என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேவகோட்டை"
- தேவகோட்டை அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
- ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே கார்த்திகை திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 31 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டிற்கு 8 மைல் தூரமும் சின்ன மாட்டிற்கு 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப் பட்டது. இந்த பந்தயம் தேவகோட்டை சிவகங்கை சாலையில் நடைபெற்றது. பெரிய மாடு, சின்ன மாடு என்று 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரியமாட்டில் முதலாவது மதுரை மாவட்டம் அவனியாபுரம் சாமிகுமார், 2-வது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கருப்பண சேர்வை அழியாபதி பழனிச்சாமி, 3-வது புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.கே.சேர்வை, 4-வது சிவகங்கை மாவட்டம் தானாவயல் வெங்கடாசலம் மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றது. சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதலாவது சிவகங்கை மாவட்டம் சாத்திக்கோட்டை கருப்பையா சேர்வை, இரண்டாவதாக புதுக் கோட்டை மாவட்டம் பாஸ்கரன், 3-வது உடப்பன் பட்டி நந்தகுமார் மாடுகள் வெற்றி பெற்றன.
பந்தயத்தில் கலந்து கொண்ட மாட்டின் உரிமையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப் பட்டது. வெற்றி பெற்ற மாடுகளுக்கு வேட்டி மாலையும் அணி வித்து மரியாதை செலுத்தி மாட்டின் உரிமை யாளர்க ளுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப் பட்டது. சாலையில் இரு புறமும் சுமார் ஆயிரக் கணக்கானோர் கண்டு களித்தனர்.
- தேவகோட்டை நகராட்சி சிறப்பு கூட்டம் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது.
- தற்பொழுது ஆணையாளர் இல்லாததால் நகராட்சியில் பில் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திடுவது தேங்கி உள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி யின் சிறப்பு கூட்டம் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
துணைத் தலைவர்:-குப்பைகளை அள்ளுவதில் பணியாளர்கள் தொய்வில்லாமல் அனைவரும் பணிக்கு வர வேண்டும்.
தி.மு.க. கவுன்சிலர் பாலமுருகன்:- பணியாளர்கள் வரி வசூல் செய்ய காலையில் செல்வதால் அலுவலகப் பணிகளில் தொய்வு ஏற்படு கிறது. இதனால் மாலை 3 மணி முதல் 5 மணி வரை வரி வசூல் செய்தால் நல்லது.
தலைவர் சுந்தரலிங்கம்:- கொரோனா காலத்தில் வரி வசூல் பாக்கி காரணமாக பணியாளர்களின் பணி அதி கரித்து உள்ளது. அதற்கு முன்புள்ள காலங்களில் வரி வசூல் நகராட்சி 100 சதவீதம் செய்து சாதனை புரிந்துள்ளது. சில மாதங்களில் அவை சரி செய்யப்படும்.
துணைத் தலைவர்:- 2019-ம் ஆண்டுக்கான வரி தற்போது வரி உயர்வு உள்ளபடி வசூல் செய்வதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
கவுன்சிலர் பிச்சை யம்மாள்:- எனது வார்டு களில் உள்ள பொது கழிப்பிட கட்டிடத்தில் போர்வெல் சரி செய்ய வேண்டும்.
கவுன்சிலர் சுதா:- தூய்மைப் பணியாளர்கள் அவர்கள் பணிக்கு வரும் போது உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளது.
தலைவர் சுந்தரலிங்கம்:- தனியார் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். இது குறித்து கவனம் செலுத்தப்படும்.
கவுன்சிலர் அய்யப்பன்:- தற்பொழுது ஆணையாளர் இல்லாததால் நகராட்சியில் பில் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திடுவது தேங்கி உள்ளது. இதனால் நகராட்சி நிர்வாக பணிகள் பாதிக்கப்படுகிறது. இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர் சுந்தரலிங்கம்:- அரசு சார்பில் சில தினங்களில் ஆணையாளர் அல்லது பொறுப்பாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வரும்.
கவுன்சிலர் அனிதா:- தற்போது 115 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் எதன் அடிப்படையில் வார்டுகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறார்கள்?
சுகாதார ஆய்வாளர்:- தள்ளுவண்டியில் செல்லும் பணியாளர்கள் சுமார் 250 வீடுகளிலும், பேட்டரி வண்டியில் செல்லும் பணியாளர்கள் சுமார் 400 வீடுகளிலும், மினி வேனில் செல்லும் பணியாளர்கள் சுமார் 800 வீடுகளிலும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் உள்ளனர்.
தி.மு.க. கவுன்சிலர் பாலமுருகன்:- நகராட்சியில் அனைத்து வார்டுகளில் உள்ள பொது சுகாதார கழிப்பறை கட்டிடங்களை முழுமையாக பராமரிப்பு செய்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
தலைவர் சுந்தரலிங்கம்:- இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- தேவகோட்டையில் நாட்கணக்கில் வைத்து விற்கப்படும் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- ஷாகுல் அமீது என்பவர் 10 நாட்களுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விற்பது தெரியவந்தது.
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 1 லட்சத்திற்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள இறைச்சி கடைகளில் விற்கப்படும் ஆட்டுக்கறி சுகாதாரமற்ற முறையிலும், நாட்கணக்கில் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுவதாகவும் புகார்கள் வந்தன.
இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் உதவியாளர் மாணிக் கம் ஆகியோர் தலைமையில் தேவகோட்டை பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னர்.
அப்போது நகைக்கடை பஜாரில் இறைச்சி கடை நடத்தி வரும் ஷாகுல் அமீது என்பவர் 10 நாட்களுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விற்பது தெரியவந்தது. அவருக்கு சொந்தமாக அண்ணாநகர், ஆறாவயல், வெள்ளையன் ஊரணி ஆகிய பகுதி களிலும் இறைச்சி கடை கள் உள்ளன. இங்கும் கெட்டுப்போன இறைச்சி விற்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மேற்கண்ட 4 கடைகளில் இருந்தும் 1000 கிலோ ஆட்டுக்கறி பறிமுதல் செய்யப்பட்டு சாகுல் அமீதுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தேவகோட்டையில் இறைச்சி களுக்காக ஆடுகள் அறுக்கும் போது பரிசோதனை செய்து ரசீது வழங்கி கடைகளுக்கு இறைச்சிகளில் சீல் வைத்து அனுப்பப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த நடைமுறை கடந்த சிலமாதங்களாக பின்பற்றப்படுவது இல்லை. இதனால் சுகாதாரமற்ற நாட்கணக்கில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் விற்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி உட்கொள்ளும் பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
எனவே இனியாவது நகராட்சி நிர்வாகம் கடுமையாக கண்காணித்து ஆட்டு இறைச்சி விற்ப னைக்கு விதிகளை பின் பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
- தேவகோட்டையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
- காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (15-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக தேவகோட்டை டவுன், ராம்நகர், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை, மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்தடை ஏற்படும் என்று மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.
- வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலியானார்.
- தேவகோட்டை தாலுகா ஆய்வாளர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள தளக்காவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமுத்து (38), தனியார் மில்லில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அமுதா (32), இவர்களுக்கு யோகேஸ்வரி (13), புவனேஸ்வரி (12) என 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று இரவு மணிமுத்து வீட்டு மாடியில் நின்று கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மணிமுத்துவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மணிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா ஆய்வாளர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்