என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கஜோல்"
- 'Get ready with me' என்ற ஹேஷ்டேக்குடன் அவை வைரலாகத் தொடங்கியுள்ளன.
- பிரதமர் நரேந்திர மோடியும் டீப் பேக் வீடியோவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அறிவியலின் சமீபத்திய பிரசவமான ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். பலதரப்பட்ட நன்மைகளை ஏஐ தொழில்நுட்பம் உள்ளடக்கியிருந்தாலும் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் அபாயத்தையும் ஏஐ தன்னகத்தே கொண்டுள்ளது.
அந்த வகையில் ஏஐ தொழிநுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் பேக் வீடியோக்கள் பலரது வாழ்க்கையுடன் விளையாடத் தொடங்கியுள்ளது. வீடியோவில் உள்ளவரின் முகத்துடன் வேறு ஒருவரின் முகத்தை இணைத்து வீடியோவில் உள்ளவர் செய்யும் செயல்களை வேறு ஒருவர் செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இதைப் பயன்படுத்தி பிரபலங்களின் முகத்தை விரசமான வீடியோக்களில் இணைத்து இணையத்தில் சிலர் உலாவ விடுகின்றனர்.
சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியும் டீப் பேக் வீடியோவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதிலிருந்து டீப் பேக்கின் அபாயம் குறித்து தொடர்ந்து அவர் எச்சரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் டீப் பேக் வீடியோ வெளியாகி இணையத்தைக் கலக்கிக் கொண்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களில் ஆலியா பட் அலங்காரம் செய்துகொள்வது போல் 'Get ready with me' என்ற ஹேஷ்டேக்குடன் அவை வைரலாகத் தொடங்கியுள்ளன. ஆனால் உண்மையில் அவை டீப் பேக் வீடியோக்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக நடிகை வாமியா காபியின் முகத்துடன் ஆலியா பட்டின் முகம் டீப் பேக் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பிரதமர் மோடி, ராஷ்மிகா மந்தனா மட்டுமின்றி நடிகை கஜோல், கத்ரீனா கைப் உள்ளிட்ட பலரது டீப் பேக் வீடியோக்களும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கஜோலும், பிரபுதேவாவும், ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான 'மின்சார கனவு' படத்தில் இணைந்து நடித்தனர்
- பாலிவுட்டில் உருவாகும் இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சரண் தேஜ் இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் பாலிவுட் படம் ஆகும். இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார்.
கஜோலும், பிரபுதேவாவும், ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான 'மின்சார கனவு' படத்தில் இணைந்து நடித்தனர். இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது இருவருக்கும். படத்தில் இவர்களுக்கு இடையேயான கெமிஸ்டிரி மிக அழகாக படத்தில் வொர்க் அவுட் ஆகி இருக்கும்.
ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது. குறிப்பாக ஸ்ட்ராபெரி பெண்ணே, வெண்ணிலவே வெண்ணிலவே போன்ற பாடல்கள் இன்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வலம் வந்துக் கொண்டுதான் இருக்கிறது.
தற்போது 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கஜோல் மற்றும் பிரபுதேவா ஒன்றாக நடிக்கின்றனர்.
பாலிவுட்டில் உருவாகும் இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சரண் தேஜ் இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் பாலிவுட் படம் ஆகும். அதிரடி திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் ஜிஷு சென்குப்தா, நசிருதீன் ஷா, சம்யுக்தா மேனன், மற்றும் ஆதித்யா ஷீல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிமல் திரைப்படத்திற்கு இசையமைத்த ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசரை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். 27 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
- இந்த வீடியோவிற்கு எதிராக பலர் குரல் கொடுத்தனர்.
டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களில் ஒரு நபரின் உருவத்தில், வேறொரு நபரின் முகத்தை துல்லியமாக பதியச் செய்து போலியாக சித்தரிப்பதாகும்.
சமீபத்தில் இந்த தொழில்நுட்பம் மூலமாக நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைஃப், கஜோல், ஆலியா பட் என பலரின் புகைப்படங்கள் ஆபாசமான முறையில் மார்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்த வீடியோக்கள் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் பலர் இந்த டீப்ஃபேக் (Deepfake) வீடியோவிற்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர்.
இதையடுத்து இது போன்ற போலி வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், பல குழப்பங்களை உருவாக்கிய டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் தற்போது எம்.ஜி.ஆருக்கு உயிர் கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் எம்.ஜி.ஆர் 'பணம் படைத்தவன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்போன போக்கிலே' பாடலை பாடுகிறார். இந்த வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள் பல குழப்பங்களை செய்த டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் தற்போது தான் அருமையான ஒரு செயலை செய்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
A.I மூலம் மறுபடியும் எம்ஜிஆரை வைத்து படம் எடுத்தால் அந்தப் படம் கண்டிப்பா இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் pic.twitter.com/1cZXYZnYKs
— ???? ???? ??? & ???? (@FilmFoodFunFact) November 28, 2023
- நடிகை ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்டில் செல்வது போன்ற வீடியோ வெளியானது.
- அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. சமீபத்தில் முன்னணி நடிகையான ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்டில் செல்வது போன்ற வீடியோ வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து deep fake மூலம் 'டைகர் 3' திரைப்படத்தில் நடிகை கத்ரீனா கைஃப்யின் சண்டை காட்சி மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்துடன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், அந்த வீடியோ deep fake மூலம் போலியாக உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமான ரோஸி பிரீனின் வீடியோவில் அவரது முகத்திற்கு பதிலாக கஜோலின் முகத்தை வைத்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தனியார் நிறுவனம் நடத்திய கலந்துரையாடலில் பங்கேற்றார்.
- அப்போது அவர் கல்வி மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார்.
புதுடெல்லி:
பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தனியார் நிறுவனம் நடத்திய கலந்துரையாடலில் பங்கேற்று பேசுகையில், நம் நாட்டில் மாற்றம் மெதுவாக உள்ளது. நாம் நமது மரபுகள் மற்றும் சிந்தனை செயல்முறைகளில் மூழ்கி இருக்கிறோம். கல்வி அறிவு இல்லாத அரசியல் தலைவர்கள் நம்மிடம் உள்ளனர் என குறிப்பிட்டார்.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் கஜோவின் பேச்சுக்கு சிலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பத்திரிகையாளர் முகமது ஜூபைர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இதில் அவர் யாரையும் குறிப்பிடவில்லை, ஆனால் பல பக்தர்கள் கஜோலின் இந்த அறிக்கையை தங்கள் அன்பான தலைவரை அவமதிப்பதாக எடுத்துக் கொண்டனர் என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்து கஜோல் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் கல்வி மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு கருத்தை மட்டுமே கூறினேன். எனது நோக்கம் எந்த அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்துவது அல்ல, நாட்டை சரியான பாதையில் வழிநடத்தும் சில சிறந்த தலைவர்கள் நம்மிடம் உள்ளனர் என பதிவிட்டிருந்தார்.
- பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கஜோல்.
- இவர் தமிழில் மின்சார கனவு, விஐபி -2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கஜோல். இவர் இந்தியில் பிரபல நடிகர்களாக வலம் வரும் ஷாருக்கான், சல்மான் கான் போன்ற டாப் நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். நடிகை கஜோல் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தமிழில் மின்சார கனவு, தனுசுடன் விஐபி -2 ஆகிய படங்களிலில் நடித்து உள்ளார். இந்நிலையில், நடிகை கஜோல் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். எப்போழுதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், "என் வாழ்க்கையின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், "சமூக ஊடகங்களிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை.
சிலர் இதனை நடிகை கஜோல் நடித்து அடுத்து வரவிருக்கும் வெப் தொடரான' தி குட் வைப் - அமெரிக்க கோர்ட்ரூம்' நாடகத்தை விளம்பரப்படுத்துவதற்கான உத்தியாக இருக்கும் என்று கூறுகின்றனர். நடிகை கஜோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே பதிவிட்ட அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஷாருக்கான், கஜோல் ஆகியோர் நடித்த படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது.
- தில்வாலே லே ஜயாங்கே, கபி குஷி கபி கம் போன்ற படங்களை ரீ மேக் செய்யவேண்டும் என்று யாரும் நினைக்கக்கூடாது என்று நடிகை கஜோல் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் ரசிகர்களிடம் வெற்றி பெற்ற திரைப்படங்களாக இருக்கும் படங்களை தற்போது ரீ மேக் செய்யும் கலாச்சாரம் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் தமிழில் பில்லா ரீ மேக் செய்யப்பட்டது. இதே போல இந்தியில் பல ஆண்டுகள் ஓடி சாதனை புரிந்த திரைப்படம் தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே திரைப்படம். இது 1995ம் ஆண்டு வெளியானது. மும்பையில் ஒரு திரையரங்கத்தில் மட்டும் தொடர்ந்து பல ஆண்டுகள் இந்தத் திரைப்படத்தைத் திரையிட்டு வந்தனர்.
கஜோல்
ஷாருக்கான், கஜோல் ஆகியோர் நடித்த படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்தப்படம் குறித்து சில நாட்களுக்கு முன்பு பேசிய நாயகி கஜோல், தில்வாலே லே ஜயாங்கே, கபி குஷி கபி கம் போன்ற படங்களை ரீ மேக் செய்யவேண்டும் என்று யாரும் நினைக்கக்கூடாது. அந்த மேஜிக்கை கொண்டு வரமுடியாது. அதை எவ்வளவு சிறப்பாக எடுத்தாலும் அந்த உணர்வைக் கொடுக்க முடியாது. என்று கூறியிருக்கிறார். அவர் இதை இதற்கு முன்பும் வலியுறுத்திக்கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2022-ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் தேர்வுக்கு ஆஸ்கர் குழு 397 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
- இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா மற்றும் நடிகை கஜோல் இடம் பெற்றுள்ளனர்.
திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
ஆண்டு தோறும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர் விவரம் மாறுபடும். இதைத்தொடர்ந்து, 2022-ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு 397 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சூர்யா - முதல்வர் ஸ்டாலின்
இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் கஜோலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், தென்னிந்தியாவில் இருந்து ஆஸ்கர் பேனலுக்கு செல்லும் முதல் நடிகர் என்ற சிறப்பை சூர்யா பெற்றுள்ளார். நடிகர் சூர்யாவை பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, @TheAcademy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது பாராட்டுகள்!
— M.K.Stalin (@mkstalin) June 29, 2022
வானமே எல்லை!
- திரையுலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது.
- ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
ஆண்டு தோறும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர் விவரம் மாறுபடும். இந்நிலையில், ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நடிகர்கள், இயக்குனர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு நடைபெற்றுள்ளது.
கஜோல்
இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த செய்தியானது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மேலும், புதிய உறுப்பினர்கள் ஆஸ்கர் பட்டியலுக்கான திரைப்படங்களை தேர்வு செய்ய வாக்களிக்கும் உரிமை பெறுவார்கள். நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கர் விருது போட்டியில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்