search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டசத்து தொகுப்பு"

    • கள்ளக்குறிச்சியில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பை யூனியன் தலைவர் அலமேலு ஆறுமுகம் வழங்கினார்
    • ஊட்டச்சத்தான உணவுகளை சரியான நேரத்தில் உண்ண வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூனியன் தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கி காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பினை வழங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் சத்ய நாராயணன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் பொய்யா மொழி கலந்து கொண்டு காச நோயால் பாதிக்க ப்பட்டவர்கள் தொடர்ந்து 6 மாதத்திற்கு முழுமையாக மாத்திரை களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்தான உணவுகளை சரியான நேரத்தில் உண்ண வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

    மேலும் காசநோய் பரவும் விதம் குறித்தும் விளக்கம் அளித்தார். இதனை தொடர்ந்து காச நோயால் பாதிக்கப்பட்ட 14 பயனாளிகளுக்கு பச்சைபயிறு, வேர்கடலை; நாட்டுச்சக்கரை, கொண்டக்கடலை, அரிசி, முட்டை உள்ளிட்ட 11 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது களப்பணியாளர் சுமதி, சுகாதார பார்வையாளர் லட்சுமி உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

    ×