என் மலர்
நீங்கள் தேடியது "ஜப்பானிய மூளைக்காய்ச்சல்"
- கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
- புனேயில் உள்ள பரிசோதனை மையத்திற்கு சிறுவனிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அனுப்பப்பட்டன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் காய்ச்சல் பாதிப்புக்கு ஆயிரக்கணக்கானோர் உள்ளாகி இருக்கின்றனர். அங்கு டெங்கு மற்றும் எலி காய்ச்சல் வேகமாக பரவி உள்ளது. இந்நிலையில் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் அதிக காய்ச்சல், கழுத்து மற்றும் தலைவலியால் அவதிப்பட்டுள்ளான்.
கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த சிறுவனுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் புனேயில் உள்ள பரிசோதனை மையத்திற்கு சிறுவனிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அனுப்பப்பட்டன. அங்கு பரிசோதித்ததில் அந்த சிறுவனுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- அறிகுறிகள் யாருக்கும் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- சிறுவன் வீடு உள்ள பகுதியில் கொசு ஒழிப்பு உள்ளிட்ட தூய்மை பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொடியத்தூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். க்யூலைக்ஸ் இனத்தை சேர்ந்த கொசுக்களால் இந்த காய்ச்சல் பரவுகிறது.
விலங்குகளையே பாதிக்கும் இந்த காய்ச்சல், மனிதர்களை அரிதாக தாக்குகிறது. சிறுவனுக்கு பாதித்திருக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வேறு யாருக்கும் வந்துள்ளதா? என்று சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். ஆனால் வேறு யாரும் பாதிக்கப்படவில்லை. இந்த நோய்க்கு காய்ச்சல், தலைவலி, சோம்பல் உளிட்டவைகளே அறிகுறிகளாக இருக்கின்றன.
அந்த அறிகுறிகள் வேறு யாருக்கும் இருக்கிறதா? என்று கணக்கிடப்பட்டு வருகிறது. மேலும் மேற்கண்ட அறிகுறிகள் யாருக்கும் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி சிறுவன் வீடு உள்ள பகுதியில் கொசு ஒழிப்பு உள்ளிட்ட தூய்மை பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர்.
- நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் மாவட்ட அதிகாரிகளை சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
- நிலைமையை சமாளிக்க வரும் 16ம் தேதிக்குள் மாவட்ட விரைவுப் பதில் குழுவை அமைக்குமாறு வலியுறுத்தல்.
அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் மலேரியா பரவி பலரது உயிரை எடுக்கிறது. குறிப்பாக, மழைக்கால வெள்ளப் பருவத்தில் வேகமாக பரவும் இந்த காய்ச்சல் மே மாதத்தில் தொடங்கி அக்டோர் மாதம் வரையில் நீடிக்கிறது.
ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில் கடந்த 9 நாட்களில் மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது .
இந்நிலையில், மாவட்ட விரைவுப் பதில் குழுக்களை அமைக்கவும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் மாவட்ட அதிகாரிகளை சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அசாம் மாநில சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் அவினாஷ் ஜோஷி மறஅறும் தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனர் டாக்டர் எம்.எஸ்.லட்சுமி பிரியா ஆகியோர் நேற்று மாவட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில், நிலைமையை சமாளிக்க வரும் 16ம் தேதிக்குள் மாவட்ட விரைவுப் பதில் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.