என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிளஸ்1 தேர்வு"
- சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
- மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
சென்னை:
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற்றது. பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் 13-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெற்றது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.40 லட்சம் மாணவ-மாணவிகளும், பிளஸ்-1 பொதுத்தேர்வை 7.70 லட்சம் மாணவ-மாணவிகளும் எழுதினார்கள். இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கி மே 4-ந்தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கும், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியாகிறது. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரங்களை www.tnresults.nic.in, www.dge.in.gov.in ஆகிய இணையதளத்தில் மாணவ-மாணவிகள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.
அதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை அலுவலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன.
- புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 43 பேரில் 5 ஆயிரத்து 773 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
- தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 802 பேரில் 7 ஆயிரத்து 721 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த மே மாதம் நடந்த பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் 90.90 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை, காரைக்காலில் அரசு பள்ளியில் 81.97 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 142 மாணவர்கள், 7 ஆயிரத்து 703 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 845 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இதில் 6 ஆயிரத்து 153 மாணவர்கள், 7 ஆயிரத்து 341 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 494 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 43 பேரில் 5 ஆயிரத்து 773 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 802 பேரில் 7 ஆயிரத்து 721 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
புதுவையில் மட்டும் அரசு பள்ளியில் தேர்வு எழுதிய 5 ஆயிரத்து 451 பேரில் 4 ஆயிரத்து 494 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 7 ஆயிரத்து 15 பேரில் 6 ஆயிரத்து 954 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காரைக்காலில் மட்டும் அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய ஆயிரத்து 592 பேரில் ஆயிரத்து 279 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 787 பேரில் 767 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 155 அரசு, தனியார் பள்ளிகளில் 70 சதவீத பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
புதுவையில் மட்டும் 58 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. காரைக்காலில் 12 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 53 அரசு பள்ளிகளில் புதுவையில் ஒரு பள்ளி மட்டும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களில் இயற்பியல் 17, வேதியியல் 4, உயிரியல் 34, கணிப்பொறி அறிவியல் 24, கணிதம் 17, பொருளியல் 23, வணிகவியல் 21, கணக்குப்பதிவியல் 43, வணிக கணிதம் 5, கணிணி பயன்பாடு 60, விலங்கியல் 2 பேர் என மொத்தம் 250 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
- பிளஸ்-1 தேர்ச்சியில் மாணவர்களை விட மாணவியர் 10.13 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- மொத்தம் 90.07 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை:
பிளஸ்-1 தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட் டுள்ளது.
தமிழகம்-புதுச்சேரியில் பிளஸ்-1 தேர்வு எழுதிய மொத்த மாணவ-மாணவிகள் 8 லட்சத்து 43 ஆயிரத்து 675 பேர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7 லட்சத்து 59 ஆயிரத்து 856 பேர் ஆகும்.
இதில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 612 மாணவிகளும் (94.99 சதவீதம்), 3 லட்சத்து 48 ஆயிரத்து 243 மாணவர்களும் (84.86 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி அடைந்துள்ளார்.
பிளஸ்-1 தேர்ச்சியில் மாணவர்களை விட மாணவியர் 10.13 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 90.07 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் 2020-ல் தேர்ச்சி 96.04 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 2,605. இதில் அரசு மேல்நிலைப்பள்ளி எண்ணிக்கை 103. அறிவியல் பாடத்தில் 93.73 சதவீதம், வணிகவியல் பாடப்பிரிவில் 85.73 சதவீதம், கலைப்பிரிவுகளில் 72.49 சதவீதம் தொழிற்பாட பிரிவுகளில் 76.15 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இயற்பியல் 94.56 சதவீதம், வேதியியல் 94.42 சதவீதம், உயிரியல் 95.99 சதவீதம், கணிதம் 95.56 சதவீதம், தாவரவியல் 87.98 சதவீதம், விலங்கியல் 87.96 சதவீதம், கணினி அறிவியல் 98.60 சதவீதம், கணக்குப் பதிவியல் 87.91 சதவீதம் தேர்ச்சி சதவீதமாக உள்ளது.
100 சதவிகிதம் மதிப் பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை இயற்பியல் 714, வேதியியல் 138, உயிரியல் 383, கணிதம் 815, தாவரவியல் 3, விலங்கியல் 16, கணினி அறிவியல் 873, வணிகவியல் 821, கணக்கு பதிவியல் 2,163, பொருளியல் 637, கணினி பயன்பாடு-2,186, வணிக கணிதம் மற்றும் புள்ளியல் 291 ஆகும்.
4,470 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதியதில் 3,899 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 99 பேர் தேர்வு எழுதியதில் 89 பேர் தேர்ச்சி பெற்றனர்.
கடந்த 2020-ம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்வு எழுத வராத மாணவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 677. இந்த ஆண்டு தேர்வு எழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 376 ஆகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்