search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் மக்கள் இயக்கம்"

    • விஜய் ஆலோசனையின்படி மக்கள் நலன் திட்டங்களை இயக்கத்தின் மூலம் சிறப்பான முறையில் செய்து வருகிறோம்.
    • நூலகத்தில் அமர்ந்து படிக்கும் வசதியும், வீட்டிற்கு புத்தகங்களை எடுத்து சென்று படிக்கும் வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்.

    சென்னை:

    விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர பாட சாலை திட்டத்தை தொடர்ந்து அடுத்த கட்டமாக இளைஞர்கள், மாணவ-மாணவிகளின் வாசிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் தளபதி விஜய் நூலக திட்டம் நேற்று 11 இடங்களில் தொடங்கப்பட்டது.

    முதற்கட்டமாக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் தொகுதி சி.ஐ.டி.யூ காலனி, பாலாஜி நகர் 3-வது தெருவில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பல்லாவரம், அரியலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், சென்னை உள்பட 11 இடங்களில் நேற்று நூலகம் தொடங்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக வருகிற 23-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் 5 இடங்களிலும் கோவையில் 4 இடங்களிலும், ஈரோட்டில் 3 இடங்களிலும், தென்காசியில் 2 இடங்களிலும், சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய 21 இடங்களிலும் புதிய நூலகம் திறக்கப்பட உள்ளது.

    நூலக திட்டம் குறித்து மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியதாவது:-

    விஜய் ஆலோசனையின்படி மக்கள் நலன் திட்டங்களை இயக்கத்தின் மூலம் சிறப்பான முறையில் செய்து வருகிறோம். அந்த வகையில் மாணவ-மாணவிகள், இளைஞர்களின் பொது அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் நூலக திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    முதற் கட்டமாக நேற்று 11 இடங்களில் தொடங்கி உள்ளோம். இரண்டாம் கட்டமாக வருகிற 23-ந்தேதி 21 இடங்களில் புதிய நூலகங்கள் தொடங்க உள்ளோம். விரைவில் 234 தொகுதிகளிலும் படிப்படியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்களின் பார்வை சமூக வலைதளங்கள் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் பொதுமக்களிடையே வாசிப்பு திறன் குறைந்து வருகிறது.

    இதை கட்டுப்படுத்தும் விதத்தில் நூலக திட்டத்தை கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் விஜய் ஆலோசனையின் பேரில் செயல்படுத்தி வருகிறோம். அவரவர் வசதிக்கேற்ப நூலகத்தில் அமர்ந்து படிக்கும் வசதியும், வீட்டிற்கு புத்தகங்களை எடுத்து சென்று படிக்கும் வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நூலகத்தில் மாணவ-மாணவிகளின் பொது அறிவினை வளர்க்கும் வகையில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும்.
    • மாணவ-மாணவிகள் நல்ல முறையில் விஜய் நூலக திட்டத்தினை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

    அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி ஏழை குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காக 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலை திட்டம் தொடங்கப்பட்டு சிறப்புடன் நடந்து வருகிறது. தொடர்ந்து அடித்தட்டு மக்களின் தேவைக்காக இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டது.

    இதன்மூலம் பட்டா மாற்றம், ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீதிமன்ற வழக்கு குறித்த சட்ட உதவிகள் ஏழை பொதுமக்களுக்கு இலவசமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அடுத்த அதிரடி திட்டமாக மாணவ-மாணவிகளின் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு திறனை மேம்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் நாளை முதல் 'தளபதி விஜய் நூலகம்' என்ற பெயரில் புதிய நூலகம் திறக்கப்பட உள்ளது.

    இதுபற்றி விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியதாவது:-

    விஜய் ஆலோசனையின் பேரில் மக்கள் இயக்கத்தின் அடுத்த திட்டமாக நூலகம் திட்டம் நாளை முதல் தொடங்கப்படுகிறது.

    முதல்கட்டமாக நாளை 11 இடங்களில் தொடங்க இருக்கிறோம். செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட தாம்பரம் தொகுதி சி.டி.ஓ. காலனி பாலாஜி நகர் 3-வது தெருவிலும், பல்லாவரம் மும்மூர்த்தி நகர் 5-வது தெருவிலும் அமைக்கப்பட்டுள்ள புதிய நூலகங்களை காலை 10 மணியளவில் நான் தொடங்கி வைக்கிறேன்.

    இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் 3 இடத்திலும், அரியலூர், நாமக்கல் மேற்கு, வடசென்னை கிழக்கு, வேலூர் ஆகிய மாவட்டங்கள் உள்பட 11 இடங்களில் நாளை காலை நூலகம் திறக்கப்பட உள்ளது.

    இரண்டாம் கட்டமாக வருகிற 23-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் 5 இடங்களிலும், கோவை மாவட்டத்தில் 4 இடங்கள், ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்கள், தென்காசியில் 2 இடங்கள் மற்றும் புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 21 இடங்களிலும் நூலகம் தொடங்க இருக்கிறோம். மொத்தம் 32 இடங்களில் நூலகத்தை தொடங்க இருக்கிறோம்.

    இதைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் ஆலோசனையின் படி 234 தொகுதிகளிலும் படிப்படியாக இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும். நூலகத்தில் மாணவ-மாணவிகளின் பொது அறிவினை வளர்க்கும் வகையில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

    தலைவர்கள் வரலாறு, பொது அறிவு புத்தகங்கள், வரலாற்று கதைகள் என பல்வேறு அரிய புத்தகங்கள் நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கும். மாணவ-மாணவிகள் நல்ல முறையில் இந்த திட்டத்தினை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலவச சட்ட மையத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் திறந்து வைத்தார்.
    • பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு உதவி செய்ய வேண்டும்.

    சென்னை:

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்

    அந்த வகையில் அன்னதானம், இரவு நேர பாட சாலை போன்ற புதிய திட்டங்களை அறிவித்து தமிழகம் முழுவதும் அந்த திட்டங்கள் சிறப்பான முறையில் நடந்து வருகிறது.

    ஏழை மக்கள் நலனை கருத்தில் கொண்டு விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள வழக்கறிஞர்களை கொண்ட இலவச சட்ட மையம் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.

    இதையொட்டி முதல் கட்டமாக விஜய் மக்கள் இயக்கத்தினர் வடசென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் தலைவர் தன்ராஜ் ஏற்பாட்டில் இலவச சட்ட ஆலோசனை மையம் நேற்று மாலை தொடங்கப்பட்டது.

    இலவச சட்ட மையத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் திறந்து வைத்தார். தொடர்ந்து விழாவில் புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-

    நமது தளபதி விஜய் ஆலோசனையின்படி மக்கள் திட்டங்களை தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் மக்கள் இயக்கம் மூலம் செய்து வருகிறோம். இப்போது ஏழை பொது மக்கள் வசதிக்காக இலவச சட்ட மையத்தை தொடங்கி உள்ளோம். இந்த சட்ட மையத்தின் மூலம் குடும்பத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான சட்ட ஆலோசனை வழங்க வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்வதும், கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கி உதவி செய்ய வேண்டும். கந்து வட்டி கொடுமயை முற்றிலும் ஒழிக்க பாடுபட வேண்டும்.

    சிறுவர்-சிறுமிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்ய வேண்டும் தனியார் நிறுவனத்தால் வங்கி கடன் வீட்டுக் கடன் வாங்கி பாதிக்கப்படுவோருக்கு சட்ட உதவியும், வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு உதவி செய்ய வேண்டும். சட்டப் படிப்பு படிக்க வரும்புவோருக்கு வழிகாட்ட வேண்டும். பொது பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியில் தீர்வு காண வழி வகைகள் போன்ற மக்களுக்கு பயனுள்ள விடியங்களை நம் இயக்கத்தினர் இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் சிறப்பாக நல்ல முறையில் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இரவு நேர பாட சாலை அமைத்து ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.

    சென்னை:

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வருகிறார்.

    அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்வது மாணவ-மாணவிகளின் கல்வியை மேம்படுத்த அவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்குவது, தளபதி பயிலகம் என்ற பெயரில் இரவு நேர பாட சாலை அமைத்து ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது மட்டுமின்றி தலைவர்கள் பிறந்த நாளையொட்டி அவர்களது சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாளை (2-ந்தேதி) மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நமது மக்கள் இயக்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

    இது மட்டுமின்றி அந்தந்த மாவட்டங்களில் நம் தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகள் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்த வேண்டும்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், ஒன்றிய, நகர தலைவர்கள், பகுதி தலைவர்கள், நிர்வாகிகளுடன் இயக்க கொடிகளுடன் சென்று சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

    காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பதையும், தியாகிகளை கவுரவப்படுத்தும் புகைப்படங்களில் 2 புகைப்படங்களையும் 90039 33964 என்ற வாட்ஸ்அப் நம்பரில் அனுப்ப கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில வாரங்களுக்கு முன்பு வழக்கறிஞர் அணியின் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.
    • ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    நடிகர் விஜய் மக்கள் இயக்க பணிகள் ஒவ்வொன்றும் பெரிய அரசியல் கட்சிகளுக்கு நிகராகும் வகையில் அமைந்து வருகிறது.

    மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு, பட்டினி தினத்தையொட்டி அன்னதானம், தலைவர்கள் சிலைக்கு மாலை மற்றும் ஏழை மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தளபதி விஜய் பயிலகம் என்ற பெயரில் டியூசன் சென்டர், அடுத்ததாக அடித்தட்டு மக்களுக்காக இலவச சட்ட உதவி மையம் என பல்வேறு மக்கள் நல திட்டங்களை செய்து வருகிறார்.

    தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தை மேலும் வலுப்படுத்த அரசியல் கட்சிகளில் உள்ளது போல் அணிகளை உருவாக்கி அதற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இயக்கத்தினரை ஊக்கப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு வழக்கறிஞர் அணியின் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    அந்த வகையில், விஜய் மக்கள் இயக்கத்தில் மகளிர் அணியை வலுப்படுத்துவதற்காக மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வருகிற 9-ந்தேதி பனையூரில் நடைபெற உள்ளது.

    பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 9-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து தெரிவித்துள்ளார்.

    • தற்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் 1600 வாட்ஸ் அப் குழு வைத்துள்ளனர். இதை 10 ஆயிரம் குழுக்களாக அதிகரிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • தகவல் தொழில்நுட்பம் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் தொடர்பு கொள்ள 30 ஆயிரம் பேரை தேர்வு செய்து நியமிக்க முடிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் தொழில்நுட்ப அணியினரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணியினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று விதிமுறைகள் வகுத்து கொடுக்கப்பட்டன. இயக்க தலைமை வெளியிடும் தகவல்களை உடனுக்குடன் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். தேவையற்ற, சர்ச்சைக்குரிய பதிவுகள் போடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தற்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் 1600 வாட்ஸ் அப் குழு வைத்துள்ளனர். இதை 10 ஆயிரம் குழுக்களாக அதிகரிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தகவல் தொழில்நுட்பம் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் தொடர்பு கொள்ள 30 ஆயிரம் பேரை தேர்வு செய்து நியமிக்க முடிவு செய்துள்ளனர்.

    நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்குவதற்கு முன்பு ரசிகர் மன்றத்தை இப்படித்தான் கட்டமைத்ததை பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். நடிகர் விஜய்யும் துணை அமைப்புகளை கட்டமைத்து வருவதை பார்க்கும்போது அடுத்தக்கட்டத்தை நோக்கி வேகமாக நகருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

    தொகுதி வாரியாக சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கியது, ஏழை மாணவ, மாணவிகளுக்கு மாலைநேர இலவச டியூஷன் வகுப்புகள் அடித்தட்டு மக்களையும் கவர்ந்துள்ளது.

    விஜய்யின் வேகமான நகர்வுகள் மற்றும் செயல்பாடுகளை பார்க்கும்போது வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடாவிட்டாலும் ஒரு சில தொகுதிகளில் போட்டியிட்டு பலத்தை சோதித்து பார்க்க முடிவு செய்துள்ளதாக மன்ற நிர்வாகி ஒருவர் கூறினார்.

    • முக்கிய திருவிழாக்கள், தலைவர்களின் பிறந்த நாட்கள், நினைவு நாட்களில் தலைமை உருவாக்கிய போஸ்டர்களையே பகிர வேண்டும்.
    • இயக்கத்தின் சேவைகள் மூலம் பயனடைந்த பயனாளிகளின் பேட்டிகளை அவர்களின் ஒப்புதல் பெற்று சின்னஞ்சிறிய வீடியோவாக வெளியிட வேண்டும்.

    சென்னை:

    அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில ஆலோசனைக் கூட்டம் இன்று பனையூரில் நடந்தது. விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப அணியினரின் செயல்பாடுகள் குறித்து புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-

    தமிழ்நாட்டு மக்களுக்கும் இயக்கத்துக்குமான தொடர்பை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.

    இயக்கத்தின் தலைமை உத்தரவு, இயக்கத்தின் புதிய அறிவிப்புகள், இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் வந்தவுடன் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் தெரிவித்தவுடன் அதனை உரிய ஹேஷ்டாக்குடன் பதிவிட வேண்டும்.

    அணியின் தலைமை தெரிவிக்கும் பதிவுகளை மாநகரம் முதல் ஊராட்சி கிளை வரை உள்ள வாட்ஸ்அப் குழுக்களுக்கு பகிர வேண்டும்.

    முக்கிய திருவிழாக்கள், தலைவர்களின் பிறந்த நாட்கள், நினைவு நாட்களில் தலைமை உருவாக்கிய போஸ்டர்களையே பகிர வேண்டும்.

    இயக்கத்தின் தலைமை ஒரு பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் அணியில் இருப்பவர்கள் அனைவரும் லைக் மற்றும் ஷேர் செய்ய வேண்டும். லைக்ஸ் மற்றும் ஷேரிங் எண்ணிக்கை மில்லியனை சாதாரணமாக தாண்ட வேண்டும்.

    இயக்கத்திற்குள் தற்போது சுமார் 1,600-க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்களும் அதில் சுமார் 3 லட்சம் பேர் இயக்கப் பணிகள் சார்ந்த தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இவை அனைத்தையும் மறுக்கட்டமைப்பு மூலம் சீரமைத்து விரிவாக்கம் செய்து 234 தொகுதிகளிலும் வலுப்படுத்த வேண்டும்.

    இயக்கத்தின் இளைஞரணி, மகளிர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, வணிகர் அணி, விவசாயிகள் அணி உள்ளிட்ட அனைத்து அணிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களையும் இணைக்கும் பாலமாக தகவல் தொழில்நுட்ப அணி செயல்பட வேண்டும். இதனை நிர்வகிக்க மாநகரம், மாவட்டம், ஒன்றியம், நகரம், வட்டம், பகுதி, பேரூர், ஊராட்சி கிளை ஆகிய அனைத்து பகுதிகளுக்கும் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 30 ஆயிரம் பேரை 234 தொகுதிகளிலும் நிர்வாகிகளாக நியமிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

    இயக்கம் செய்து வரும் சேவைகளை தொடர்ந்து வீடியோவாக பதிவிட வேண்டும். அந்த வீடியோவில் எப்போது எந்த பகுதியில் எடுக்கப்பட்டது என்ற விவரங்களை இணைக்க வேண்டும்.

    இயக்கத்தின் சேவைகள் மூலம் பயனடைந்த பயனாளிகளின் பேட்டிகளை அவர்களின் ஒப்புதல் பெற்று சின்னஞ்சிறிய வீடியோவாக வெளியிட வேண்டும். தலைமையின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளை லைக் செய்யவும் ஷேர் செய்யவும் கூடாது. எந்த வகையிலும் தனிநபர் தாக்குதல் இருக்கக் கூடாது. மொழி, இனம், சாதி, மதம் என்ற வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் நல்லிணக்க பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வழக்கறிஞர் அணியின் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 2 நாட்கள் நடந்தது.
    • மக்கள் நல பணிகளில் ஈடுபடும் இயக்க நிர்வாகிகளை சென்னையில் நேரில் அழைத்து பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

    சென்னை:

    நடிகர் விஜய் மக்கள் இயக்க பணிகள் ஒவ்வொன்றும் பெரிய அரசியல் கட்சிகளுக்கு நிகராகும் வகையில் அமைந்து வருகிறது.

    மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு, பட்டினி தினத்தையொட்டி அன்னதானம், தலைவர்கள் சிலைக்கு மாலை மற்றும் ஏழை மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தளபதி விஜய் பயிலகம் என்ற பெயரில் டியூசன் சென்டர், அடுத்ததாக அடித்தட்டு மக்களுக்காக இலவச சட்ட உதவி மையம் என பல்வேறு மக்கள் நல திட்டங்களை செய்து வருகிறார்.

    மக்கள் நல பணிகளில் ஈடுபடும் இயக்க நிர்வாகிகளை சென்னையில் நேரில் அழைத்து பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

    தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தை மேலும் வலுப்படுத்த அரசியல் கட்சிகள் உள்ளது போல் அணிகளை உருவாக்கி அதற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இயக்கத்தினரை ஊக்கப்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு வழக்கறிஞர் அணியின் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் 2 நாட்கள் நடந்தது.

    கூட்டத்தில் இயக்கத்திற்கும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஏற்படும் சட்ட ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    அடுத்ததாக வருகிற சனிக்கிழமை இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணி அறிமுகப்படுத்தப்பட்டு அந்த அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:-

    விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை விஜய் ஆலோசனையின்படி செய்து வருகிறோம். இதில் மக்கள் இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் உற்சாகமாக மக்கள் நல பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து இயக்கத்தின் வழக்கறிஞர் அணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் 2 நாட்கள் நடந்தது.

    இதைத்தொடர்ந்து மக்கள் இயக்க செயல்பாடுகளை சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கும், இயக்கத்தினருக்கும் செயல்படுத்தும் நோக்கத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த பிரிவின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 26-ந்தேதி காலை 8.55 மணிக்கு பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் சுமார் 1200 பேர் கலந்து கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய் மக்கள் இயக்க பிரமுகர் திருமணம் 21-ந் தேதி நடக்கிறது.
    • மதுரை தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் நடத்தி வைக்கிறார்‌.

    மதுரை

    மதுரையில் விஜய் மக்கள் இயக்க தெற்கு புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ்குமார்-பூமாப்பிரியா திருமணம் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

    மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப் பாளர், தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஆர்..தங்கபாண்டி தலைமையில் ஜீவா நகர் பகுதியில் உள்ள மெஜஸ்டிக் மஹாலில் நடைபெறும் திருமணத்தை மதுரை தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர். புதூர் பூமிநாதன் நடத்தி வைக்கிறார்.

    மக்கள் செய்தி தொடர்பு துறை இணை இயக்குனர் பாஸ்கரன், வழக்கறிஞர் கோகுல் தி.மு.க. 7-வது வார்டு நகர் மன்ற தலைவர், விருதுநகர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர், ஆர் சீனிவாசன் உயர்நீதி மன்ற முன்னாள் அரசு வழக்கறிஞர், பி.என். வெங்க டேஸ்வரன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அதிமுக பகுதி துணைச் செயலாளர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள், மதுரை ஆன்லைன் விஜய் பேன்ஸ், தொகுதி ,பகுதி, நகரம், ஒன்றியம் பேரூராட்சி அளவிலான மக்கள் இயக்க நிர்வாகிகள்,நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்து கிறார்கள்.

    • பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் நடைபயணம் தொடங்கினார்.
    • நடைபயணத்தின் 9-ம் நாளான நேற்று மதுரை விளக்குத் தூண் பகுதியில் இருந்து தெப்பக்குளம் வரை பாதையாத்திரை மேற்கொண்டார்.

    தமிழகம் முழுவதும் 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் நடைபயணம் தொடங்கினார். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் முதல் மதுரை மாவட்டத்தில் நடைபயணத்தை ஆரம்பித்தார்.

    செல்லும் வழியெங்கும் அவருக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. புகார் பெட்டியுடன் செல்லும் அண்ணாமலை மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்வதோடு, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறிவருகிறார்.

    மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்னிடம் நெருங்கி வருபவர்களுடன் செல்பி எடுத்தும் கவர்ந்து வருகிறார். இந்த நடைபயணத்தின் போது, தி.மு.க.வையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக சாடிவரும் அண்ணாமலை அ.தி.மு.க. தலைவர்கள் குறித்த விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்.


    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தின் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் பங்கேற்ற ரசிகர்கள்

    இந்தநிலையில் நடைபயணத்தின் 9-ம் நாளான நேற்று மதுரை விளக்குத் தூண் பகுதியில் இருந்து தெப்பக்குளம் வரை பாதையாத்திரை மேற்கொண்டார். இதில் திரளான பா.ஜ.க. தொண்டர்கள் கைகளில் கட்சி கொடியுடன் கலந்துகொண்டனர்.

    அப்போது முனிச்சாலை பகுதி அருகே அண்ணாமலை வருகை தந்த போது மதுரை தெற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற கொள்கை பரப்பு தலைவர் பத்ரி சரவணன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கம் கொடியுடன் கலந்து கொண்டு அவரை வரவேற்றனர்.

    விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சு அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தையும், வரவேற்பையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் அவரது ரசிகர்கள் இதில் பங்கேற்றது பா.ஜ.க.வினரிடையே வரவேற்பை பெற்றது. மேலும் இது அரசியல் விமர்சகர்கள் இடையே பேசும் பொருளாகவும் மாறியிருக்கிறது.

    இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள இணையப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தளபதி விஜய் மக்கள் இயக்க கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை. மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

     

    • நடிகர் விஜய், மக்கள் இயக்கம் சார்பில் பல திட்டத்தை தொடங்கி வருகிறார்.
    • ஏழை மாணவ-மாணவிகளுக்காக இலவச பாடசாலை திட்டம் விஜய் பயிலகம் என்ற பெயரில் தொடங்கி நடந்து வருகிறது.

    விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக விரைவில் மாற்றும் நோக்கத்தில் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டங்களையும் நடிகர் விஜய் அறிவித்து வருகிறார். தமிழகம் முழுவதும் அன்னதானம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு என அரசியல் கட்சிகளுக்கு நிகராக மக்கள் இயக்கம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சில வாரங்களுக்கு முன்பு ஏழை மாணவ- மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு தொகுதி வாரியாக தளபதி விஜய் பயிலகம் என்ற இரவு நேர பாடசாலை தொடங்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கறிஞர் அணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று தொடங்கியது. நாளை வரை இந்த கூட்டம் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 350-க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மக்கள் இயக்கத்தினருக்கும் ரசிகர்களுக்கும் சட்ட ஆலோசனைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான நேர்காணல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யவும் விஜய் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து திரும்பியதும் அந்த பட்டியலை அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் இரவு பாடசாலை திட்டம் போல் ஏழைகள் வசதிக்காக இலவச சட்ட உதவி மையம் விஜய்யின் ஆலோசனைப்படி அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

    இது குறித்து மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியதாவது:-

    விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு மக்கள் நல திட்டங்களை விஜய் ஆலோசனையின்படி சிறப்பான முறையில் செய்து வருகிறோம். ஏழை மாணவ -மாணவிகள் கல்வி பயில இரவு நேர பாடசாலை திட்டத்தை அறிமுகப்படுத்தி அதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பயின்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பயன்பெறுவதற்காக இலவச சட்ட உதவி மையம் மாவட்டம் தோறும் விரைவில் மக்கள் இயக்கம் மூலம் தொடங்க உள்ளோம். அடுத்த வாரம் சென்னை ஐகோர்ட் அருகில் இந்த மையத்தினை தொடங்குகிறோம். முதலில் மாவட்டம் வாரியாக தொடங்கி அடுத்த கட்டமாக தொகுதி வாரியாக இந்த சட்ட உதவி மையம் விரிவுபடுத்தப்படும். ஏழைகள் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்த மையத்தின் மூலம் சட்ட ஆலோசனை வழங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏழை மாணவ-மாணவிகளுக்காக இலவச பாடசாலை திட்டம் விஜய் பயிலகம் என்ற பெயரில் நடந்து வருகிறது.
    • விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் கட்சிகளுக்கு இணையாக நடந்து வருகிறது.

    நடிகர் விஜய் அரசியல் பயணம் வேகமெடுத்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.

    அதுமட்டுமின்றி அவர்கள் மத்தியில் பேசும் போது, ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள். பெற்றோரையும் பணம் வாங்கவிடாதீர்கள் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்த கட்டமாக சமீபத்தில் தமிழகம் முழுவதும் ஏழை மாணவ-மாணவிகளுக்காக இலவச பாடசாலை திட்டத்தை விஜய் பயிலகம் என்ற பெயரில் தொடங்கி நடந்து வருகிறது.

    இவ்வாறு விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் கட்சிகளுக்கு இணையாக நடந்து வருகிறது. தொடர்ந்து மக்கள் இயக்கத்தில் அரசியல் கட்சியில் உள்ளது போல் வழக்கறிஞர் அணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அணியினர் ஆலோசனை கூட்டம் வருகிற 5-ந்தேதி பனையூரில் விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. 6-ந்தேதி கேரள நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியதாவது:-

    வருகிற சனிக்கிழமை இயக்க வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் எனது தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு சட்ட உதவிகள் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் இயக்க வழக்கறிஞர் அணி சார்பில் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    ×