என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி"
- விழாவை பள்ளி பொருளாளர் ராதாராமசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
- சிவப்பிரியா மாதேஸ்வரனும் பரிசுகளை வழங்கினர், முடிவில் பள்ளி முதல்வர் அனிதா நன்றி கூறினார்.
திருப்பூர்:
திருப்பூர் கூலிப்பாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'பிரோடிகி அவார்டு -2023' என்ற பெயரில் மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவை பள்ளி பொருளாளர் ராதாராமசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் முன்னாள் ஆலோசகர் வி.பொன்ராஜை வாழ்த்தி வரவேற்றுப்பேசினார். விழாவில் மழலையர் மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் நடனம் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி செயலாளர் ராமசாமி–மாதேஸ்வரனும், துணை செயலாளர் சிவப்பிரியா- மாதேஸ்வரனும் பரிசுகளை வழங்கினர். முடிவில் பள்ளி முதல்வர் அனிதா நன்றி கூறினார்.
- ஸ்ரீ.ல.ஸ்ரீ.ச. நடராஜ சுவாமிகள் முன்னிலையில் பூஜை நடந்தது.
- விழாவில் மாணவ-மாணவிகள் விநாயகர் போல் வேடமிட்டு, நாடகம், பாடல்களுடன் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் கூலிபாளையத்தில் உள்ள விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கூனம்பட்டி ஆதின திருமடம் ஸ்ரீ.ல.ஸ்ரீ.ச. நடராஜ சுவாமிகள் முன்னிலையில் பூஜை நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சக்கரவர்த்தி பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரி தலைவர் அருட்செல்வம், ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி பொருளாளர் மஞ்சு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மோகன்குமார், சர்கார் பெரியபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னச்சாமி, கூலிபாளையம் (ஜே.சி.பி.) அண்ணாதுரை, கோபால், ஜெயமுருகன் லாரி சர்வீஸ் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் தாளாளர் ஆண்டவர் யு.ராமசாமி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். விழாவில் மாணவ-மாணவிகள் விநாயகர் போல் வேடமிட்டு, நாடகம் நடத்தி பாடல்கள் பாடி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் ராதா ராமசாமி, செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணை செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன், பள்ளியின் முதல்வர் அனிதா ஆகிேயார் கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர் :
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசப்பற்றை பறைசாற்றும் விதமாக திருப்பூர் கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நடந்தது. பேரணிக்கு பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ஏ.ராமசாமி தலைமை தாங்கினார்.
மேலும் 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நாடு முழுவதும் அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததை முன்னிட்டு, மாணவ-மாணவிகள் தேசிய கொடியை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
- 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர்.
- 36 மாணவ மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் கூலிபாளையத்தில் உள்ள விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவமாணவிகள் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர்.
12ம் வகுப்பு தேர்வெழுதிய 210 மாணவர்களில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 64 மாணவ மாணவிகளும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 113 மாணவ மாணவிகளும் பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளி அளவில் மாணவன் கதிரவன் 600க்கு 587 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி கோபிகா 586 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடமும், மாணவி சுவாதி மற்றும் சௌமியா ஆகிய இருவரும் 3 ம் இடமும் பிடித்துள்ளனர்.
இயற்பியலில் 4 பேர், வேதியியலில் ஒருவர், கணிதத்தில் 3 பேர், கணினி அறிவியலில் 3பேர், உயிரியலில் 5பேர், கணக்குப்பதிவியலில் 8 பேர், கணினி பயன்பாட்டியலில் ஒருவர், வணிகக்கணிதத்தில் 4பேர் மற்றும் வணிகவியலில் 7 பேர்ஆகிய 36 மாணவ மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வெழுதிய 135 மாணவ மாணவிகளில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 37மாணவ மாணவிகளும் 400 மதிப்பெண்களுக்கு மேல் 78 மாணவ மாணவிகளும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி அளவில் மாணவி யஷீதா தஷ்னீம் 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி வைஷ்ணவி 486 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், மாணவி மதுமிதா 485 மதிப்பெண்கள்பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.
கணிதத்தில் 6 பேர், அறிவியலில் 7 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.
10,12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளைப் பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமி மற்றும் பொருளாளர்ராதா, செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணை செயலாளர்சிவப்பிரியா மாதேஸ்வரன்மற்றும் முதல்வர்அனிதா ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்