என் மலர்
நீங்கள் தேடியது "காவிரி தீர்ப்பு"
- ஏப்ரல் 25ந் தேதி கொடிவேரி பாசன பகுதி நெல் சாகுபடிக்கு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
- காவிரி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய நீர் அளவு 3.48 டி.எம்.சி., மட்டுமே.
திருப்பூர் :
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தவிவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கீழ்பவானி விவசாயிகள் நல சங்க தலைவர் நல்லசாமி பேசியதாவது:-
கடந்த 1924ம் ஆண்டில் அப்போதைய மைசூர் சமஸ்தானம் மற்றும் மதராஸ் மாகாணத்துக்கும் இடையே, காவிரி வடிநில உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.அதன்படி கோடை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க கூடாது.காவிரி தீர்ப்பிலும் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.தீர்ப்புக்கு மாறாககோடையில் 2022 ஏப்ரல் 25ந் தேதி கொடிவேரி பாசன பகுதி நெல் சாகுபடிக்கு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி இறுதி தீர்ப்பின்படி, கீழ்பவானி அணை சம்பா பருவத்துக்கு மட்டுமே திறக்கப்பட வேண்டும்.குறுவை பருவத்தில் ஜூன் 16ந்தேதி காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
காவிரி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய நீர் அளவு 3.48 டி.எம்.சி., மட்டுமே. ஆனால் கூடுதலான தண்ணீரை ஒதுக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நீர்வளத்துறையானது விருப்பு - வெறுப்பு அடிப்படையிலேயே ஆதாய அடிப்படையில் நீர் நிர்வாகம் செய்கிறது.தவறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால்அது திருத்திக்கொள்ளப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் ஈரோடு, திருப்பூர் மாவட்ட நிர்வாகங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.