என் மலர்
நீங்கள் தேடியது "வாஸ்து"
- 33 கோடி தேவர் தேவியரின் வல்லமை ஒரு பசுவினுள் உள்ளது.
- பசுவினுடைய நெய்யும் பசுவினை போலவே புனிதத்துவம் பெற்றதாகும்.
இந்தியாவில் பசு புனித விலங்காக கருதப்படுகிறது. பசுவினை கோமாதா என்றே அழைக்கின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் எகிப்து, க்ரீஸ், பண்டைய இஸ்ரேல் மற்றும் ரோம் நகரிலும் பசு புனித விலங்காக கருதப்படுகிறது. இந்து மரபின் படி, கோமாதா கொண்டிருக்கும் விஷேச சக்திகள் பின்வருமாறு.
33 கோடி தேவர் தேவியரின் வல்லமை ஒரு பசுவினுள் உள்ளது. சுரபி லட்சுமி எனும் தேவி பசுவினுள் குடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஓர் இல்லத்தில் உள்ள பசுவினுடைய இருப்பு பலத்தரப்பட்ட நோய்களுக்கும் நிவராணமாக உள்ளது.
எப்போது ஒரு பசுவானது நிறைவடைகிறதோ அப்போது அப்பசுவை கவனித்து கொண்டவர் நிறைந்த அரோக்கியம் செல்வம் வளம் அனைத்தையும் பெறுவதாக நம்பப்படுகிறது. மேலும் வாஸ்து தோஷம் ஏதும் ஏற்பட்டிருந்தால் அதனை பசுவின் சாணம், கோமியம், நெய் ஆகியவற்றை கொண்டு அதற்கான நிவாரணத்தை காண முடியும். காலம் காலமாக முனிவர்கள், ரிஷிகள், அறிஞர்கள் புத்திவான்கள் அனைவரும் பசுவினை வழிபடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஒரு வார்த்தையில் சொல்வதனால், பசு என்பது நேர்மறை ஆற்றலின் பிறப்பிடமாகும். மேலும் பசுவிற்கு செய்யும் பணிவிடைகளின் மூலமும் நம் பிரச்சனைகளிலிருந்து நாம் விடுபட முடியும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

ஒவ்வொறு நாளும் பசுவிற்கு உணவினை அளிப்பது ஒருவருக்கு நல்வாழ்வை வழங்கும் என சொல்லப்படுகிறது. கோவில்களில் இருக்கும் கோசாலைகளில் பலர் பசுவிற்கு கீரைகளை அர்ப்பணம் செய்வதை நாம் பார்க்கக்கூடும். ஜாதகங்களில் ஏற்படும் பிரச்சனைக்கு பரிகாரமாக இவை செய்யப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். மேலும், நீங்கள் எங்காவது ஒரு நல்ல காரியமாக செல்கிற போது பசுவினுடைய சப்தத்தை கேட்டால் அது அக்காரியம் வெற்றி என்பதை குறிப்பதாக கருதப்படுகிறது.
மேலும் ஏதேனும் கண் திருஷ்டி ஏற்பட்டிருப்பின் புனித பசுவின் வால் பகுதியில் அமைந்துள்ள ஜடையை கொண்டு ஏழு முறை மந்திரிப்பதை போன்ற செயலை செய்கிற போது திருஷ்டிகளை களைய முடியும். பசுவினுடைய நெய்யும் பசுவினை போலவே புனிதத்துவம் பெற்றதாகும். பசுவினுடைய நெய்யினால் தீபம் ஏற்றப்பட்டால் அது பல நல்ல அதிருவ்களை ஈர்ப்பதாக அமையும். வீட்டின் பூஜையறையில் கிருஷ்ணர் பசுவினுடன் இருப்பதை திருவுருவ படத்தை வைத்து வழிபட்டால் தொடர்ந்து வரும் பிரச்சனைகள் விலகும் என்பது நம்பிக்கை. நலம், வளம், செல்வம் என அனைத்து செளபாக்கியங்களையும் பசுவினை வழிபடுவது நம் நல்வாழ்விற்கு பெரும் உதவியாக அமையும். மகிழ்வான வாழ்விற்கு கோமாதாவின் ஆசிகளை பெறுவது அவசியமாகும்.
- ஒரு இடமானது சதுரமான அளவுகளில் அமைந்திருப்பது வாஸ்துவில் முதல் தரமானதாகக் கருதப்படும்.
- வீடு கட்டுவதற்கு எப்போதுமே வட்ட வடிவமான இட அமைப்பு நிச்சயம் ஒத்து வராது.
நாம் ஒரு இடத்தை அல்லது மனையைத் தேர்வு செய்யும்போது, அந்த இடத்தின் வடிவம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், சீரற்ற நீள, அகலங்கள் கொண்ட இடங்களை நாம் வாங்கி, வாஸ்து சாஸ்திரப்படி இடத்தை சீரமைத்து, கட்டிடத்தைக் கட்டும்போது நிறைய இடத்தைப் பயன்படுத்த முடியாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. பயன்படுத்த இயலாத இடங்களையும் எப்படியாவது சரி செய்து பயன்படுத்த இயன்றவரையில் வாஸ்து விதிகள் உதவி செய்கின்றன. ஆனால், கட்டிடத்தின் மொத்தமான பயன்பாட்டிற்கு அது சேராமல் தனியாக நிற்கும் நிலை ஏற்படும். அதிக பண மதிப்புள்ள இடத்திற்குத்தான், இந்தப் பிரச்சினை அதிகமாக வருகிறது. அதனால் முன்கூட்டியே இந்த விஷயத்தில் சரியான முடிவு எடுப்பது அவசியம்.
ஒரு இடமானது சதுரமான அளவுகளில் அமைந்திருப்பது வாஸ்துவில் முதல் தரமானதாகக் கருதப்படும். அதாவது நான்கு புறங்களிலும் சரியான அளவுகள் கொண்டவை, இந்த வகையைச் சார்ந்தவையாகும். சதுரமான மனைகளில் வடக்கு அல்லது தெற்குப் பார்த்து அமைந்த இடங்கள் பெண் தன்மையைக் குறிப்பிடும். அதாவது அதில் வசிப்பவர்கள் மென்மையான போக்கு கொண்டவர்களாக இருப்பர். பொதுவாக இவர்கள் கலை அல்லது அழகியல் சம்பந்தமான தொழிலில் முன்னுக்கு வருபவர்கள் ஆவார்கள். சதுரமான மனைகளில் கிழக்கு அல்லது மேற்குப் பார்த்த இடங்கள் ஆண் தன்மையைக் குறிப்பிடும். அதாவது, அதில் வசிப்பவர்கள் தமது முடிவுகளில் தீர்க்கமாகவும், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற நிலைப்பாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பொதுவாக இவர்கள் அரசுத் துறையிலோ அல்லது ஒரு நிறுவனத்தின் தலைமைப் பதவியிலோ அல்லது சமூகத்தின் முக்கியப் புள்ளியாகவோ இருப்பார்கள்.
இரண்டாவது நல்ல தரமாகக் கருதப்படுவது செவ்வக வடிவமான இடமாகும். அதாவது இருமடங்கு நீளமும், ஒரு மடங்கு அகலமும் கொண்டவையாகும். அல்லது இருமடங்கு அகலமும் ஒரு மடங்கு நீளமும் கொண்டவையாகும். இதிலும் கிழக்கு, மேற்கு நீளம் கொண்ட மனைகள் மற்றும் தெற்கு, வடக்கு நீளம் கொண்ட மனைகள் என்று இரண்டு வகைகள் உண்டு. இதில் கிழக்கு, மேற்கு நீளம் கொண்ட மனைகள் சிவத் தத்துவம் பொருந்திய ஆண் மனையாகக் கருதப்படும். அந்த இடமானது ஆண்களது சகல முயற்சிகளையும் வெற்றியை நோக்கிச் செலுத்தக்கூடியது. தெற்கு, வடக்கு நீளம் கொண்ட மனைகள் சக்தியின் அம்சம் கொண்ட பெண் மனையாகக் கருதப்படும். அந்த இடமானது அங்குள்ள பெண்கள் முன்னின்று செய்யும் சகலவிதமான காரியங்களுக்கும் நல்ல வெற்றி வாய்ப்புகளைத் தரக்கூடியது.
வீடு கட்டுவதற்கு எப்போதுமே வட்ட வடிவமான இட அமைப்பு நிச்சயம் ஒத்து வராது. காரணம் அதில் இரு திசை சக்திகள் இணைந்து செயல்பட வாய்ப்புகள் இல்லாததாகும். அதாவது ஈசானியம், அக்னி, வாயு, நிருதி ஆகிய மூலைகள் வடிவமைப்பில் வராமல் வளைவில் ஒடுங்கி நிற்கும். அதனால் பஞ்சபூத சக்திகள் சமஅளவில் பரவி, குடியிருக்கும் வீட்டில் சாதகமான அலை இயக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்காது. ஆனால், விளையாட்டு அரங்குகள், பூங்காக்கள், கோவில்கள், பொதுக்கட்டிடங்கள் ஆகியவற்றை வட்ட வடிவ மனைகளில் அமைக்கலாம்.
வீடுகள் கட்ட சதுரம் அல்லது செவ்வகம் தவிர நீள்சதுரம், அகலத்தைப்போல மூன்றுக்கும் மேற்பட்ட மடங்கு நீளம் கொண்ட இடங்கள், வட்டம், அரைவட்டம், நான்கிற்கும் மேற்பட்ட கோணங்கள் உள்ளவை, ஓவல் வடிவங்கள், நான்கு பக்கங்களிலும் வெவ்வேறு அளவுகள் கொண்டவை, இன்னும் பிற வித்தியாசமான வடிவங்கள் ஆகியவற்றை நாம் தேர்வு செய்வதில் மிக்க கவனத்துடன் செயல்பட வேண்டும். சில தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில், கட்டாயமாக அந்த இடத்தை வாங்கித்தான் ஆக வேண்டும் என்றால் மட்டுமே, வாஸ்துப்படி அதில் சீர்திருத்தங்கள் செய்ய இயலுமா? என்று ஆராய வேண்டும். அதன்பிறகு நமக்கு சாதகமான அம்சங்கள் அதில் இருந்தால், அதில் ஈடுபட்டு வெற்றி காணலாம்.
- சீன வாஸ்து பரிகார முறையாக விண்ட் சைம்கள் கருதப்படுகிறது.
- விண்ட் சைம்களை வீட்டின் தலைவாசலுக்கு மேலாக தொங்கவிடுவது நல்லது.
நமக்கு தொடர்ந்து அதிர்ஷ்டங்கள் உண்டாகவும், வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் நுழையாமல் தடுக்கும் "விண்ட் சைம்கள்" உபயோகிப்பதால் ஏற்படும் பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உலோகங்கள் கொண்டு செய்யப்பட்ட இந்த விண்ட் சைம்கள் இப்போது நம் நாட்டிலும் பரவலாக விற்கப்படுகிறது. மக்களில் பலரும் விண்ட் சைம்களை வாங்கி தங்கள் வீடுகளில் தொங்க விட்டுக்கொள்கின்றனர். சீன வாஸ்து பரிகார முறையாக இந்த விண்ட் சைம்கள் கருதப்பட்டாலும் பழங்கால இந்தியாவில் சிறு, சிறு மணிகள் கோர்த்து கோவில்களில் காற்று வீசும் போது ஒலி எழுப்பும் வகையில், இதை உபயோகப்படுத்தியிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
உலோகங்கள் கொண்டு செய்யப்பட்ட விண்ட் சைம்கள் காற்றில் அசையும் போது, தொங்கிக்கொண்டிருக்கும் உலோக குழாய்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, ஒரு விதமான ஆன்மீக சக்தி கொண்ட ஒலியை எழுப்புகிறது. இந்த ஒலிக்கு, நமது வீட்டை சுற்றிலும் இருக்கும் பகுதிகளில் நேர்மறை அதிர்வுகளை அதிகம் பரப்பும் தன்மை கொண்டது. மேலும் இந்த ஒலிக்கு மனிதர்களின் மனதில் தீய எண்ணங்கள், சிந்தனைகள் ஏற்படாமல் தடுக்கும் சக்தி கொண்டதாகும். வீட்டினுள் வெளிப்புற சூழல்கள் மற்றும் நபர்களால் அனுப்பப்படும் எதிர்மறை அதிர்வுகளை வீட்டிற்குள் வர விடாமல் விரட்டும் தன்மை அதிகம் உண்டு.
விண்ட் சைம்கள் தொங்க விடப்பட்டிருக்கும் வீடுகளில் துஷ்ட சக்திகள் நுழைய முடியாது. அந்த விண்ட் சைம்கள் அடிக்கடி எழுப்பும் ஒலியை கேட்பவர்களுக்கு உடல் மற்றும் மனநிலை நன்றாக இருக்கும். தொடர்ந்து பல அதிர்ஷ்டங்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். செல்வ நிலை உயரும். அனைத்திலும் வெற்றி பெறும் நிலையையும் உண்டாக்கும். இந்த விண்ட் சைம்களை வீட்டின் தலைவாசலுக்கு மேலாக தொங்கவிடுவது நல்லது.
- வடக்கு திசையில் சமையல் அறை அமைக்கக் கூடாது.
- வடக்கும் மேற்கும் சேரும் மூலை வாயவியம் எனப்படும்.
வடக்கு பாகத்தின் பலன்கள் பெண்கள் மற்றும் செல்வத்திற்கு உரியது. வடக்கு பாகம் பொதுவாக பள்ளமாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் அந்த வீட்டு பெண்கள் இன்பமாக இருப்பார்கள் மேலும் செல்வம் பெருகும். வடக்கில் காலியிடம் இருக்க வேண்டும். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் ஈசான்யம் வழியாக வெளியேறினால் அந்த வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும். வடக்கு திசையில் சமையல் அறை அமைக்கக் கூடாது. வீட்டில் உள்ள எல்லா அறைகளிலும் வடக்கு பகுதி தூய்மையாக இருக்க வேண்டும்; குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* வடக்கும் மேற்கும் சேரும் மூலை வாயவியம் எனப்படும். வாயவியம் மூளை நன்றாக இருந்தால் வீட்டின் உரிமையாளர் மிகப் பெரிய செல்வந்தர் ஆவார். அது தவறாக இருந்தால் அவர் ஆண்டியாவர். வாயவியத்தில் கழிப்பறைகள் அமைக்கலாம். வாயவியம் பாகத்தில் கிணறு இருந்தால் வழக்குகளாலும் நோயாலும் துன்பம் வரும். கனமான பொருட்கள் இந்த மூலையில் வைக்க வேண்டும். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் வாயவியம் மூலை வழியாக வெளியில் செல்லக் கூடாது.
- குழந்தைகளுக்கான அறை வடமேற்கில் அமைக்கலாம்.
- குளியலறை வடமேற்கில் அல்லது தென்கிழக்கில் அமைக்கலாம்.
வீட்டின் படுக்கையறை சதுரமாகவோ செவ்வகமாகவோ இருக்கலாம் வீட்டின் உரிமையாளர் குடும்பத் தலைவர் படுக்கையறை தென்மேற்கு திசையில் அமைவது நலம். படுக்கை தெற்கு பக்கம் அல்லது கிழக்குப் பக்கம் தலை வைத்து படுப்பது போல் இருந்தால் சிறப்பு. நாம் படுத்து உறங்கும்போது நம் தலைக்கு நேராக மேலே பீம் போன்றவை இல்லாமல் இருத்தல் நல்லது.
*குழந்தைகளுக்கான அறை வடமேற்கில் அமைக்கலாம். போதுமான சூரிய ஒளியும் காற்றோட்டம் நிறைந்ததாக அறை அமைய வேண்டும். மனதிற்கு இதமான புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய வண்ணங்களில் சுவர்கள் இருப்பின் குழந்தைகளை மகிழ்ச்சியில் வைத்திருக்கும். அவர்கள் படிக்கும் பகுதி சுத்தமாக புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் சரியாக அடுக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.
*குளியலறை வடமேற்கில் அல்லது தென்கிழக்கில் அமைக்கலாம். போதுமான சூரிய வலியும் காற்றோட்டமும் இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே வீட்டில் எப்பொழுதும் குளியல் அறையில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் உடனுக்குடன் சீர் செய்ய வேண்டும். குளியலறைக்கும் பூஜை அறைக்கும் இடைவெளி சற்று அதிகமாக இருக்க வேண்டும் பக்கத்து பக்கத்தில் இருக்கக் கூடாது.
*அனைவரும் புழங்கக்கூடிய அறை அல்லது கூடம் வட திசையில் இருக்க வேண்டும். வீட்டின் தலைவர் வடக்கு நோக்கியோ கிழக்கு நோக்கியோ அமரும் வண்ணம் அவரது இருக்கை அமைய வேண்டும்.
- பணமே இந்த காலத்தில் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக உள்ளது.
- பணப்பெட்டியை எப்போதும் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் மற்ற எல்லாவற்றையும் விட நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இடம் பணப்பெட்டி வைக்கும் அறைக்கு... ஏனென்றால் பணமே இந்த காலத்தில் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக உள்ளது.
வடக்கு திசை குபேரன் திசையாகும். குபேரன் செல்வத்துக்கு அதிபதி. எனவே பணப்பெட்டி வடக்கு திசையை நோக்கி பணப்பெட்டியை வைக்கலாம். இது தவிர தென் மேற்கு மூலையிலும் பணப்பெட்டி இடம்பெறலாம். தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்தப்படி பணப்பெட்டியை வைப்பதே மிக சிறந்தது. இவ்வாறு அமைக்கும் பெட்டியில் வைக்கும் பணம் அள்ள, அள்ள குறையாமல் இருக்கும். செல்வம் வேகமாக சேரும்.
பணப்பெட்டியை எப்போதும் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் உள்ள பணம் முழுவதையும் எடுத்து விடாமல் அதில் ஒரு ரூபாயாவது போட்டு வைக்க வேண்டும்.பணப்பெட்டி இருக்கும் அறையின் கதவு ஒற்றையாக இருக்க வேண்டும். அந்த அறையின் நுழைவு வாயில் வடக்கு திசையிலோ, கிழக்கு திசையிலோ இருக்க வேண்டும். இதனால் செல்வ செழிப்பு கூடும். நுழைவுவாயில் வட மேற்கிலோ, தென்மேற்கிலோ அல்லது தென் கிழக்கு திசையிலோ இருக்க கூடாது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படும்.
வீட்டில் பணத்தை அலமாரியில் வைப்பதாக இருந்தால் அதிகமான எடையை ஏற்றக்கூடாது. அலமாரியின் மேல் தட்டிலோ அல்லது நடுத்தட்டிலோதான் பணத்தை வைக்க வேண்டும். பணம் இருக்கும் தட்டில் துணிமணிகளை வைக்கக்கூடாது. இது செல்வம் கரைந்து போக வழி வகுக்கும். பணம் இருக்கும் இடத்தில் வாசனை திரவியங்களை போட்டு வைக்க கூடாது. பணம் இருக்கும் பெட்டியின் கால் ஆடக்கூடாது. பணப்பெட்டியை சுவருக்கும் புதைத்து வைப்பதாக இருந்தால், அந்த பெட்டியின் கீழ் தட்டில் தான் பணத்தை வைக்க வேண்டும். மேல்தட்டில் வைக்கக்கூடாது.
- நம் வீட்டிலும் பூஜை அறையை ஈசான மூலையில் அமைக்கலாம்.
- ஈசான மூலை அடைபட்டதாக இருக்கக் கூடாது.
பூஜை அறை என்றாலே நம் எல்லோர் நினைவுக்கும் உடனே வருவது ஈசானிய மூலை. காரணம் இறைவன் உறையும் இடம் ஈசானிய மூலை எனலாம். நம்முடைய பூமிப்பந்தும் வடகிழக்கு பக்கமாகத்தான் சாய்ந்து இருக்கிறது.
பிரபஞ்சத்திலிருந்து ஆவாரம் ஆற்றலும் வடக்கிழக்கின் வழியே தான் மற்ற இடங்களுக்கு பரவுகிறது எனவும் கூறுவர். கோவில்களில் யாகசாலை அமைக்கும் போது ஈசான மூலையை வடகிழக்கு மூலையை தெரிவு செய்வார்கள் என்பதை பார்க்கின்றோம்.
எனவே நம் வீட்டிலும் பூஜை அறையை ஈசான மூலையில் அமைக்கலாம். பொதுவாக ஈசான மூலை வளர்ந்திருந்தால் சிறப்பு. இந்த ஈசானி மூலையில் கடவுள் படங்களை கிழக்கு நோக்கி வைக்கலாம் அல்லது வடக்கு நோக்கி வைக்கலாம். ஈசான மூலை அடைபட்டதாக இருக்கக் கூடாது நல்ல காற்றோட்ட வசதி உள்ளதாக இருத்தல் சிறப்பு. குறிப்பாக கிழக்கில் இருந்து சூரியக்கதிர்கள் ஈசான மூலைக்குள் வருவது நல்லது.
இவ்வாறு ஈசான மூலையில் பூஜையறை அமைக்க இயலவில்லை என்றால் வீட்டின் கிழக்கு பக்கத்தில் அதாவது வடகிழக்கு தென்கிழக்கு நடுவில் பூஜை அறை அமைக்கலாம். இதற்கும் வாய்ப்பு குறைவாக இருப்பின் வடக்கு திசை அதாவது வடகிழக்கு வடமேற்கு இரண்டிற்கும் இடைப்பட்ட இடத்தில் பூஜை அறை அமைக்கலாம். மேற்படி எந்த இடத்தில் அமைத்தாலும் பூஜை மாடம் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி இருத்தல் சிறப்பு.
வாஸ்து முறைப்படி படிக்கட்டுகள்
ஒரு வீட்டில் படிக்கட்டுகள் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. வெளியில் இருந்து வீட்டுக்கு செல்லும் படிக்கட்டுகள், வெளிப்பகுதியை வீட்டின் உட்பகுதியோடு இணைக் கிறது. ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் இரண்டு தளங்களை இணைக்கிறது. இவ்வாறு தொடர்பு பாலங்களாக விளங்கும் படிக்கட்டுகள் வாஸ்துவில் முக்கிய இடம் பெறுகிறது. கட்டிடக்கலை வல்லுனர்களும் கட்டுமான பொறியாளர்களும் வாஸ்து சாஸ்திர நிபுணர்களும் படிக்கட்டுகள் அமையும் இடத்தையும் அவை எத்திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனமாக கருத்தில் கொள்கின்றனர்.
வீட்டில் எப்பொழுதும் நல்ல மங்கலமான நேர்மறையான சக்தி நிறைந்திருக்க வேண்டும் எனும் கோணத்தில் வாஸ்து செயல்படுகிறது. வீட்டின் எல்லா பகுதிகளிலும் சமமான நேர்மறை சக்தி இணக்கமாக விளங்க வேண்டும் என்பதில் வாஸ்து சாஸ்திரம் மிகுந்த அக்கறை காட்டுகிறது. எனவே தான் படிக்கட்டுகள் அமைப்பதில் வாஸ்துவின் பங்கு மிக முக்கியமாகிறது.
வீட்டின் தென்கிழக்கு பகுதியில் படிக்கட்டுகள் அமையும் என்றால் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். தென்மேற்கில் அமைகிறது என்றால் மேற்கை பார்த்தவாறு அமைய வேண்டும். வடமேற்கில் அமைந்தால் வடக்கு திசை பார்த்தவாறு அமைய வேண்டும். வடகிழக்கில் மாடிப்படி அமைவதை தவிர்க்கலாம்.
- அனைத்து வகையான கட்டிட அமைப்பு முறைகள் பற்றி ‘வீட்டு வாஸ்து’ குறிப்பிடும்.
- நிலம் அல்லது தன்மைகள் பற்றிச் சொல்வது ‘பூமி வாஸ்து.’
வாஸ்து என்பது வீடு, மனை ஆகியவற்றைப் பற்றிய செய்திகளைச் சொல்வது மட்டுமே என்று சிலர் நினைக்கின்றனர். உண்மையில் வாஸ்து நான்கு வகையாக உள்ளது. அதைப் பற்றி இங்கே பார்ப்போம்.
பூமி வாஸ்து
நிலம் அல்லது மனையின் தன்மைகள் பற்றிச் சொல்வது 'பூமி வாஸ்து.' மனையானது கிழக்கு மனையா, மேற்கு மனையா, வடக்கு மனையா, அல்லது தெற்கு மனையா என்பது பற்றிக் குறிப்பிடும். மேலும் மனைக்கு ஒரு பக்கத்தில் மட்டும் சாலையா, இரு பக்கமும் சாலைகளா, மூன்று புறங்களும் சாலைகளா, அல்லது நான்கு பக்கங்களும் சாலைகளா என்பதையும் எடுத்துக்காட்டும். பூமியில் சல்லிய தோஷங்கள் ஏதாவது உள்ளதா?, மனையானது சாலையில் இருந்து பள்ளத்தில் உள்ளதா?, அந்த மனையில் மண்ணின் நிறம் மற்றும் இதற்கு முன்பு அந்த இடம் என்னவாக இருந்தது என்பதையும் குறிப்பிடும்.
வீட்டு வாஸ்து
வீடு, அரண்மனை, வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்கள், பள்ளி - கல்லூரிகள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், பொதுத்துறை கட்டிடங்கள் போன்ற அனைத்து வகையான கட்டிட அமைப்பு முறைகள் பற்றி 'வீட்டு வாஸ்து' குறிப்பிடும். ஒரு இடத்தில் எந்த அளவில், எந்த முறையில், எப்போது, எவ்வாறு கட்டிடங்களை அமைக்க வேண்டும் என்பதையும், சொந்த வீடு அல்லது வாடகை வீட்டு விஷயங்களையும் இது எடுத்துக்காட்டும்.
மேலும் அந்தக் கட்டிடம் வங்கியா, மருத்துவமனையா, வணிக வளாகமா, பள்ளி- கல்லூரியா, உணவகமா, தங்கும் விடுதியா, தொழிற் சாலையா, தகவல் தொழில்நுட்ப அலுவலகமா, வாடிக்கையாளர் சேவை மையமா, மற்ற பொதுத்துறை நிறுவனமா, ஊடகங்கள் சார்ந்த அலுவலகமா என்பதைப் பொறுத்து அதன் வடிவமைப்புகளையும் இது சொல்லும். முக்கிய நுழைவுவாசல், வரவேற்பறை, பின்புறம் அமையும் வாசல்கள், சமையலறை, உணவு உண்ணும் அறை, ஓய்வு அறை, பணியாற்றும் அலுவலகம், தலைமை அதிகாரியின் அறை, மின்சாதனங்கள் அறை, படிக்கட்டுகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், விளையாட்டு மைதானங்கள், கேளிக்கை விடுதிகள், பாத்ரூம்-டாய்லெட் போன்ற எல்லா அறைகளின் அமைப்பையும் இது குறிப்பிடும்.
இருக்கை வாஸ்து
வீடுகள், வியாபார, தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற கட்டிடங்கள் ஆகியவற்றில் இடம்பெறும் இருக்கைகள், ஊஞ்சல்கள், படுக்கைகள் அமைக்கும் விதம் பற்றி கூறுவது 'இருக்கை வாஸ்து.' ஒரு வீடோ, அலுவலகமோ அல்லது வேறு நிறுவனம் சார்ந்த கட்டிடங்களோ எதுவாக இருந்தாலும், அங்கு பணியாற்றுபவர்கள் அமர்வதற்கான இடம், மீட்டிங் ஹால்கள், கேண்டீன்கள், ஓய்வு எடுக்கும் இடம் பற்றிய எல்லாவித தகவல்களையும் சொல்லும் வாஸ்து இது. நிறுவனத்தின் தலைவர் எங்கே அமர வேண்டும், அவரைச் சந்திக்க வருபவர்கள் எங்கே அமர வேண்டும், பணிபுரிபவர்கள் எங்கே அமர வேண்டும் என்ற நுட்பங்களையும் இது தெளிவுபடுத்தும்.
வாகன வாஸ்து
இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், தேர், பல்லக்கு போன்ற அனைத்து வகையான போக்குவரத்து சாதனங்கள் பற்றிய தெளிவை ஏற்படுத்தும் வாஸ்து இது. இரு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ வீட்டின் அத்தியாவசிய ஒரு தேவையாக மாறிவிட்டது. அந்த வாகனத்தை வீட்டில் எப்படி நிறுத்துவது, வாகனங்களை எப்போது வாங்குவது, வாராந்திர பூஜை போன்ற முறைகளை இது விரிவாகச் சொல்கிறது. நமது பயணங்களுக்குத் துணை செய்யும் வாகனங்களின் முக்கியத்துவம் பற்றி இந்த வாஸ்து பிரிவு குறிப்பிடுகிறது.
- வீட்டின் கிழக்கு திசையில் காலியிடம் இருக்க வேண்டும்.
- கிழக்கும் வடக்கும் சேரும் மூலையை ஈசான்யம் என்பார்கள்.
* கிழக்கு பாகத்தின் பலன்கள் ஆண்களுக்குரியது . கிழக்கு பாகம் பொதுவாக தாழ்வாக இருக்க வேண்டும். வீட்டின் கிழக்கு திசையில் காலியிடம் இருக்க வேண்டும். இதனால் உடல் நலம், பொருளாதாரம் மற்றும் வம்ச விருத்தி உண்டாகும். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் கிழக்கிலிருந்து வெளியேறினால் அந்த வீட்டு ஆண்களுக்கு உடல்நலம் சிறப்பாக இருக்கும். கிழக்கில் கிணறு, செப்டிக்டங்க் இருந்தால் நன்மைகள் உண்டாகும்.
* கிழக்கும் வடக்கும் சேரும் மூலையை ஈசான்யம் என்பார்கள். எல்லா திசைகளிலும் சிறந்தது ஈசான்ய மூலை. வீட்டின் ஒவ்வொரு அறையிலும் ஈசான்ய மூலை தூய்மையாக இருக்க வேண்டும். கனமான பொருட்கள் இருக்கக் கூடாது மற்றும் தடுப்புகள் இருக்கக் கூடாது. வீட்டின் ஈசான்ய மூலையில் உயரமான மரங்கள் இருக்கக் கூடாது. ஈசான்யத்தில் கிணறுகள் இருக்கலாம். பூஜை அறை ஈசான்ய திசையில் அமைக்கலாம். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் ஈசான்ய மூலை வழியாக வெளியேறினால் செல்வ வளம் மற்றும் வாரிசு வளர்ச்சி உண்டாகும்.
- வடகிழக்கு திசையில் மாடிப்படி அமைவதை தவிர்க்கலாம்.
- நிலம் சதுரமாகவோ செவ்வகமாகவோ இருப்பது நல்லது.
அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய வாஸ்து நெறிமுறைகள்:-
கட்டிடம் கட்டப் போகும் நிலம் சதுரமாகவோ செவ்வகமாகவோ இருப்பது நல்லது.
கட்டிடம் கட்டப் போகும் நிலத்திற்கு தெற்கு அல்லது வடக்கு பகுதியிலோ குலம் குட்டை ஏறி போன்ற நீர் நிலைகள் இல்லாமல் இருப்பது நன்று.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தெற்கு மேற்கு, தென்மேற்கு வாசற்படியை தவிர்க்கலாம் சிலர் ஜாதகத்திற்கு இது சிறப்பாக இருக்கிறது என்றால் அவர்கள் வைத்துக் கொள்ளலாம்.
அடுக்குமாடி கட்டிடம் மையப் பகுதியில் திறந்த வெளி இருப்பது சிறப்பு சூரிய ஒளி பாய்வதால் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு சிகப்பு கருப்பு மற்றும் வெளிர் நீளம் வண்ணத்தில் பெயிண்ட் அடிப்பதை தவிர்க்கலாம்.
கட்டிடத்தின் வாசற்படி மற்றும் ஜன்னல்களின் மொத்த எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருப்பது நல்லது.
குடியிருப்பின் பால்கனி கிழக்கு மற்றும் வடக்கு திசையில் அமைந்திருப்பது நல்லது.
வடகிழக்கு திசையில் மாடிப்படி அமைவதை தவிர்க்கலாம்.
குபேர வாசல்
பொதுவாகவே வடக்கு பார்த்த வீடு எல்லோரும் விரும்புகின்ற வீடு. வடக்கு பார்த்த வாசலும் சிறப்புடையது. வடக்கை பார்த்த வாசலில் வாசல் வடக்கு பக்கம் நடு பகுதியில் அமைந்து உள்ளதா என்பது மிக முக்கியம். இந்த வாசலை தான் குபேர வாசல் என்றும் அழைப்பர். வடக்கு பார்த்த வாசல் வடகிழக்கில் இருந்தால் அது ஈசானிய மூலை ஓரளவுக்கு பரவாயில்லை. வடமேற்கு மூலையில் வடக்கு பார்த்த வாசப்படி அமைப்பதை தவிர்க்கலாம்.
வடக்கு பகுதியில் அமைந்துள்ள வடக்கு வாசல் மிகச் சிறப்பான பலன்களை தரக்கூடியது. அதில் குறிப்பாக குரு லக்னாதிபதி குரு நட்சத்திர அதிபதி உள்ளவர்கள் குரு திசை நடக்கும்போது சிறப்பான பலனை பெறுவார்கள். குரு உச்சத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஜாதகத்தில் மற்ற விதங்களில் குரு பலமாக இருந்து பலன் கொடுத்து வருபவர்களுக்கும் இந்த வடக்கு வாசல் நிஜமாகவே குபேரவாசல் தான்.
- வாழ்க்கை முழுவதுமே கற்றல் நடந்து கொண்டே இருக்கிறது.
- வீட்டில் படிக்கும் வரை என்று ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும்.
வீட்டுமனை வாங்கி புதிய வீடு கட்டுபவர்களுக்கு வீட்டில் படிக்கும் அறைகளை யார் யாருக்கு எங்கே? கட்டலாம் என்று கேள்வி எழும். முதலில் வீட்டில் படிக்கும் வரை என்று ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும். சொந்த வீடாக நீங்கள் கட்டும்போது இதை முதலில் கவனியுங்கள்.
வாழ்க்கை முழுவதுமே கற்றல் நடந்து கொண்டே இருக்கிறது. படிக்கும் அறையின் அளவு உங்கள் தேவைக்கேற்ப வைத்துக் கொள்ளலாம்.
படிக்கும் அறை வடக்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். படிக்கும் குழந்தைகளோ பெரியவர்களோ கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து படிக்கும்படி இருப்பது நலம்.
தென்மேற்கு அதாவது குபேர மூலையில் அமைந்துள்ள படுக்கையறையில் பெரியவர்கள் குடும்பத் தலைவன் தலைவி அறையாக இருப்பது நலம். திருமணமான இளம் தம்பதியினர்களுக்கும் தென்மேற்கு படுக்கையறை சிறப்பை சேர்க்கும்.
வீட்டில் உள்ள வயதானவர்களும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குமான அறையை வடகிழக்கு திசையில் அமைக்கலாம். வீட்டில் விருந்தினர்கள் வரும்போது அவர்களை தங்க வைக்க வடமேற்கு திசையில் விருந்தினர் அறை அமைக்கலாம்.
- இங்கு வழிபாடு செய்தால் வீடு கட்டும் பணி எந்தவித தடையும் இன்றி விரைவில் வீட்டை கட்டி முடிக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
- இந்த தலத்துக்கு வந்தாலே சனி தோஷம் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருப்புகலூரில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது.
நாற்புறமும் அகழி சூழ அமைந்திருக்கும் இந்த கோவிலில் அருளும் இறைவன் அக்னீஸ்வரர், இறைவி கருந்தார்க்குழலி. சூளிகாம்பாள் என்ற பெயரும் இறைவிக்கு உண்டு.
இத்தல இறைவியின் பெயர் கருந்தாள் குழலி. இங்கு சாயரட்சை காலத்தில் அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள், அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபட்டால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டுவதாக இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இத்தலத்தில் நிகழ்கால நாதர் என்னும் வர்த்தமானீஸ்வர், கடந்தகால நாதர் பூதேஸ்வரர், எதிர்கால நாதர் பவிட்ச்சேயேஸ்வர் ஆகியோரும் உள்ளனர். இவர்களை வழிபட்டால் முற்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் தோஷங்கள் நீங்கி நிகழ்காலத்தில் கிடைக்க வேண்டிய நன்மைகள், வருங்காலத்தில் கிடைக்க வேண்டிய அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழலாம். அப்பர் பெருமான் உழவாரப்பணி செய்து கொண்டிருந்தபோது இறைவனடி சேர்ந்த திருத்தலம் இதுவாகும்.
புதிதாக வீடு கட்டுபவர்கள் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலுக்கு வந்து அக்னீஸ்வரர் சன்னிதிக்கு நேர் எதிரில் 3 செங்கற்களை வைத்து பூஜை செய்து இறைவனை வழிபட்டு எடுத்து செல்கின்றனர். இவ்வாறு பூஜை செய்த 3 செங்கற்களை வடகிழக்கு, தென்கிழக்கு பகுதிகளிலும், பூஜை அறையிலும் வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் வீடு கட்டும் பணி எந்தவித தடையும் இன்றி நாம் விரும்பியபடி விரைவில் வீட்டை கட்டி முடிக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த வாஸ்து பூஜை இத்தலத்தின் அனைத்து நாட்களிலும் செய்யப்படுகிறது.
இந்த தலத்துக்கு வந்தாலே சனி தோஷம் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வந்து அங்கிருந்து நாகூர், திட்டச்சோி, திருமருகல் வழியாக கோவிலை அடையலாம். நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து 24 கி.மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் வேளாங்கண்ணி செல்லும் பஸ்சில் ஏறி நாகப்பட்டினத்தில் இறங்கி கோவிலை அடையலாம்.