search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரவணக்கம் நிகழ்ச்சி"

    • 1999 ஆம் ஆண்டில் கார்கில் போர் 60 நாட்களுக்கு மேலாக நடந்தது.
    • போர் முடிவடைந்த போதிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிர் நீத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக இன்று கல்லூரி வளாகத்தில் கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பேசுகையில் , 1999 ஆம் ஆண்டில் கார்கில் போர் 60 நாட்களுக்கு மேலாக நடந்தது. ஜூலை 26 ம் நாளன்று இப் போர் முடிவடைந்த போதிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிர் நீத்தனர்.

    உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அவர்கள் குடும்பம் நன்றாக வாழ்ந்திட கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது என்றார்.

    நிகழ்ச்சியில் மாணவ செயலர்கள் அருள்குமார் , சுந்தரம் , பூபதிராஜா தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • இலவச மின்சாரத்திற்காக போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • உயிர் நீத்த விவசாயிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    வீரபாண்டி :

    தமிழ்நாடு உழவர்தினத்தையொட்டி இலவச மின்சாரத்திற்காக போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சந்தைப்பேட்டை, தென்னம்பாளையத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி, மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், திருப்பூர் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், திருப்பூர் மாநகர ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், முத்துக்குமார், அல்லாளபுரம் செந்தில், சிவக்குமார், நொச்சிப்பாளையம் முத்துக்குமார். ஈஸ்வரமூர்த்தி மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு உயிர் நீத்த விவசாயிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    ×