என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏ.வி.பி.பள்ளி"
- திருப்பூர் காந்திநகர் ஏவிபி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் மாசில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
- முன்னதாக பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார் .
திருப்பூர்:
திருப்பூர் காந்திநகர் ஏவிபி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் மாசில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது .
ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் லட்சுமி பூஜை வழிபாடு செய்து கார்த்திகை தீபங்களை ஏற்றி ஒளிபரவச் செய்தும் வண்ணமலர்களால் பள்ளியை அலங்கரித்தும் தீபத்திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் மாணவர்கள் தீபத்திருநாளை கொண்டாடும் முறைகளை விளக்கும் நாடகங்களையும் நடனங்களையும் நிகழ்த்தி மகிழ்வித்தனர். முன்னதாக பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார் . பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா நன்றி கூறினார். கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர் நித்யா ஒருங்கிணைத்தார்.
- விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
- மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன.
திருப்பூர்:
திருமுருகன் பூண்டி ஏ.வி.பி. டிரஸ்ட் நேஷனல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 92-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாணவர்கள் வெண்மை, கருமை, சிகப்பு, மஞ்சள் வண்ணத்தில் ஆடை அணிந்து கலாமின் திருமுகம் தோன்ற அணிவகுத்து அமர்ந்த காட்சியானது கலாமை நேரில் காண்பது போன்ற எண்ண அலைகளை உருவாக்கியது. மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து ராக்கெட் ஒன்றை உருவாக்கி அதன் அருகில் கலாம் நிற்பது போன்று அமைத்திருந்த காட்சியும், கலாமின் நூற்றுக்கணக்கான பொன்மொழிகளை எழுதி மரங்களில் வரிசையாக தோரணம்போல் கட்டியிருந்த காட்சியும் காண்போரை கவர்ந்தது. "பசுமை இந்தியாவை" நினைவுபடுத்தும் விதமாக அவரைப் போலவே வேடமணிந்த மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். மேலும் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில் பள்ளியின் முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு, மேலாளர் ராமசாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக கேடயமும் வழங்கப்பட்டது.
- முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார்.
திருப்பூர்:
திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் 33வது ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார். பொருளாளர் லதா கார்த்திகேயன் குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் பிரியாராஜா வரவேற்று பேசினார். 2021-22ம் கல்வி ஆண்டில் பாடவாரியாக 100 / 100மதிப்பெண்கள் பெற்ற 78 மாணவர்களுக்கு பாரத் டையிங் முருகநாதன் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக கேடயமும் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2022 -23 நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாணவர்களில் வகுப்புவாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு விடுமுறை எடுக்காமல் 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு காமராசரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாள், தந்தையர் தினம், நிறுவனர் தினம், குழந்தைகள் தினம், ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்த தினம், தீரன் சின்னமலை பிறந்த தினம் போன்ற விழாக்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மெல்வின் கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் ரோட்டேரியன் பாபு அந்தோணி, ஆதவன் காட்டன்ஸ் நிர்வாக இயக்குனர் ரோட்டேரியன் பூபதி சான்றிதழும், கேடயமும் வழங்கி பாராட்டினர். ஆண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேச்சர் சொசைட்டி ஆப் திருப்பூர் தலைவர் ரவீந்திரன் காமாட்சி, ஏ.வி.பி. டிரஸ்ட் பிரதாப், நட்ராஜ் சான்றிதழும், பதக்கமும் வழங்கி பாராட்டினர். விழாவில் 1060 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார்.
- விழாவில் மாணவர்களின் பட்டிமன்றம், ஆசிரியர்களின் நகைச்சுவைநாடகம் மற்றும் நடனம் நடைபெற்றன.
- விழாவில் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்ததினம் குழந்தைகள் தின விழாவாக திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளி வெள்ளிவிழா கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின்முதல்வர் பிரியா ராஜா வரவேற்று பேசினார்.விழாவில் மாணவர்களின் பட்டிமன்றம், ஆசிரியர்களின் நகைச்சுவைநாடகம் மற்றும் நடனம் நடைபெற்றன. குழந்தைகள் நேரு போலவே வேடமிட்டு வந்து உற்சாகமாக கலந்துகொண்டனர். மேலும், பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் குழந்தைகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். விழாவின்நிறைவாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதா பானு நன்றி கூறினார். விழாவில் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- திருப்பூர் புஷ்பா நகர் பகுதியில் அமைந்துள்ள தேவாங்கபுரம் பள்ளியிலிருந்து மாணவர்களின்மனிதச் சங்கிலி நடைபெற்றது .
- நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார்.
திருப்பூர்:
திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சிபிஎஸ்இ. பள்ளிமாணவர்கள் ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுனுடன் இணைந்து சாலைப் பாதுகாப்புவிழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினர்.
திருப்பூர் புஷ்பா நகர் பகுதியில் அமைந்துள்ள தேவாங்கபுரம் பள்ளியிலிருந்து மாணவர்களின்மனிதச் சங்கிலி நடைபெற்றது . இதில் மாணவர்கள் விழிப்புணர்வுப் பதாகைகளைஏந்தியும் , சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கூறியும், சாலைப்பாதுகாப்பு குறித்த துண்டறிக்கைகளை வழங்கியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
முன்னதாக மாணவர்கள் புஷ்பா நகர் ரவுண்டானா பகுதியில் சாலைப் பாதுகாப்பு குறித்த தெரு நாடகத்தை நிகழ்த்தி பொதுமக்களிடம் சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கினார். திருப்பூர் கொங்கு நகர் சரக சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் அனில் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சாலைப்பாதுகாப்பின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றி மாணவர்களின் மனிதச் சங்கிலி நிகழ்ச்சியை கொடியசைத்து ெதாடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுனின்தலைவர் கதிர்வேலுடன் இணைந்து பள்ளியின் முதல்வர் பிரமோதினி,ஒருங்கிணைப்பாளர்கள் மோகனா , நித்யா, பள்ளியின் இன்டராக்ட் சங்க நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர்.
- மாணவர்கள் மறைமுக தேர்தல் மூலம் வாக்களித்து தேர்வு செய்தனர்.
- ரேவதி மருத்துவமனையின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
திருப்பூர்:
திருப்பூர் காந்தி நகரில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாணவர் மன்ற தொடக்க விழா நடந்தது. முன்னதாக மாணவர் மன்றத்திற்கான புதிய நிர்வாகிகளை 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்கள் மறைமுக தேர்தல் மூலம் வாக்களித்து தேர்வு செய்தனர்.
அதன்படி மாணவர் மன்ற தலைவர்களாக ஆகாஸ், கீர்த்தனா, துணைத்தலைவர்களாக முகமதுருசைல், ரிதுமிகா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். மேலும் பல்வேறு அணியின் செயலர்கள், துணை செயலர்கள், இணை செயலர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
பள்ளியின் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு ஏ.வி. பி. கல்விக்குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திகே யன் முன்னிலை வகித்தார். ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி பேசினார். பள்ளியின் முதல்வர் ஜி.பிரமோதினி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக திருப்பூர் இந்திய மருத்துவ கழகத்தின் தலைவரும், ரேவதி மருத்துவமனையின் தலைவருமான ஈஸ்வரமூர்த்தி மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முடிவில் பள்ளியின் பாரதி மன்ற இணைசெயலர் மாணவிரிதன்யா நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் வி. மோகனா, கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எஸ். நித்யா ஆகியோருடன் இணைந்து முன்னாள் மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்