பிடக்கூடியவாறு இருக்கும் இந்த சுத்திகரிக்கப்பட்ட நெய் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் எடை அதிகரிப்பிற்கும் ஏற்ற நல்லதொரு சத்தான உணவு. தனியாக மாத்திரமல்லாமல் பிற உணவுப்பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய இது உண்மையில் குழந்தைகளின் உணவிற்கு சேர்க்ககூடிய மிகவும் பயனுள்ள உணவாகும்.

    சீஸ்

    சீஸ் (பாலாடைக்கட்டி) மிகவும் சத்தான உணவு என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதாவது சீஸ் என்பது கல்சியம், புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த ஆரோக்கியமான உணவாகும். ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு உப்பு கொடுக்கக்கூடாது. இதனால் உப்பு சேர்க்காத சீஸ்களை குழந்தைக்குக் கொடுப்பது எடையை அதிகரிக்க உதவும்.

    யோகர்ட்

    வயது வந்தவர்களின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை கூட பூர்த்தி செய்யக்கூடிய ஒரு சிறந்த உணவு யோகர்ட் ஆகும். யோகர்ட்டில் கொழுப்பு, புரதம், நார்ச்சத்து மற்றும் கல்சியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன. ஊட்டச்சத்து தேவைக்கும் , எடை அதிகரிப்புக்கும் சரியான வயதில் குழந்தைக்கு தயிரை வழங்கத் தொடங்குவது சிறந்தது. அதோடு வயிற்றுக் கோளாறுகளையும் சரி செய்யும். பழங்கள் சேர்க்கப்பட்ட பலவிதமான யோகர்ட்களும் சந்தையில் கிடைக்கிறது.

    இருப்பினும், அவற்றை குழந்தைக்கு கொடுப்பதற்கு ,உப்பு மற்றும் சர்க்கரையின் அளவுகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அல்லது மருத்துவ ஆலோசனையின்படி பின்பற்றுவது மிகவும் நல்லது. இதைவிட சாதாரண தயிருடன் பழங்களைச் சேர்த்து கொடுக்கலாம். இப்படி நீங்களே வீட்டில் தயாரித்து கொடுப்பது மிக சிறந்தது.

    • பிறந்த குழந்தைக்கு முழுமையான ஊட்ட உணவு தாய்ப்பால்.
    • 6 மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும்.

    ஐந்து மாதம் நிரம்பிய குழந்தைக்கு ஏற்ற உணவு தாய்ப்பால் தான். அது தான் சிறந்ததும்!! பிறந்து 6 மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும்.பிறந்த குழந்தைக்கு முழுமையான ஊட்ட உணவு தாய்ப்பால். குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

    தாய்-குழந்தை இடையே நல்ல பாசப்பிணைப்பை ஏற்படுகிறது. மூளை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. புத்திக் கூர்மையை உயர்த்தும்.

    தாய்ப்பால் ஆன்டிபாடிகளை குழந்தைக்கு வழங்குகிறது. பல நோய்த் தொற்றுகளிலிருந்தும் குழந்தையைப் பாதுகாக்க உதவுகிறது. குழந்தைக்கு ஒவ்வொரு 3 மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    பிறந்த குழந்தைக்கு மார்பகத்தின் இரு பக்கங்களில் இருந்தும் குறைந்தது 10 நிமிடத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி உணவளிப்பதால் தாய்ப்பால் ஆரோக்கியமானதாகவும், அதிகப்படியான கொழுப்புச் சக்தி இல்லாததாலும் விளங்குகிறது.

    முறையான பாதுகாப்பு முறைகள் பின்பற்றிய பிறகு சுகாதாரமான முறையில் பாலூட்ட வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அதாவது தாய்ப்பால் கொடுக்கும் போது தாய் உடனடி கர்ப்பம் தரிப்பது தவிர்க்க உதவுகிறது. மார்பகப் புற்றுநோய் வருவது குறைவு.

    தாயின் தேவையற்ற உடல் எடை குறையும். ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் தருவது மிகவும் அவசியம். அதற்குப் பிறகும் கூட பாதுகாப்பான, ஆரோக்கியமான திட உணவுகளுடன் சேர்த்து தாய்ப்பால் கொடுப்பதையும் தொடரலாம்.

    5 மாதத்திலிருந்து தாய்ப்பாலோடு பசும் பால், ஏதேனும் பழச்சாறு, கேரட் போன்ற காய்கறிகளை வேக வைத்து எடுத்த சாறு , பருப்பு வேகவைத்து எடுத்த சாறு போன்றவை கொடுக்கலாம்.

    6 மாதத்திற்கு பிறகு இட்லி, வேகவைத்து மசித்தகாய்கறிகள்,பழக்கூழ், வாழைப்பழம், வேகவைத்த ஆப்பிள், நன்றாக பிசைந்த பருப்பு சாதம் ஆகியவை தரலாம்.

    இதனுடன் சிறிது பட்டர் அல்லது நெய் சேர்த்து பிசைந்து கொடுத்தால் சுவையாகவும், குழந்தைக்கு தேவையான கொழுப்புசத்தும் கிடைக்கும். ஆரம்பத்தில் காய்கறிகளாக கேரட், உருளைக்கிழங்கு, கீரையை பயன்படுத்தலாம்.

    • `ஜங்க் புட்' பண்டங்கள் எந்தச் சத்துகளையும் தருவதில்லை.
    • காலை 7 முதல் 9 மணி வரை சிறுகுடல் ஆற்றலுடன் இயங்கும் நேரம்.

    குழந்தைகளின் உடல்நலனில் பெற்றோர் கண்டிப்பாக அக்கறை காட்ட வேண்டும். காலை 7 முதல் 9 மணி வரை சிறுகுடல் ஆற்றலுடன் இயங்கும் நேரம். அந்த நேரத்தில் கடனே என உணவு திணிக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த உடலையும் கண்டிப்பாக பாதிக்கும். சரி, காலை உணவுதான் பொருத்தமாக இல்லை. மதிய உணவாவது முழு ஆற்றலை வழங்கக்கூடியதாக இருக்கிறதா என்றால், பெரும்பாலான குழந்தைகளுக்கு அதுவும் இல்லை.

    காய்கறி, கீரை நல்ல உணவு என்று சொல்லி தலையணைக்குள் பஞ்சை திணிப்பதுபோல, குழந்தைகளின் வாயில் அவற்றை மட்டும் திணிக்க முயற்சிக்கக் கூடாது.

    அதே நேரத்தில் பளபளப்பான பாலித்தீன் பாக்கெட்டுகளில் வரும் பண்டங்களை குழந்தைகள் விரும்புகிறார்களே, அது சரியா என்ற கேள்வியும் எழுகிறது. சரியல்லதான்.

    `ஜங்க் புட்' எனப்படும் இந்த வணிகப் பண்டங்கள் எந்தச் சத்துகளையும் தருவதில்லை. குழந்தைகளின் மென்மையான உள்ளுறுப்புகளை மோசமாகச் சிதைத்து நிரந்தர நோயாளிகளாக்கி விடக்கூடும். வேறு நல்ல பண்டங்களை உண்ண விடாத அளவுக்கு நாவின் சுவை மொட்டுகளை இவ்வகை பண்டங்கள் சுரண்டி கெடுத்துவிடுகின்றன.

    வணிக நொறுக்குத்தீனி பண்டங்களில் இருந்து குழந்தைகளை மீட்டெடுப்பது எப்படி? என்று பெற்றோர் கூடுதல் அக்கறையுடன் சிந்தித்து, செயல்பட வேண்டி இருக்கிறது. இயற்கையான, சத்தான, விதவிதமான சுவை கொண்ட உணவை பச்சிளம் பருவத்தில் இருந்தே குழந்தைகளுக்கு பழக்கினால் வணிகப் பண்டங்களுக்கு அவர்கள் அடிமையாக மாட்டார்கள், என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

    ×