search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடுகள் சாவு"

    • கிராம மக்கள் பீதி
    • நிவாரணம் வழங்க வலியுறுத்தினர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் மதனாஞ்சேரி கிராமத்தில் கடந்த சில நாட்களாக முன்பு வீட்டின் அருகே கொட்டகையில் கட்டி வைத்திருந்த ஆடுகளை மர்ம விலங்கு கடித்ததில் 10 ஆடுகள் இறந்தது.

    இதுகுறித்து கிராம மக்கள் வாணியம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தொடர்ந்து அந்த கிராமத்தில் கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு அதே கிராமத்தை சேர்ந்த திருவேல், கருணாகரன், சங்கத்து வட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் தவமணி ஆகியோர் வளர்த்து வந்த 15 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியது.

    இதில் 7 ஆடுகள் பரிதாபமாக இறந்தது. 8 ஆடுகள் பலத்த காயம் அடைந்துள்ளது.

    தகவல் அறிந்து இன்று காலை வனத்துறையினர் மற்றும் வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கிராம மக்கள் அதிகாரிகளிடம் ஆடுகளை கடித்த மர்ம விலங்கு எது என்பதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் எனவும், இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

      வெள்ளகோவில்:

      வெள்ளகோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாக கரட்டுப்பாளையம், நாச்சிபாளையம், கச்சேரிவலசு, இந்திரா நகர், அய்யனூர், குமாரவலசு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் அப்குதிகளில் இதுவரை நாய்கள் கடித்து 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. இந்நிலையில் வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் தங்கவேல் (வயது 37) என்பவர் ஆடுகளை வளர்த்து ஜீவனம் செய்து வருகிறார். சம்பவத்தன்று தங்கவேல், வழக்கம் போல் தனது ஆடுகளை மேய்த்து பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அடுத்த நாள் காலையில் பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஆடுகளின் நிலைமையை கண்டு தங்கவேல் பதறி போனார். 6 செம்மறி ஆடுகள், 2 வெள்ளாடுகளை நாய்கள் கடித்து குதறி இறந்து கிடந்தன, இதனால் தங்கவேல் மிகுந்த வேதனை அடைந்தனர். மேலும் இப்பகுதியில் தொடர்ந்து தெருநாய்கள், ஆடுகளை கடித்து இறப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் மற்றும் வெறி நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
      • பல இடங்களில் நாய் கடியால் குழந்தைகளும், பொது மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

      நாமக்கல்:

      நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் மற்றும் வெறி நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் நாய் கடியால் குழந்தைகளும், பொது மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

      நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் வீசாணம் பஞ்சாயத்து, விட்டப்ப நாயக்கம்பட்டி கிராமம், ராசா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன், விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார்.

      கடந்த 8-ந் தேதி இரவு அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள் தாக்கியதால், பாஸ்கரனுக்கு சொந்தமான 29 ஆடுகள் மற்றும் 5 கோழிகள் இறந்துவிட்டன.

      அவரது தோட்டத்தில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் குழி தோண்டி, இறந்த ஆடுகள் மற்றும் கோழிகள் புதைக்கப்பட்டன. பாஸ்கரன் குடும்பத்தினர் ஆடு வளர்ப்பை மட்டுமே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். 29 ஆடுகள் ஒரே நேரத்தில் இறந்துள்ளதால் அவர்களின் குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

      எனவே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

      • நேற்றிரவு சோமநாதபுரம் மேம்பாலம் அருகே வந்த போது, சாலையின் நடுவே கிடந்த சக்கரத்தின் மீது லாரி ஏறியது.
      • நிலை தடுமாறி, லாரி கவிழ்ந்து 30 ஆடுகளும் பலியாகின.

      கிருஷ்ணகிரி,

      தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் பாப்பா ரப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் (31). லாரி ஓட்டுநர். அதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (32), ரமேஷ் (31). இவர்கள் மூவரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 30 ஆடுகளை விலைக்கு வாங்கி, ஒரு லாரியில், பாப்பாரப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தனர்.

      கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு சோமநாதபுரம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையின் நடுவே கிடந்த சக்கரத்தின் மீது லாரி ஏறியது. இதில் நிலை தடுமாறி, லாரி கவிழ்ந்தது.

      இந்த விபத்தில், லாரி ஓட்டுனர் சங்கர், நாகராஜ், ரமேஷ் ஆகிய மூவருக்கும் காயம் ஏற்பட்டது. 30 ஆடுகளும் பலியாகின. இதனால், ஓசூர் - கிருஷ்ணகிரி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

      இந்த விபத்து குறித்து, தகவல் அறிந்த போலீசார், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்துக்குள்ளான லாரி, ஆடுகளை அப்புறப்படுத்தினர். போக்குவரத்தை சீர்படுத்தினர். இந்த விபத்து குறித்து, குருபரப்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

      • பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்
      • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்

      செய்யாறு:

      செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியம், ஆலத்தூர் கிராமத்தில் மான்டஸ் புயல் மழை காரணமாக ஆட்டுக்கொட்டகை மீது மரம் முறிந்து விழுந்ததில் 10 ஆடுகள் பலியாகின.

      பாதிக்கப்பட்ட ஆட்டின் உரிமையாளருக்கும், அதே போல் வீரம்பாக்கம் கிராமத்தில் மழையால் வீடு இழந்த மூதாட்டிக்கும், ஒ.ஜோதி எம்எல்ஏ நேரில் சென்று பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆறுதல் கூறி தலா ரூபாய் 5000 பணமும், அரிசி, காய்கறிகள் மளிகை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

      மேலும் மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசின் நிவாரணம் உடனடியாக கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம்கேட்டுக் கொண்டார்.

      நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் திராவிட முருகன், ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் உள்பட பலர் இருந்தனர்.

      • விக்கிரவாண்டியில் நாய் கடித்து குதறியதில் 10 ஆடுகள் இறந்தன.
      • தினம்தோறும் ஆடுகளை மேய்ச்சல் செய்து விட்டு பண்ணையில் அடைத்து வளர்த்து வந்தார்.

      விழுப்புரம்:

      விக்கிரவாண்டி வசித்து வருபவர் ஜாகிர் உசேன் இவருக்கு சொந்தமான சுமார் 50 ஆடுகள்விக்கிரவாண்டி கீழக்கொந்தை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது வீட்டின் அருகே பண்ணை வைத்து வளர்த்து வந்தார். ராமச்சந்திரன் தினம்தோறும் ஆடுகளை மேய்ச்சல் செய்து விட்டு பண்ணையில் அடைத்து வளர்த்து வந்தார் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்து விட்டு பண்ணையில் அடைத்து விட்டு இரவு தூங்கிவிட்டார் .நேற்று இரவு அடையாளம் தெரியாத நாய் ஆட்டுப்பண்ணையில் உள்ளே புகுந்து பன்னையிலிருந்து ஆடுகளை கடித்து குதறியது இதில் பத்து ஆடுகள் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இருந்தன .அதிகாலை எழுந்து பார்த்தபோது 10 ஆடுகள் நாய்கள் கடித்து இறந்து கிடந்தன.

      ×