என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாம் பில்லிங்ஸ்"
- 2023-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 10 அணிகள் விளையாடும் என்று கூறப்படுகிறது
2023-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை சேர்ந்த பிரபல வீரர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2023-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 10 அணிகள் விளையாடும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ், 2023-ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்
இவரை கொல்கத்தா அணி ரூபாய் 2 கோடிக்கு ஏலம் எடுத்தது என்பதும், இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் 8 போட்டிகளில் 169 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது
டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப் போவதாகவும் அதனால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாகவும் சாம் பில்லிங்ஸ் அறிவித்துள்ளார்
- நியூசிலாந்து தொடரில் விளையாடிய அதே அணியுடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
- 31 வயதான சாம் பில்லிங்ஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஷஸ் டெஸ்டில் அறிமுகமானார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பு லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடியது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் மோதின. இதில் 3 டெஸ்ட்டிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக இந்தியாவுடன் ஜூலை 1-ந் தேதி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மோத உள்ளது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து தொடரில் விளையாடிய அதே அணியுடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. இந்திய அணிக்கு எதிராக கூடுதலாக சாம் பில்லிங்சை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது.
31 வயதான சாம் பில்லிங்ஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐந்தாவது ஆஷஸ் டெஸ்டில் அறிமுகமானார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் லெவனில் அவர் இடம் பெறவில்லை. கீப்பர் பென் ஃபோக்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்தின் பிளேயிங் லெவன் அணியில் அவர் சேர்க்கப்பட்டார். இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:-
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், சாக் கிராலி, பென் ஃபோக்ஸ், ஜாக் லீச், அலெக்ஸ் லீஸ், கிரேக் ஓவர்டன், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், ஆலி போப், ஜோ ரூட், சாம் பில்லிங்ஸ்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்