என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நெல்லை ராயல் கிங்ஸ்"
- நெல்லை ராயல் கிங்ஸ் 14 பந்துகள் மீதமிருந்த நிலையில், இலக்கை எட்டியது.
- அஜிதேஷ் 25 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்கள் குவித்தார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடின. முதலில் ஆடிய சேலம் அணியில் கவின் 48 ரன்களும், டேரில் பெராரியா 60 ரன்களும் விளாச, அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் 14 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது.
துவக்க வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் சூரியபிரகாஷ்- பாபா அபராஜித் இருவரும் பொறுப்புடன் விளையாடி, ஸ்கோரை உயர்த்தினர். சூரிய பிரகாஷ் 35 ரன்களும், அபராஜித் 32 ரன்களும் அடித்தனர். பாபா இந்திரஜித் 15 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் அஜிதேஷ் அதிரடியாக ஆடி பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்டார். அஜிதேஷ் 25 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். ஜிதேந்திர குமார் ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் சேர்த்தார்.
இதனால் நெல்லை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் நெல்லை அணி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
- ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையிலும், பெராரியோ நிலைத்து நின்று நம்பிக்கை அளித்தார்.
- நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராயல் கிங்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர்கள் ஜமால் (11), கோபிநாத் (10) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவின் 37 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் விளாசினார். அதன்பின், டேரில் பெராரியோ, நெல்லை பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் சேர்த்தார்.
மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையிலும், பெராரியோ நிலைத்து நின்று நம்பிக்கை அளித்தார். அவர் 44 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார்.
இதனால் சேலம் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. பெராரியோ 60 ரன்களுடன் களத்தில் இருந்தார். நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர். ஆர்யா யோகன் மேனன், சஞ்சய் யாதவ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. நெல்லை ராயல் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்