என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிரந்தரமாக"

    • தற்காலிக நியமன நடைமுறையை கைவிட்டு நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    கரூர்:

    தற்காலிக ஆசிரியர் நியமன நடைமுறையை கைவிட்டு, நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமையில் கரூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

    கரூர் வட்டாரச் செயலாளர் அருள்குழந்தை தேவதாஸ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜெயராஜ் இயக்க செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் தமிழரசி நன்றி கூறினார்.

    கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணி நிரவலில் சென்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கிட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    பள்ளிகளில் ஆசிரியர்களை தற்காலிக நியமனம் செய்ய உள்ள நடைமுறையை கைவிட்டு மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்களை நிரந்தரமாக பணியமர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். எண்ணும், எழுத்தும் திட்டம் குறித்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

    . பயிற்சிகளில் கலந்து கொள்ளும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் மதிப்பூதியம் வழங்கவேண்டும். காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற கரூர் மாவட்ட சங்க நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட அனைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளையும் உடனடியாக கரூர் மாவட்ட கல்வித்துறை ரத்து செய்யவேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×