search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலம்பரசன்"

    • இயற்கைப் பேரிடராக அறிவிக்க அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தனர்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குத் திரைப் பிரபலங்கள் நிதி வழங்கினர்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும் குறிப்பாக விஜயவாடா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கினர்.

    இதே போன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினார்.

    வெள்ள பாதிப்பு நிதி உதவி வழங்கிய நடிகர் சிம்புவுக்கு ஆந்திர பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 3 லட்சம் நன்கொடை அறிவித்த பிரபல தமிழ் நடிகர் திரு சிலம்பரசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இக்கட்டான காலங்களில் மக்களுக்கு ஆதரவாக இருங்கள், உங்கள் ஆதரவு மாநில அரசின் நிவாரணத் திட்டங்களை வலுப்படுத்தும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • வாழை படம் வருகிற 23-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
    • நடிகர் சிலம்பரசன் வாழை படத்தைப் பார்த்துவிட்டு மாரி செல்வராஜை நேரில் அழைத்துப் பேசியுள்ளார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 23-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    இதையொட்டி படத்தின் Pre Release விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் படம் குறித்து தங்களின் பார்வையை வெளிப்படுத்தினர்.

    அந்த வகையில், நடிகர் சிலம்பரசன் வாழை படத்தைப் பார்த்துவிட்டு மாரி செல்வராஜை நேரில் அழைத்துப் பேசியுள்ளார். மேலும் படம் குறித்த தனது பார்வையை வீடியோவிலும் பேசி பதிவு செய்துள்ளார். வாழை படம் கண்டிப்பாக மக்களுக்கு பிடிக்கும். படம் சிம்பிளான ஒரு படம் தான் ஆனால் படத்திற்குள் அவ்வளவு வலி இருக்கிறது என்றும் சிம்பு தெரிவித்தார்.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கும் படம் பாட்டல் ராதா.
    • குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பா.ரஞ்சித். அதைத்தொடர்ந்து கார்த்தியை வைத்து இயக்கிய மெட்ராஸ் படத்தின்மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார். தனது 3 வது படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்கினார்.

    ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த 2016 வெளியான கபாலி பெரிதும் பேசப்பட்ட நிலையில் தொடர்ந்து ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார். தனது படங்களில் சமூக பிரச்சனைகளை தொடர்ந்து பேசிவரும் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வளம் வருகிறார்.

    இயக்குநராக மட்டுமின்றி நீலம் என்று அமைப்பைத் தொடங்கி சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், ஜே - பேபி, ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இடையில் நீலம் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படம் பேசுபொருளாக மாறியது.

    தொடர்ந்து, இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது. இப்படத்திற்கு 'பாட்டல் ராதா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

    இப்படம் மகிழ்ச்சி, மற்றும் பொழுதுபோக்கு நிரம்பிய எமோஷனல் ரோலர் கோஸ்டாராக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாட்டல் ராதா படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசரை நடிகர் சிலம்பரசன் மற்றும் நடிகர் ஆர்யா தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

    • ஓ மை கடவுளே பார்த்துவிட்டு எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்ததும் அவர்தான்.
    • அறிமுக வீடியோ உண்மை சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது.

    இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் அறிமுக வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்க இருக்கிறார்.

    கலகலப்பான காட்சிகள் நிறைந்த புதிய படத்தின் அறிமுக வீடியோ, அஸ்வத் மற்றும் பிரதீப் இடையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உண்மை கதையை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த வீடியோவை பார்த்த நடிகர் சிம்பு, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

     


    இது தொடர்பாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சிம்பு ரசிகர்களுக்கு வணக்கம். புதிய படத்தின் அறிமுக வீடியோவை பார்த்துவிட்டு தனக்கே உரித்தான ஸ்டைலில் எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தது எஸ்.டி.ஆர். தான். ஓ மை கடவுளே பார்த்துவிட்டு எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்ததும் அவர்தான்."

    "நான் அவருக்கு சொன்ன கதை முற்றிலும் வேறானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அந்த கதைக்கு தயார் என்றால், அதனை துவங்கிவிடலாம்," என்று குறிப்பிட்டுள்ளார். 


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'தக் லைப்' படத்தில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் சமீபத்தில் விலகினர்
    • இந்நிலையில் சிம்பு, அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமாக இருப்பதால் அவரிடம் படக்குழு பேசி வருகிறது

    ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கமல், இயக்குனர் மணி ரத்னம் இணையும் படம் 'தக் லைப்'. இப்படத்தில் த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளனர். படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார் .

    படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக தயாரிக்கின்றன.

    படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. கமல் தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதால், கமல் இல்லாத காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது. படத்தில் நடிகர் கமல் 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியானது.




    'தக் லைப்' படத்தில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் சமீபத்தில் விலகினர். இதனால் அந்த 2 வேடங்களில் நடிப்பதற்கு படக்குழு வேறு நடிகர்களை தேடி வந்தது.

    இந்நிலையில் சிம்பு, அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமாக இருப்பதால் அவரிடம் படக்குழு பேசி வருகிறது. விரைவில் 'தக் லைப்' படத்தில் கமலுடன், நடிகர் சிம்பு இணைந்து நடிக்க உள்ளார்.



    மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் நடிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் சிம்பு விரைவில் கையெழுத்திட உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • விண்ணைத் தாண்டி வருவாயா படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவு.
    • இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

    திரை அரங்குகளில் ஏற்கனவே வெளியாகி, பின் மறு வெளியீட்டில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் ஷாருக்கானின் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக நாள் ஓடிய காதல் திரைப்படம் என்ற பெருமையை சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா சாதனை படைத்துள்ளது.

    கவுதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிலம்பரசன் மற்றும் திரிஷா நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 வருடங்கள் கடந்த நிலையில் ரசிகர்கள் இதனை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

     


    மேலும் சென்னையில் உள்ள மல்டிபிளஸ் திரையரங்கு ஒன்றில் 750 நாட்களுக்கு மேலாக இந்த திரைப்படம் ஓடி கொண்டு இருக்கிறது. இன்றளவும் இந்த படம் இளைஞர்கள், காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்துள்ளார்.
    • ரணம் திரைப்படம் வரும் 23ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

    நடிகர் வைபவ்வின் 25வது படமான ரணம், ஷெரிப் இயக்கத்தில் உருவாகி உள்ளது.

    இந்த படத்தில், நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, பதமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்துள்ளார். அரோள் கரோலி இசையமைத்துள்ளார். ரணம் திரைப்படம் வரும் 23ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

    இந்நிலையில், ரணம் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. டிரெயிலரை நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "வைபவின் 25வது படமான #ரணம்அரம்தாவரேல் வெற்றி பெற என் அன்பு சகோதரனுக்கு வாழ்த்துகள். நீங்கள் இன்னும் பல மைல்கற்களை விரைவில் எட்டுவீர்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

    • கொரோனா குமார் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து விட்டு, படத்தை முடிக்கவில்லை என குற்றச்சாட்டு.
    • நடிகர் சிம்புவுக்கு வேறு படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் மனு.

    நடிகர் சிம்பு செப்டம்பர் 19-ம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும், அளிக்கவில்லை எனில், அவர் மற்ற படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக 2021-ம் ஆண்டு "கொரோனா குமார்" என்ற படத்தில் நடிக்க நடிகர் சிம்பு ரூ. 9.5 கோடி சம்பளமாக பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதைத் தொடர்ந்து ரூ. 4.5 கோடி வரையிலான தொகையை பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு, படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று வேல்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டு இருக்கிறது.

     

    எனினும், "கொரோனா குமார்" படத்தில் நடிக்க நடிகர் சிம்புவுக்கு ரூ. 1 கோடி முன்பணமாக வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளன. அதன்படி நடிகர் சிம்பு "கொரோனா குமார்" படத்தில் நடிக்காமல் மற்ற படங்களில் நடித்து வருவதால், வேல்ஸ் நிறுவனம் நடிகர் சிம்புவுக்கு எதிராக மனுதாக்கல் செய்து இருந்தது.

    இந்த மனு மீதான விசாரணையில் தான், சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சிம்பு ரூ. 1 கோடிக்கான உத்தரவாதம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. 

    • கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்த படம் 'வெந்து தணிந்தது காடு'.
    • இப்படத்தின் மல்லிப்பூ பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதாக சீமான் கூறியுள்ளார்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்த 'வெந்து தணிந்தது காடு' கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    வெந்து தணிந்தது காடு

    இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக மல்லிப்பூ என்று தொடங்கும் பாடல் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரின் முணுமுணுப்பாக இருந்தது. இந்நிலையில், இயக்குனர் சீமான் 'மல்லிப்பூ' பாடலை அண்மை நாட்களாக கேட்டுக்கொண்டே இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


    மல்லிப்பூ பாடல்

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என்னுடைய அன்புத்தம்பி சிலம்பரசன் அவர்கள் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன் என் ஆருயிர் இளவல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைத்து வெளிவந்திருக்கிற 'வெந்து தணிந்தது காடு' படத்தில், என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அக்கா தாமரை அவர்கள் எழுதி, பாடகி மதுஸ்ரீ அவர்கள் இனிமையான குரலில் பாடியிருக்கின்ற மல்லிப்பூ பாடலை அண்மை நாட்களாக எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.


    சீமான் பதிவு

    அயலகத்தில் பணிபுரியும் தன் அருமை கணவனை நினைத்து அன்பு மனைவி பாடுவது போல அமைந்திருக்கும் அப்பாடல் வரிகளும், இசை கோர்ப்பும் தனித்துவமாக அமைந்திருப்பது மனதை மயக்குகிறது. கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும் தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா தாமரை அவர்களுக்கும், அவ்வரிகளுக்கு ஆகச்சிறந்த இசையால் உயிரூட்டியிருக்கும் நம் தலைமுறையின் ஈடுஇணையற்ற இசைத்தமிழன் அன்புஇளவல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்! உங்கள் பணி தொடரட்டும் தொடரட்டும்!

    அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர் அன்புச்சகோதரன் கவுதம் மேனன் அவர்களுக்கும், இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் ஐசரி கணேஷ் அவர்களுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும்..!" என்று பதிவிட்டுள்ளார்.


    • நடிகர் சிலம்பரசனின் தந்தை டி.ராஜேந்தர்.
    • டி.ராஜேந்தர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவர் டி. ராஜேந்தர். இவர் நடிகர் சிலம்பரசனின் தந்தை ஆவார். டி. ராஜேந்தருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.


    குடும்பத்துடன் டி. ராஜேந்தர்

    இதையடுத்து அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நடிகர் சிலம்பரசன் தன்னுடைய பணிகளை நிறுத்தி விட்டு, தன் தந்தையின் மேல் சிகிச்சைகான அனைத்து பணிகளையும் முன்னின்று செய்தார்.

    சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது முழுமையாக டி.ராஜேந்தர் குணமடைந்துள்ளார். மருத்துவர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியதால் வெளிநாட்டிலே ஒரு மாத காலம் தங்கலாம் என குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.


    குடும்பத்துடன் டி. ராஜேந்தர்

    இதுவரையிலும் உடனிருந்து, அனைத்து பணிகளையும் முன்னின்று கவனித்துகொண்ட நடிகர் சிலம்பரசன் தன் தந்தை ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வெடுப்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு, தற்போது படப்பிடிப்பிற்காக சென்னை திரும்பியுள்ளார். 

    ×