என் மலர்
நீங்கள் தேடியது "கல்யாணசுந்தரம்"
- விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினார்.
- அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் சேர்க்க அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் வரும்போது மக்கள் பொறுமையுடன் தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சேஷம்பாடி கிராமத்தில் தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டுக்கொள்வதற்கு அரசாணை வழங்கும் விழா நடந்தது.
விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினார். விழாவில் தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்:-
அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் சேர்க்க அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் வரும்போது மக்கள் பொறுமையுடன் தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும்.
"அனைவருக்கும் எல்லாம் உடனே கிடைத்து விடாது. திருமணம் ஆனால் கூட 10 மாதம் பொறுத்து இருந்தால் தான் குழந்தை பிறக்கும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணம் முடித்த உடனேயோ குழந்தை பிறக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே காதல் செய்து கர்ப்பமானால் மட்டும் தான் திருமணம் ஆன அன்றே குழந்தை பிறக்கும். எனவே, அரசு திட்டங்கள் பயனாளிகளுக்கு கிடைக்கும் வரை சற்று காத்திருக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சால் ஏற்பட்ட அதிர்வலைகள் இன்னும் அடங்காத நிலையில், தற்போது தி.மு.க. எம்.பி.யின் பேச்சு கூட்டத்தில் பங்கேற்ற மக்களையும், நிர்வாகிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் கண்ணியமாக பேச வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறியிருந்த நிலையில், தி.மு.க. எம்.பி.யின் பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
- 11ம் தேதி பொதுக்குழு கூடும், எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பார் என கல்யாணசுந்தரம் தகவல்
- சமூகத்தின் விளிம்புநிலை மக்களை அடையாளப்படுத்தும் வகையில் ஒருவரை தலைவர்களாக மாற்றுவது தவறு இல்லை.
சென்னை:
அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் மாலை மலர் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தலை சந்தித்துள்ள ஒரு கட்சி தங்களின் சாதக பாதகங்களை ஆராயவேண்டிய தேவை உள்ளது. அது எல்லா கட்சிகளுக்கும் உண்டு. அதற்கான பணிகளை செய்கிறபோது, கட்சியின் ஒட்டுமொத்த விருப்பம் என்பது, ஒற்றை தலைமையின் கீழ் கட்சி செயல்பட வேண்டும் என்பதுதான். அதற்கான வேலைகளை செய்கிறார்கள். கட்சியின் 50 ஆண்டு கொண்டாட்டம் நடைபெறும் நிலையில், இந்த ஒற்றை தலைமை பணிகளால் தொண்டர்கள் தங்கள் மனநிலையில் இருந்து மாறமாட்டார்கள்.
தற்போதுள்ள நிலையில் அதிமுக பிளவுபட்டதுபோன்ற பார்வையை உருவாக்குவதற்கு திமுக முயற்சிக்கிறார்கள். அவர்கள் சார்பில் செயல்படும் நடுநிலை அறிவுஜீவிகள் என்று சொல்லக்கூடியவர்கள் இதை செய்ய்கிறாகள். திமுகவின் ஊடகங்களும் இந்த வேலையை மெனக்கட்டு செய்கின்றன. கட்சிக்குள் பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதாவது 70:30 விழுக்காடு ஆதரவு என்றால் பிளவு என்று சொல்லலாம். ஒற்றை தலைமை என்ற கோரிக்கையை கிட்டத்தட்ட 100 விழுக்காடு ஆதரிக்கும்போது பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக பிளவுபடும் என்ற கனவே தவறானது. அப்படி ஒரு செய்தியை தமிழக மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு திமுக பெரிய அளவில் வேலை செய்கிறது. அந்த முயற்சி பலிக்காது. கட்டாயம் 11ம் தேதி பொதுக்குழு கூடுகிறது, எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பார். இது நிச்சயம் நடக்கும்.
அதிமுகவை கட்டாயப்படுத்தி இந்த முடிவைத்தான் எடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு எந்த தலைவரும் இல்லை. அதிமுக தலைவர்களைத் தாண்டி அதிமுக முடிவை யாரும் தீர்மானிக்க முடியாது. அதிமுகவில் எடுக்கும் நடவடிக்கைக்கும் பாஜக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை பாஜகவே விரும்பாது.
சமூகத்தின் விளிம்புநிலை மக்களை அடையாளப்படுத்தும் வகையில் ஒருவரை தலைவர்களாக மாற்றுவது தவறு இல்லை. அது ஆரோக்கியமானது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. தெரிந்துதான் வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். வரலாற்றில் காங்கிரஸ் என்ற கட்சி அழிந்துவிட்டது. பாஜகவுக்கு எதிரான ஒரு கட்சி வேண்டுமெனால், அந்த கட்சி உருவாகித்தான் வரவேண்டும். காங்கிரஸ் கட்சி, பாஜகவை எதிர்க்கும் என்பதில் நம்பிக்கையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.