search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாபஸ் strike"

    • புதுக் கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதி விசைப்படகு மீனவர்களுக்கு நேற்றும், இன்றும் மானிய விலையில் டீசல் வழங்கப்படவில்லை
    • கோட்டைப்பட்டினத்தில் இருந்து தினமும் கடலுக்கு செல்லும் 300 விசைப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    புதுக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் மீனவர்களுக்கு அவர்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு விசைபடகுக்கு மாதம் 1,800 லிட்டர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த டீசல் பற்றாக்குறையாகவே இருந்து வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சராசரியாக ஒரு விசைப் படகுக்கு மாதம் 3,200 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. 12 முறை கடலுக்கு செல்வதால் அரசு வழங்கும் மானிய விலையிலான டீசல் பற்றாக்குறையாக இருப்பதால் வெளி மார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து டீசல் வாங்கும் நிலைக்கு விசைப்படகு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே குறைந்தது ஒரு விசைப்படகுக்கு மாதம் 3 ஆயிரம் டீசலாவது மானிய விலையில் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் புதுக் கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதி விசைப்படகு மீனவர்களுக்கு நேற்றும், இன்றும் மானிய விலையில் டீசல் வழங்கப்படவில்லை.

    அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என்று புகார் தெரிவித்துள்ள விசைப்படகு மீனவர் கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். கோட்டைப்பட்டினத்தில் இருந்து தினமும் கடலுக்கு செல்லும் 300 விசைப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதற்கிடையே மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங் கப்பட்டதால் ஸ்டிரைக் வாபஸ் ஆனது.

    ×