search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.1 கோடிக்கு"

    • ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம்.
    • கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் தள்ளுபடி விலையில் தரமான பட்டாசுகள் விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப் பதாவது:-

    ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த வருடமும் தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தில் உள்ள பொன்னி கூட்டுறவு பண்டகசாலை, என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலை, சுவர்ணபுரி கூட்டுறவு பண்டகசாலை, இளம்பிள்ளை கூட்டுறவு பண்டகசாலை, காடை யாம்பட்டி கூட்டுறவு பண்டக சாலை ஆகியவற்றின் மூலம் சிவகாசியில் உள்ள அங்கீக ரிக்கப்பட்ட பட்டாசுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களி டமிருந்து பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    பொன்னி கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.70 லட்சம், சேலம் கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கம் மூலம் ரூ.9 லட்சம், ஆத்தூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கம் மூலம் ரூ. 7.50 லட்சம், என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலை மூலம் ரூ.4 லட்சம், சுவர்ணபுரி கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.6 லட்சம், இளம்பிள்ளை கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.2 லட்சம், காடையாம்பட்டி கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.1.50 லட்சம் ஆக மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டது.

    கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் தள்ளுபடி விலையில் தரமான பட்டாசுகள் விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் சென்றனர். இந்த பட்டாசு விற்பனையானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதலாக பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சீனாபுரத்தில் வழக்கம்போல கால்நடைச்சந்தை கூடியது.
    • விற்பனை ரூ.1 கோடியே 20 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் வழக்கம்போல கால்நடைச்சந்தை கூடியது.

    இதற்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் ஆகிய ஊர்களில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 100-ம், இதே இன கிடாரி கன்றுகள் 125-ம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

    இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடுகள் 110-ம், இதே இன கிடாரி கன்றுகள் 150-ம் வந்திருந்தன. கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் கால்நடைகள் வரத்து அதிகரித்து இருந்தது.

    விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 வரையிலும்,

    சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும் விலை போனது.

    சீனாபுரம் கால்நடை சந்தையில் கறவை மாடுகள் மற்றும் கிடாரி கன்றுகளின் விற்பனை ரூ.1 கோடியே 20 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தைக்கு கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.
    • விற்பனை. ரூ.1 கோடியை எட்டியது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழக்கிழமை கூடுவது வழக்கம். இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களான கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர் மற்றும் புளியம்பட்டி சுற்றுப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் இந்த வாரம் கூடிய மாட்டுச்சந்தையில் ஜெர்சி மாடுகள், கலப்பின மாடுகள் மற்றும் ஆடு, கோழி, கன்றுகள் போன்ற கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

    இதில் கால்நடைகளின் விற்பனை. ரூ.1 கோடியை எட்டியது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.
    • ரூ.1 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.

    ஈரோடு, அந்தியூர், பவானி, அம்மா பேட்டை, அத்தாணி, சென்னம்பட்டி, பர்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மாடுகளும், எருமை மாடுக ளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

    இதில் மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 49 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 54 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    சுமார் 400-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டு ரூ.1 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.

    • மறைமுக ஏலத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை நடந்தது.
    • பருத்தியை நன்கு வெடிக்க வைத்து எடுக்க வேண்டும்

    அரியலூர்:

    பெரம்பலூர் விற்பனைக்குழுவிற்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம் பருத்தி கொள்முதலுக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இந்த மறைமுக ஏலத்தில் அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி, பெரம்பலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருப்பூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்த பருத்தியை நல்ல விலை கோரி கொள்முதல் செய்தனர். இதில் அதிபட்சமாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 999-க்கு விலை போனது. குறைந்தபட்சமாக பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 689-க்கும், சராசரி போக்கு விலையாக பருத்தி குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 489-க்கும் விலை போனது. மறைமுக ஏலத்தில் மொத்தம் 120.954 குவிண்டால் பருத்தி 623 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

    மறைமுக ஏலம் மூலம் ரூ.1 கோடியே 13 லட்சத்து 69 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு, வேளாண்மை துணை இயக்குனர் சிங்காரம், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார், வேளாண் அலுவலர் ஜோதி, மேற்பார்வையாளர்கள் அழகுதுரை, சுரேஷ் மற்றும் விற்பனைக்கூட பணியாளர்கள் செய்திருந்தனர்.

    மேலும் வியாழக்கிழமைதோறும் இந்த விற்பனை கூடத்தில் பருத்திக்கான மறைமுக ஏலம் நடைபெறும். அதனால் விவசாயிகள் அவசரப்படாமல் தங்களின் பருத்தியை நன்கு வெடிக்க வைத்து எடுக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி பருத்தியை நன்கு உலரவைத்து புதன்கிழமை மாலை 6 மணிக்குள் விற்பனைக்கு எடுத்து வர வேண்டும் என்று விவசாயிகளை விற்பனை கூட அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ×