என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பள்ளி விழா"
- ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
- பள்ளி விழாவில் மாணவிகள் சாமியாடிய நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை கல்வி அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி பள்ளி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாக்களில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மாணவர்களும் இதில் உற்சாகமாக கலந்து கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை தாங்கினார். தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அப்போது கருப்பசாமி பாட்டுக்கு மாணவர் ஒருவர் உடல் முழுவதும் கருப்பு நிற சாயம் பூசி கையில் அரிவாளுடன் நடனமாட அந்த பாட்டுக்கு மற்ற மாணவர்கள் பாடல் பாடிக்கொண்டு இருந்தனர்.
இதை பார்த்ததும் அங்கு அமர்ந்திருந்த மாணவிகள் சிலர் உணர்ச்சிகரமாக அருள்வந்து ஆடினர். இதனால் ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவிகளை அங்கிருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று அமைதிப்படுத்தினர்.
பள்ளி விழாவில் மாணவிகள் சாமியாடிய நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியது.
- கல்வியை நாம் மகிழ்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும்.
- மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை வழக்கத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
அன்னூர்:
கோவை அன்னூரில் உளள முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்களால் கட்டப்பட்ட புதிய வகுப்பறை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழக தலைமை செயலாளரும், எழுத்தாளருமான இறையன்பு பங்கேற்று கட்டிடத்தை திறந்து வைத்தார்.
சாமிகளுக்குள் சண்டையில்லை. மனிதர்களுக்குள் தான் சண்டை. மனிதன் வாழும் வரை மாணவர்கள் தான். வாழ்வின் கடைசி வரை மனிதர்கள் கற்றுக் கொண்டு தான் உள்ளனர்.
மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது ஒரு கைத்திறணையும் கற்று கொள்ள வேண்டும். இதற்காக கைத்திறண் வகுப்பு மாணவர்களுக்கு எடுக்கப்படுகிறது. கல்வியை நாம் மகிழ்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும்.
தரையில் அமர்ந்து படித்தால் தான் மாணவர்களின் உடலுக்கு நல்லது. வயதானவர்களுக்கு மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணம் தரையில் அமர்வதை தவிர்ப்பதால் தான். இளைஞர்கள் வரை இந்த வலி வருகிறது.
ஒரு பள்ளியின் சிறப்பு கட்டிடங்களால் உயர்ந்தது இல்லை. அதன்மூலம் சிறந்த மனிதர்களை உருவாக்குவதில் தான் உள்ளது. பாடப்புத்தகத்தில் உள்ள தை மட்டும் படிக்கும் ஒருவர் ஒருபோதும் காலப்போக்கை கற்று கொள்ள முடியாது.
பள்ளியின் பாடப்புத்தகம் தவிர வேறு புத்தகங்களையும் படித்தால் தான் சிறந்த அறிவை பெற முடியும். மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை வழக்கத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
எப்போதும் விழிப்புடன் இருப்பவர்கள் தான்வெற்றி பெறுவார்கள். இன்றைய சிறுவர்களிடம் அதிக புத்திசாலித்தனம் உள்ளது.
அதற்கு காரணம் இன்றைய நிலையில் செல்போனில் அனைத்து தகவல்களையும் பெற முடிந்ததால் தான். அதனை நீங்கள் சரியான பணிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
அன்றைய மாணவர்களுக்கு நூலகம் இருந்தது. அன்று மாணவர்களின் மனதில் லட்சியத்தை விதைப்பதற்கு யாரும் இல்லை. படிப்பின் மூலம் எந்தெந்த பணிகள் கிடைக்கும் என்று கூட தெரியாது.
சரியாக படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் உதா சீனம் படுத்தாமல் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து படிப்பை கற்று கொடுக்க வேண்டும்.
அப்போது தான் சராசரி மாணவர்கள் தானாக படிப்பார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தாங்கள் எவ்வளவு சிரமப்பட்டு பணம் சம்பாதிக்கிறோம் என்பதை கூற வேண்டும். அப்போது தான் அவர்களை மேன்மைபடுத்த முடியும். பள்ளியில் படிக்கும் போது செல்போனுக்கு அடிமையாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். மாணவர்கள் போதை வஸ்துகளை பயன்படுத்துவரிடம் இருந்து விலகி செல்லுங்கள். இதனால் மாணவர்கள் சிறந்த இடத்தை அடைய முடியும்.
இவ்வாறு அவர் என பேசினார்.
இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அப்துல் கலாம் நாட்டின் மிகப்பெரிய பொறுப்பினை எட்டுவதற்கு விதையாக அமைந்தது இந்த பள்ளி தான்.
- தொலைதூர கிராமத்தில் இருப்பதாக நினைத்து சோர்வடைய வேண்டாம்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா அவர் படித்த தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் டி.ஜி.பி.சைலேந்திர பாபு கலந்து கொண்டு புதிய கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் காணொலியில் பேசியதாவது:-
அப்துல் கலாம் நாட்டின் மிகப்பெரிய பொறுப்பினை எட்டுவதற்கு விதையாக அமைந்தது இந்த பள்ளி தான். தனியார் அமைப்பு ஏற்படுத்தி கொடுக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
கவனம் சிதறாமல் படிக்க வேண்டும். அப்துல் கலாம் கூறியது போல தூங்க விடாத கனவுகளை துரத்தி கொண்டே இருந்தால் நாளை பெரிய தலைவராகவோ, விளையாட்டு நட்சத்திரமாகவோ, நாட்டை ஆளும் பொறுப்பிற்கோ வர முடியும். அதற்கு அடித்தளம் அமைப்பது கல்வி தான்.
இன்னும் 10 ஆண்டுகளுக்கு பின்பு எப்படி இருக்க வேண்டும் என சிந்தித்து அதற்குரிய முயற்சிகளை தொடருங்கள். தொலைதூர கிராமத்தில் இருப்பதாக நினைத்து சோர்வடைய வேண்டாம். கல்வி நிச்சயம் உங்களை உயர்த்தும். நம்மால் முடியும் என நம்புங்கள். முன்னேறுவீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
- திடீரென மின்சாரம் தடைபட்டதால் அதிகாரிகளும், எம்.எல்.ஏ.க்களும் மின்துறைக்கு போன் போட்டனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. உடனே அதிகாரிகளும், எம்.எல்.ஏ.க்களும் மின்துறைக்கு போன் போட்டனர். இருந்தும் 10 நிமிடம் வரை மின்சாரம் வரவில்லை. இதனால் விழாவை பாதியில் முடித்துக்கொண்டு அமைச்சர் துரைமுருகன் புறப்பட்டு சென்றார்.
- பொதுமுடக்கம் காலத்தில் நம்மில் பலர் பல புதிய திறமைகளை கண்டுபிடித்துள்ளனர். அதனை உரிய வகையில் பயன்படுத்துங்கள்.
- வெற்றியின் வரையறை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மாறுபடுகிறது. கடின உழைப்பையே நம்புங்கள்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியின் 25-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சதீஷ்குமார் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது:-
பொதுமுடக்கம் காலத்தில் நம்மில் பலர் பல புதிய திறமைகளை கண்டுபிடித்துள்ளனர். அதனை உரிய வகையில் பயன்படுத்துங்கள். திரைப்படங்கள் மற்றும் சீரியல்களுக்கு நேரத்தை செலவிட்டு வாழ்க்கையின் சாரத்தை மறந்து விடாதீர்கள்.
வெற்றி என்பது ஒரு நாளில் கிடைப்பது அல்ல. வெற்றியின் வரையறை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மாறுபடுகிறது. கடின உழைப்பையே நம்புங்கள். பள்ளிகளில் நேரடியாக கற்பிக்கப்படும் கல்வி, வலைத்தளங்களில் கிடைக்காது. இணையதள ஆய்வுகள் பள்ளியின் நேரடி கல்விக்கு இணையாக வர இயலாது.
கொரோனா தொற்றுக் காலத்தை நாம் கடந்து விட்டோம். அது ஒரு பின்னடைவு மட்டுமே, கொரோனா காலகட்டத்தில் மாணவர்களுக்கு நடைபெற்ற ஆன்லைன் வகுப்புகள் பங்கேற்றதன் மூலம் அறிவை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அத்தகைய இணையதள வழிகள் தற்போது நமது ஆளுமையை வளர்த்துக் கொள்வதில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்