என் மலர்
நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்"
- அடையார், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஜாபர்கான்பேட்டையில் இன்னும் 2560 ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன.
- திரு.வி.க. பாலம் அருகில் உள்ள மல்லிப்பூ நகரில் தான் அதிக மக்கள் வசிக்கிறார்கள் என்றனர்.
சென்னை:
சென்னை மத்திய பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் மற்றும் அடையார் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அரசு முடிவு செய்து உள்ளது. அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதற்காக கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு குறித்து நடந்த ஆய்வு கூட்டத்தில் எடுத்த முடிவின் படி சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலை முதல் ஆர்.கே.மடம் சாலை வரை 2.9 கி.மீ. நீளமுள்ள பகுதிகள் தூர் வாரப்பட்டு சீரமைக்கப்பட உள்ளன. இந்த பணியில் தமிழக நீர்வளத்துறை, சென்னை மாநகராட்சி, சுற்றுச்சூழல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஆகிய துறைகள் ஈடுபட்டு உள்ளன.
இதற்காக கரையோரம் உள்ள 1200 கான்கிரீட் வீடுகள் மற்றும் குடிசைகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து அவர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டு மாற்று குடியிருப்பு வழங்கப்பட உள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பின்பு அங்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு தூர்வாரப்படும். மூலிகை செடிகள், பூச்செடிகள் வைத்து அழகுப் படுத்தப்பட உள்ளது.
ஆக்கிரமிப்பு எடுப்பதற்கு சேப்பாக்கம் லாக் நகர் மக்களிடம் முன்பு நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கூறுகையில் எங்களுக்கு நாங்கள் தற்போது இருக்கும் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் மாற்று இடம் தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
இங்கு நாங்கள் 4 தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எங்களது வாழ்வாதாரம் இதை சுற்றியே தான் உள்ளது. குழந்தைகள் பள்ளியில் படித்து வருகிறார்கள். எனவே இதில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளோம். அதற்கு அதிகாரிகள் உத்தரவாதம் தந்துவிட்டு வீடுகளை எடுத்து கொள்ளட்டும் என்றார்.
மகாலட்சுமி, கஸ்தூரி, சாரதா என்ற பெண்கள் கூறியதாவது:-
நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் அன்றாடம் பிழைப்பு நடத்தி வாழ்பவர்கள். இந்த பகுதியில் வீட்டு வேலை செய்து பிழைத்து வருகிறோம். திடீரென்று எங்கள் வீடுகளை அகற்றி தொலை தூரத்திற்கு போக சொன்னால் எங்கு செல்வது. எனவே இதனருகே வீடு ஒதுக்கி தந்தால் நல்லது என்றனர்.
அடுத்தகட்டமாக அடையாறு ஆற்றங்கரை ஓரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியை தொடங்கியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, ஜாபர்கான் பேட்டையில் 3 தெருக்கள் உள்ளன. இதில் 61 குடிசைகள் அடையாளம் காணப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக தாணு நகர் பகுதியில் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுக்கப்பட்டு மாற்று இடங்கள் தேர்வு செய்தபின் ஆக்கிரமிப்புகள் எடுக்கப்படும்.
அடையார், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஜாபர்கான்பேட்டையில் இன்னும் 2560 ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. கணக்கெடுக்கும் பணி பருவமழை தொடங்கும் முன்பு கணக்கெடுக்கப்படும். இதில் திரு.வி.க. பாலம் அருகில் உள்ள மல்லிப்பூ நகரில் தான் அதிக மக்கள் வசிக்கிறார்கள் என்றனர். பொது மக்களின் கோரிக்கைகளுக்கு மேயர் பிரியா பதில் அளிக்கையில் குடியிருப்பு வீட்டின் அருகே மாற்று இடம் ஒதுக்க ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றார்.
- கலெக்டர் ஆய்வு
- அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட பாலாற்றங்கரை யோரம் உள்ள சாதிக் பாஷா நகரில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நடை பெற்று வருகிறது.
இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி கலெக்டர் பூங்கொடி, வாலாஜா தாசில்தார் ஆனந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.
- கடந்த மே மாதம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வருவாய் துறையினர் சென்ற போது அங்கு வசித்து வரும் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- அப்போது அதிகாரிகளிடம் கால அவகாசம் மற்றும் மாற்று இடம் வழங்குமாறு கேட்டனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி ராயர்பாளையம் செங்குட்டை பகுதியில் 42 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்தநிலையில் பல்லடம் வட்டத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் செங்குட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அங்கு வசிக்கும் மக்களுக்கு வருவாய் துறை மூலம் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
கடந்த மே மாதம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வருவாய் துறையினர் சென்ற போது அங்கு வசித்து வரும் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அதிகாரிகளிடம் கால அவகாசம் மற்றும் மாற்று இடம் வழங்குமாறு கேட்டனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை நிராகரித்த நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை நேற்று 8-ந்தேதிக்குள் அகற்ற உத்தரவிட்டது.
இந்தநிலையில் இன்று காலை 7 மணிக்கு பல்லடம் தாசில்தார் நந்தகோபால், டி.எஸ். பி. வெற்றிச்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், ரவி, மணிகண்டன், பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார், தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் மாற்று இடம் வழங்கி விட்டுத்தான் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் நந்தகோபால், டி.எஸ். பி. வெற்றி செல்வன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது அந்த பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி, காளியம்மாள், மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் தங்கள் உடலில் மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.
போலீசார் அவர்களை தடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பகுதி மக்கள் மாற்று இடம் வழங்கக்கூடிய பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் என்ற இடத்தை பார்வையிடச் சென்றனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற உள்ளது.