search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீட்டர்சன்"

    • உண்மையில் டெல்லியில் பிறந்த விராட் கோலி அந்த அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
    • எனவே இது விராட் கோலி கடினமான முடிவை எடுக்க வேண்டிய நேரமாகும்.

    அகமதாபாத்:

    இறுதி கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளிப்பட்டியலில் 3-வது, 4-வது இடம் பிடித்த அணிகளான ராஜஸ்தான் ராயல்சும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

    அதனால் 2008 முதல் தொடர்ந்து 17-வது வருடமாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் பெங்களூரு பரிதாபமாக வெளியேறியது. அதே காரணத்தால் விராட் கோலியின் முதல் ஐபிஎல் கோப்பை கனவு மீண்டும் தகர்ந்தது. ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணிக்காக மொத்தம் 8000 ரன்கள் அடித்துள்ள அவர் இந்த வருடம் 741 ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடினார். இருப்பினும் வழக்கம் போல முக்கிய போட்டியில் மற்ற வீரர்கள் சொதப்பியதால் கோப்பையை முத்தமிடும் வாய்ப்பை கோட்டை விட்ட விராட் கோலி சோகத்துடன் வெளியேறினார்.

    இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் மெஸ்சி, ரொனால்டோ போன்ற கால்பந்து ஜாம்பவான்கள்போல ஆர்சிபி அணியை விட்டு வெளியேறி விராட் கோலி வேறு அணிக்கு விளையாட வேண்டும் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஏற்கனவே சொன்னதை நான் மீண்டும் சொல்கிறேன். மற்ற விளையாட்டுகளின் மகத்தானவர்கள் சில அணிகளை விட்டு வெளியேறி மற்ற அணிகளில் சேர்ந்து வெற்றிகளை கண்டுள்ளனர். அதேபோல கடுமையாக முயற்சித்த விராட் கோலி மீண்டும் ஆரஞ்சு தொப்பியை வென்றும் அவருடைய அணி தோல்வியை சந்தித்தது.

    ஆர்சிபி அணிக்கு அவர் மதிப்பை கொண்டு வருகிறார் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் விராட் கோலி கோப்பைக்கு தகுதியானவர்.

    எனவே கோப்பையை வெல்ல பெற உதவும் அணிக்காக அவர் விளையாடத் தகுதியானவர். உண்மையில் டெல்லியில் பிறந்த விராட் கோலி அந்த அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனவே இது விராட் கோலி கடினமான முடிவை எடுக்க வேண்டிய நேரமாகும்.

    ரொனால்டோ, மெஸ்ஸி, ஹரி கேன் ஆகியோர் தங்களுடைய அணிகளை விட்டுச் சென்று வேறு அணியில் விளையாடி வெற்றி கண்டனர்.

    இவ்வாறு பீட்டர்சன் கூறினார்.

    • லாங் ஆன், லாங் ஆஃப் திசைகளில் ஃபீல்டர்களை பும்ரா நிற்கவைத்திருந்தார்.
    • கடைசி 15 - 20 ஓவர்களில் கூட ஃபீல்டர்களை முன்பு வரவைத்திருந்தால் பேர்ஸ்டோவுக்கு சிரமமாக இருந்து இருக்கும்.

    பர்மிங்கம்:

    இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 284 ரன்கள் சேர்த்தது.

    132 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து வெற்றிபெற இந்திய அணி 378 ரன்கள் நிர்ணயித்தது.

    இந்த நிலையில் நேற்றைய 4-வது நாள் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் பும்ரா சரியாக கேப்டன்சி செய்யவில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது-: பும்ரா தனது யோசனைகளை சரியாகப் பயன்படுத்தவில்லை.

    பேட்ஸ்மேன்களால் சுலபமாக கணிக்க முடியும்படி பந்துவீசிவிட்டனர். அதுமட்டுமின்றி ஃபீல்டிங்கிலும் இந்தியா சரியான வியூகங்களை வகுக்கவில்லை. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடிய போதும், தொடர்ச்சியாக லாங் ஆன், லாங் ஆஃப் திசைகளில் ஃபீல்டர்களை பும்ரா நிற்கவைத்திருந்தார். அது பெரிய முட்டாள்தனம். கடைசி 15 - 20 ஓவர்களில் கூட ஃபீல்டர்களை முன்பு வரவைத்திருந்தால் பேர்ஸ்டோவுக்கு சிரமமாக இருந்து இருக்கும். அதையும் அவர்கள் செய்யவில்லை.

    இவ்வாறு பீட்டர்சன் தெரிவித்தார்.

    ×