என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சினி ஷெட்டி"
- உலக அழகி போட்டியில் சுமார் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
- ஒவ்வொரு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஒவ்வொரு அழகிகள் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
புதுடெல்லி:
இந்த ஆண்டு உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் மார்ச் 9-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியுடன் உலக அழகி போட்டி முடிவடைகிறது.
27 வருடங்களுக்கு பின்னர், உலக அழகி போட்டி இந்த வருடம் இந்தியாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதனால் உலகம் முழுவதும் உள்ள விளம்பர நிறுவனங்கள், மாடல் உலகின் ஜாம்பவான்கள், தொழிலதிபர்கள் இந்தியாவில் குவிந்துள்ளனர். அழகி போட்டியில் ஜெயிப்பவர்கள், கலந்து கொள்பவர்களை தங்கள் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்ய இப்போதில் இருந்தே விளம்பர நிறுவனங்கள் போட்டியிட தொடங்கியுள்ளன.
இந்த உலக அழகி போட்டியில் சுமார் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஒரு மாத காலம் இந்தியாவின் பல நகரங்களில் உலக அழகியை தேர்ந்தெடுக்கும் பல்வேறு போட்டிகள் நடக்கவுள்ளன. வெறும் அழகினால் மட்டுமின்றி, திறமை, புத்திசாலித்தனம் என அனைத்திலும் சிறந்த ஒருவரை இந்த போட்டியின் மூலம் உலக அழகியாக தேர்ந்தெடுக்கின்றனர்.
ஒவ்வொரு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஒவ்வொரு அழகிகள் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் தொடக்க நிகழ்ச்சி புதுடெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் தங்கள் நாட்டு பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் உலக அழகி போட்டியில் பங்கேற்கும் சினி ஷெட்டி சிவப்பு நிற பனாரஸ் பட்டுப்புடவை அணிந்து காட்சியளித்தார். அந்த படத்தை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் "சேலை நமது கலாச்சாரத்தின் வளமான வரலாற்றையும், நமது அடையாளத்தின் துணியை நெசவு செய்யும் ஆழமான வேரூன்றிய மரபுகளையும் குறிக்கிறது," என்றும் அதுவே சேலையை தேர்வு செய்ததற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- கர்நாடகாவை சேர்ந்தவர் மிஸ் இந்தியா வேர்ல்டு அழகியாக சினி ஷெட்டி தேர்வு.
- இதன் இரண்டாவது இடத்தை ரூபல்ஷெகாவத், மூன்றாவது இடத்தை ஷினதா சவுகான் பிடித்துள்ளனர்.
வி.எல்.சி.சி.-பெமினா மிஸ் இந்தியா வேர்ல்டு 2022 அழகிப்போட்டி பல சுற்றுகளாக நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியின் இறுதி சுற்றுப்போட்டி மும்பையில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில், 31 மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் இருந்து வெற்றிபெற்ற அழகிகள் பங்கேற்றனர்.
அதில் சிறந்த அழகியை தேர்வு செய்ய நேர்காணல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் போட்டி நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த சினிஷெட்டி 'மிஸ் இந்தியா வேர்ல்டு 2022' பட்டத்தை வென்று முதலிடத்தை பிடித்தார். பின்னர் அவருக்கு கிரீடம் சூட்டப்பட்டது. ராஜஸ்தானை சேர்ந்த ரூபல்ஷெகாவத் 2-வது இடத்தையும், உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷினதா சவுகான் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
நடிகைகள் நேகாதுபியா, மலாய்கா அரோரா, நடிகர் டினோமோரியா, வடிவமைப்பாளர்கள் ரோகித் காந்தி, ராகுல் கன்னா, நடன இயக்குனர் ஷியாமக்தவார், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் ஆகியோர் அழகிப் போட்டி இறுதிச் சுற்றின் நடுவர்களாக செயல்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்