என் மலர்
நீங்கள் தேடியது "கில்கிறிஸ்ட்"
- ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
- உலகக்கோப்பைக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா, மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
அகமதாபாத்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட், அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான் முன்னேறும் என்று நினைக்கிறேன். அதேபோல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
உலகக்கோப்பைக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா, மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதனால் ஆஸ்திரேலியா, கொஞ்சம் முழு வலிமை கொண்ட அணியை உலகக்கோப்பைக்கு பெறுவார்கள்.
ஆடம் ஜம்பா உலக தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர். அவர் 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது முழு திறமையை காட்டி உள்ளார். தற்போது அவருக்கு 50 ஓவர் உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி தனது அனுபவத்தை, எதிரணி பேட்டிங் வரிசைக்கு எதிராக பயன்படுத்த வேண்டும். பயமின்றி விளையாட வேண்டும். டேவிட் வார்னர், முன் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன். அவர் எப்போதும் ஆக்ரோஷமான ஆட்டத்தை கொண்டவர். அவர் நன்றாக விளையா டினால் எதிரணியினர் பயப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 8 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பிரிஸ்பேன்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
2வது போட்டியில் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 1997 -ம் ஆண்டில் பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதும் வர்ணனையில் ஈடுபட்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா அருகில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட்டை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டார்.
கண் கலங்கியபடி வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு லாரா வாழ்த்துகள் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ரோகித் சர்மா ஜூன் மாதம் நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்லமாட்டார்.
- இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பும்ரா இருக்க முடியுமா என்பது தெரியவில்லை.
சிட்னி:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோசமான பார்ம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில் தானாக முன்வந்து விலகினார். இதனால் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டன் பொறுப்பை கவனித்தார். சிட்னி டெஸ்டில் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறிய போது, விராட் கோலி பொறுப்பு கேப்டனாக செயல்பட்டார். ரோகித் சர்மா இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது சந்தேகம் தான். அதனால் புதிய டெஸ்ட கேப்டனை நியமிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்ஷிப் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியதாவது:-
ரோகித் சர்மா ஜூன் மாதம் நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்லமாட்டார். அவரது இலக்கு அனேகமாக சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியாக இருக்கும். அது முடிந்ததும் ஓய்வு பெற்று விடுவார் என்று நினைக்கிறேன்.
இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பும்ரா இருக்க முடியுமா என்பது தெரியவில்லை. அது அவருக்கு சவாலானதாக இருக்கும். அதனால் அடுத்த கேப்டனாக யார் வருவார்? கோலியை மறுபடியும் கேப்டன்ஷிப்புக்கு கொண்டு வர முயற்சிப்பார்களா? என்னை கேட்டால் கோலி மீண்டும் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்தியாவுக்கு இது சவாலான கால கட்டமாகும். மூத்த வீரர்கள் வெளியேறினால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல திறமையான வீரர்களை உருவாக்கியுள்ளது. அதனால் 1 முதல் 11-வது வரை இந்த வரிசைக்கும் புதிய வீரர்களை கொண்டு வர முடியும். அதற்காக சர்வதேச போட்டியில் அது உடனடியாக வெற்றியை தேடி தரும் என்று அர்த்தம் கிடையாது. இந்திய அணிக்கு இது சற்று சவாலான நேரமாக இருக்கப்போகிறது. ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் அந்த நாட்டு பவுலர்கள் முழு உடல்தகுதியுடன் இருந்தால், நிச்சயம் ஆதிக்கம் செலுத்துவார்கள்.
இவ்வாறு கில்கிறிஸ்ட் கூறினார்.
- ஆஸ்திரேலிய முதல் இன்னிங்சில் 414 ரன்கள் குவித்தது.
- விக்கெட் கீப்பர் ஒருவரால் டெஸ்ட் போட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது.
காலே:
ஆஸ்திரேலியா-இலங்கை இடையேயான 2- வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. இலங்கை முதல் இன்னிங்சில் 257 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய முதல் இன்னிங்சில் 414 ரன்கள் குவித்தது.
கேப்டன் ஸ்டீவ் சுமித், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தனர். ஸ்டீவ் சுமித் 131 ரன்னும் (10 பவுண்டரி, 1 சிக்சர்), அலெக்ஸ் கேரி 156 ரன்னும்(15 பவுண்டரி, 2 சிக்சர்)) எடுத்தனர்.
156 ரன்கள் குவித்ததன் மூலம் ஆசியாவில் டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை அலெக்ஸ்கேரி முறியடித்துள்ளார்.
இதற்கு முன்பு இலங்கை, வங்காளதேசத்துக்கு எதிராக கில்கிறிஸ்ட் 144 ரன்கள் எடுத்திருந்ததே ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஒருவரால் டெஸ்ட் போட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது. அந்த சாதனையை தற்போது அலெக்ஸ் கேரி முறியடித்துள்ளார்.
- 15 அல்லது 20 பந்துகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் அணியில் இருக்க வேண்டும் என்றார்.
- கடந்த 1½ ஆண்டுகளாக அவரது ஆட்டத்தை பார்த்து எதிரணிகள் பயப்படுகிறார்கள்.
மெல்போர்ன்:
20 ஓவர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் இடம் பெற்று உள்ளார். சிங்கப்பூரில் பிறந்த அவர் அந்த நாட்டு அணிக்காக விளையாடி வந்தார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ், ஐ.பி.எல். போன்ற வெளிநாட்டு 20 ஓவர் போட்டி தொடர்களில் விளையாடிய அவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டு அணியில் வாய்ப்பு அளித்து உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரின் 3-வது ஆட்டத்தில் டிம் டேவிட் 27 பந்தில் 54 ரன் எடுத்து அசத்தினார்.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் டிம் டேவிட்டுக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஆடும் லெவனில் டிம் டேவிட் இடம்பெற வேண்டும். கடந்த 1½ ஆண்டுகளாக அவரது ஆட்டத்தை பார்த்த போது எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் அவரை பார்த்து எதிரணிகள் பயப்படுகிறார்கள்.
15 அல்லது 20 பந்துகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் அணியில் இருக்க வேண்டும் என்றார்.
- தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஒரே அணியில் விளையாடினால் சுவாரஸ்யமாக இருக்கும்.
- தினேஷ் கார்த்திக்கின் பன்முகத்தன்மை, அவரால் மிடில் ஆர்டரில் விளையாடி போட்டியை பினிஷ் செய்ய முடியும்
இந்திய அணியில் நிலவி வரும் ஒரே விவாதம் எதைப் பற்றி இருக்கிறது என்றால்,ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரும் ஆடும் லெவனில் தேர்வு செய்ய வேண்டுமா அல்லது யாராவது ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமா என்ற விவாதம். கடந்த ஆசிய கோப்பை போட்டியில் ரிஷப் பண்ட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தவில்லை.இதனால் வரும் டி20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
இருப்பினும் அணியில் இடது கை பேட்ஸ்மேன் என்ற வகையில் பண்ட் க்கு அணியில் வாய்ப்பு வழங்கப்டுகிறது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற்றிருந்தார்,ரிஷப் பண்ட் க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.இருவரில் யாரை தேர்வு செய்வது என்று கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அணி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் இது குறித்து கூறியதாவது ;
ரிஷப் பண்ட் மிகவும் தைரியமான வீரர். அவர் பந்துவீச்சை எதிர்கொள்ளும் விதம்,அவர் கண்டிப்பாக இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம் பெற வேண்டும் என நினைக்கிறன்.அவர்களால் ஒன்றாக விளையாட முடியும், ஆனால் ரிஷப் பண்ட் கண்டிப்பாக அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இருவரும் ஒரே அணியில் விளையாடினால் சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களால் முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ஒரு அணிக்கு என்ன கொண்டு வருகிறார்கள், தினேஷ் கார்த்திக்கின் பன்முகத்தன்மை, அவரால் மிடில் ஆர்டரில் விளையாடி போட்டியை பினிஷ் செய்ய முடியும். அவர் மிகவும் அருமையான டச் கேமைக் கொண்டுள்ளார்.என தெரிவித்துள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் 3-வது இடத்தில் உள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணி வீரர் முதல் இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மிட்செல் 109 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பேர்ஸ்டோவ்-ஓவர்டேன் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 13 பந்தில் 18 ரன்கள் எடுத்திருந்தார். இதில் ஒரு சிக்சர்கள் அடங்கும். இந்த சிக்சர்கள் மூலம் அவர் சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் 3-வது இடத்தில் (100 சிக்சர்கள்) உள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கில்கிறிஸ்ட் (100 சிக்சர்கள்) சாதனையை பென் ஸ்டோக்ஸ் சமன் செய்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணியின் மெக்கல்லம் 176 போட்டிகளில் விளையாடி 107 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா வீரர் கில்கிறிஸ்ட் 100 சிக்சர்கள்களுடன் 2-வது இடத்திலும் பென் ஸ்டோக்ஸ் 100 சிக்சர்கள்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். இன்னும் 8 சிக்சர்கள் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தை பிடித்து சாதனை படைப்பார்.