என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஒன்ஸ் ஜபீர்"
- இறுதி ஆட்டத்தில் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீரை எதிர்கொண்டார்.
- முதல் செட்டை இழந்த எலினா அடுத்த இரு செட்களை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் துனீசியாவின் ஒன்ஸ் ஜபீர், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினாவுடன் மோதினார்.
ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3 என முதல் செட்டை ஒன்ஸ் ஜபீர் கைப்பற்றினார். அடுத்து சுதாரித்துக் கொண்ட எலினா ரிபாகினா 6-2,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இது எலினா ரிபாகினா வென்ற முதல் சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
- விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த வீராங்கனை முதல் முறையாக தகுதி.
- இறுதிப் போட்டியில் விளையாட கஜகஸ்தான் நாட்டு வீராங்கனை தகுதி பெற்றார்.
லண்டன்:
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
முதல் அரை இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீராங்கனை டட்யானா மரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
இதன் மூலம் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதி சுற்றுக்கு எட்டுவது இதுவே முதல் முறையாகும்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானைச் சேர்ந்த எலினா ரைபகினா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் முன்னாள் சாம்பியனான ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
இதன் மூலம் விம்பிள்டன் இறுதிப்போட்டிக்குக்குள் நுழைந்த முதல் கஜகஸ்தான் நாட்டு வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். நாளை நடைபெறம்விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜபீரை, எலினா எதிர்கொள்ள உள்ளார்.
- ஜெர்மனி வீராங்கனை தாட்ஜனா மரியா முதல் முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறினார்.
- 34 வயதான தட்ஜனா மரியா இரு குழந்தைகளின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா, துனீசியாவின் ஒன்ஸ் ஜபீருடன் மோதினார். இதில் 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஒன்ஸ் ஜபீர் அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 97-வது இடம் வகிக்கும் ஜெர்மனியின் ஜூலி நீமையர், சக வீராங்கனை தட்ஜனா மரியாவுடன் மோதினார். இதில் தட்ஜனா மரியா 4-6, 6-2, 7-5 என்ற நேர் செட்டில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
ஜெர்மனியின் 34 வயதான தட்ஜனா மரியா இரண்டு குழந்தைகளின் தாயார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
- ஜபீர் 7-6 (11-9), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
- கால் இறுதியில் ஒன்ஸ் ஜபீர் செக்குடியரசுவை சேர்ந்த மரியா பவுஸ்கோவை சந்திக்கிறார்.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-வது வரிசையில் உள்ள ஒன்ஸ் ஜபீர் (துனிசியா) 24-வது நிலை வீராங்கனை எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) மோதினார்கள்.
இதில் ஜபீர் 7-6 (11-9), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். கால் இறுதியில் அவர் செக்குடியரசுவை சேர்ந்த மரியா பவுஸ்கோவை சந்திக்கிறார்.
மற்ற ஆட்டங்களில் தஜ்னா மரியா, ஜூலி நீமையர் (ஜெர்மனி) வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்