search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹேர் டிரையர்"

    • மகளின் இணையதள கல்விக்கு பயன்படும் என்று நினைத்தார்.
    • ஒரு டப்பாவில் எறும்பு கொல்லி மருந்து துகள்கள் இருந்துள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் அருகேஉள்ள வெங்கிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(வயது 40). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் நிறுவனத்திடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் உங்களது செல்போன் எண்ணுக்கு புதிய ஆபர் ஒன்று அறிமுகம் செய்வதாகவும் அதன்படி விலை உயர்ந்த செல்போன் ஆபர்விலையில் ரூ.2500க்கு தருவதாகவும், முகவரி சொன்னால் செல்போனை அனுப்பிவைப்பதாகவும் கூறியுள்ளார்.

    இதனை நம்பிய கண்ணன் சுமார் ரூ.25,000 மதிப்புள்ள அந்த மாடல் செல்போன் தனது மகளின் இணையதள கல்விக்கு பயன்படும் என்று நினைத்தார். இதையடுத்து அவர் தனக்கு செல்போன் அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து நேற்று பல்லடம் தபால் நிலையத்திலிருந்து கண்ணனுக்கு போன் செய்த ஊழியர் ஒருவர் உங்களுக்கு பார்சல் வந்திருக்கிறது என்று கூறியதையடுத்து அங்கு சென்ற கண்ணன் ரூ.2500 பணத்தை கொடுத்து வந்திருந்த பார்சலை பிரித்து பார்த்தார்.

    அப்போது பார்சலில் விலை உயர்ந்த செல்போனுக்கு பதிலாக தலை முடியின் ஈரப்பதத்தை காய வைக்கும் ஹேர் டிரையர் மெஷின் அதனுடன் பவர் பேங்க் என்ற பெயரில் ஒரு டப்பாவில் எறும்பு கொல்லி மருந்து துகள்கள் இருந்துள்ளது. இதனால் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மோசடி செய்த ஆன்லைன் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    ×