search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு திட்டம்"

    • ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு உயர்த்தி இருப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.
    • சார் பதிவாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள செய்தி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வீட்டை வாங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று. வங்கி, வங்கியாக அலைந்து திரிந்து, கடன் பெற்று, வீட்டை வாங்கி, அதற்கான உள் வேலைகளை செய்து, கடனுக்கு மாதாந்திர தவணை கட்டி மக்கள் அல்லலுற்று இருக்கின்ற நிலையில், முத்திரை மற்றும் பதிவுக் கட்டணத்தை அநியாயமாக, ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு உயர்த்தி இருப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.

    இந்நிலையில் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதை சுட்டிக்காட்டி, தற்போதுள்ள பத்திரப் பதிவு வருவாயான சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாயினை 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தத் தேவையான நில வழிகாட்டி மதிப்புகளை பரிந்துரைக்குமாறு சார் பதிவாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள செய்தி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபோது என்ன வழிகாட்டி மதிப்பு இருந்ததோ அதே மதிப்பினை தொடர்ந்து கடைபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மார்க்கெட்டை திருமழிசையில் பிரமாண்டமாக கட்டுவதற்கான வடிவமைப்பை தயார் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
    • கோயம்பேட்டை பொறுத்தவரை மெட்ரோ ரெயில் போக்குவரத்தின் முதல் மற்றும் 2-ம் பகுதியின் இணைப்பிடமாக இருக்கிறது.

    சென்னை:

    கோயம்பேடு மார்க்கெட் ஆசியாவிலேயே மிகப் பெரிய மார்க்கெட் என்று பெயர் பெற்றது.

    இந்த மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது. புதிதாக மார்க்கெட் அமையும் இடத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் வணிக வளாகம், நட்சத்திர ஓட்டல், பொழுதுபோக்கு இடம் என்று பிரமாண்டமாக வடிவமைக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள்.

    இதற்காக சி.எம்.டி.ஏ. வால் நியமிக்கப்பட்டுள்ள உலகளாவிய ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான குஷ்மேன் மற்றும் வேக் பீல்டு நிறுவனத்திடம் மார்க்கெட்டை திருமழிசையில் பிரமாண்டமாக கட்டுவதற்கான வடிவமைப்பை தயார் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

    மார்க்கெட்டை முழுவதுமாக திருமழிசையில் அமைக்கலாமா? பாதியை அங்கு கொண்டு செல்வதா? என்று எல்லா சாத்தியக் கூறுகளையும் ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் இருக்கும் கடைகளை மொத்த வியாபாரிகள் சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார்கள்.

    இனி அவர்களை திருமழிசைக்கு மாற்றும் போது அதற்கான இழப்பீடு தொகையையும் வழங்க சி.எம்.டி.ஏ. முடிவு செய்து உள்ளது.

    வியாபாரிகளின் உரிமையை பாதுகாத்து அவர்களுக்கு சரியான இழப்பீட்டையும் வழங்கும் போது தாமாகவே இடம் பெயர ஒத்துக் கொள்வார்கள் என்று கருதப்படுகிறது.

    திருமழிசையில் மொத்த நிலப்பரப்பில் 35 சதவீதம் அல்லது 29.75 ஏக்கர் நிலப்பரப்பு திறந்தவெளிகள், பூங்காக்கள், சாலைகள் அமைக்க ஒதுக்கப்படுகிறது.

    கோயம்பேட்டில் கனரக வாகனப் போக்குவரத்து, பாதசாரிகள் நடமாட்டம் காரணமாக நெரிசலாகிவிட்டது. எனவே இந்த பகுதியை சில்லரை விற்பனை மற்றும் ஓட்டல்களுக்கு பயன்படுத்தலாம் என்று முடிவு செய்து உள்ளனர்.

    இதன் மூலம் மாநிலம் முழுவதும் இருந்து வருபவர்களை கவரும் இடமாக கோயம்பேடு மாறும். கோயம்பேட்டை பொறுத்தவரை மெட்ரோ ரெயில் போக்குவரத்தின் முதல் மற்றும் 2-ம் பகுதியின் இணைப்பிடமாக இருக்கிறது.

    ெசன்னை பெருநகர வளர்ச்சி குழுமம். கோயம்பேடு மார்க்கெட் பராமரிப்புக்காக ஆண்டுக்கு ரூ.11.70 கோடி செலவிடுகிறது. ஆனால் லாபம் ரூ.30 லட்சம் மட்டுமே கிடைக்கிறது.

    எனவே மார்க்கெட்டை நவீனப்படுத்துவது, புதிய வசதிகளை உருவாக்குவதன் மூலம் கூடுதல் வருவாயும் ஈட்ட முடியும் என்று ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.

    நுழைவு கட்டணம், வாகன நிறுத்தக்கட்டணம், திறந்த வெளிப்பகுதிகள் மூலம்தான் அதிக வருவாய் ஈட்டப்படுகிறது.

    கோயம்பேடு உள்பட சென்னையின் வடமேற்கு பகுதிகளில் பெரிய அளவிலான வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. திருமழிசையில் புதிய மார்க்கெட்டை உருவாக்குவது, கோயம்பேட்டை நவீன மயமாக்குவது மூலம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்று கூறப்படுகிறது.

    • அரசின் நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
    • கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெற திருப்பூர் சப்-கலெக்டர் விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளார்.

    திருப்பூர், ஏப்.20-

    தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயி கள்இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்குத்தி ட்டம் செயல்படுத்த ப்பட்டு வருகிறது. இதற்காக கிரைன்ஸ் என்ற இணையதளம் (AGRI STACK) மூலமாக அரசின்நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வருவாய் கோட்ட த்தில் உள்ள விவசாயிகளின் விவரங்களை ஒற்றை சாளர முறையில் பதிவு செய்வதால், வெவ்வேறு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக ஆவண ங்களை சமர்ப்பிக்காமல் எளிதில் விவசாயிகள் விண்ணப்பி க்கும் வகையில் கிரைன்ஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட ஆவணங்களுடன் தங்களது கிராம நிர்வாக அலுவலர்-உதவி வேளாண்மை அலுவலர்- உதவிதோட்டக்கலை அலுவலர்களை அணுகி கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துபயன் பெற திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளார். கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆவணங்கள்ஆதார் அடையாள அட்டை, அலைபேசி எண், புகைப்படம் , வங்கி கணக்கு விபரம் , நில விபரங்கள் ஆகும்.

    • கிராமம் வாரியாக விவசாயிகளின் தகவல்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளது.
    • விவசாயிகள் குறித்த விபரங்கள், வங்கி கணக்கு, நில விபரம் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது.

    குடிமங்கலம் :

    மத்திய, மாநில அரசுகளின் திட்ட பயன்களை பெற கிரென்ஸ் திட்டத்தின் கீழ் குடிமங்கலம் வட்டார விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேளாண் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வழங்கும், அனைத்து திட்டங்களும், அனைத்து விவசாயிகளுக்கும் சென்று சேரும் வகையில் அரசு துறைகளை ஒருங்கிணைத்து மத்திய அரசு புதிய இணைய தளம் துவக்கி, கிராமம் வாரியாக விவசாயிகளின் தகவல்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் விவசாயிகளின் தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது :- அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து திட்ட பயன்களும் கிடைக்கும் வகையில் கிரென்ஸ் (Grower online Registration of Agricultural Input System) என்ற இணையதளத்தில் விவசாயிகளின் நில உடமை விபரம், ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு விபரம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் வருவாய்த்துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அலுவலர்களால் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் வருவாய்த்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவு துறை, பட்டு வளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, விதை சான்றுத்துறை, சர்க்கரை துறை உள்ளிட்ட அரசு துறைகளின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும், நேரடியாக மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் சென்றடையும் வகையில் புதிய இணைய தளமான கிரென்ஸ் துவக்கப்பட்டுள்ளது.

    இந்த இணைய தளத்தில் விவசாயிகள் குறித்த விபரங்கள், வங்கி கணக்கு, நில விபரம் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. எனவே குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள விவசாயிகள் ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், சிட்டா, போட்டோ, ஸ்மார்ட் ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றுடன், வி.ஏ.ஓ., மற்றும் வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும்.வரும் நிதி ஆண்டில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு எளிதாக சென்றடையும் வகையில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளதால் அனைத்து விவசாயிகளும் உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • சிவகங்கை மாவட்ட இளைய தலைமுறையினர் அரசு திட்டங்களின் மூலம் தொழில்கள் தொடங்கி வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் அளிக்கப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி காரைக்குடி வட்டம், அரியக்குடியில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களில் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பிளஸ்-2, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் அளிக்கப்படுகிறது.

    வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வியாபாரம், சேவை தொழில்கள் மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க முறையே ரூ.5 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கி முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவோர்களாக மாற்றி ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தி வருகிறது.

    கலைப்பாடுகளுடன் கூடிய கைவினைப் பொருட்களை தயாரிப்பதற்கான கலையினை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் வகையில், ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி, காரைக்குடி வட்டம், அரியக்குடியில் 25-க்கும் மேற்பட்டவர்கள் தனித்தனியாக வெண்கல குத்துவிளக்கு, கடவுள் உருவங்கள், மணிகள், திருவாட்சி மற்றும் பிற பூஜை பொருட்களை உற்பத்தி செய்யும் பணியினை மேற்கொண்டு வரும் உற்பத்தியாளர்கள், அவர்கள் மேற்கொண்டு வரும் தொழிலை மேம்படுத்தும் வகையில், அரசால் வழங்கப்பட்டு வரும் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் வெண்கல உலோக உற்பத்தியா ளர்களுக்கான குழுமம் ஒன்றை அமைத்து தருவதற்கு கோரிக்கை வைத்துள்ளதன் அடிப்படையில் அதற்கான இடத்தையும் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனைக் கருத்தில் கொண்டு, இளைய தலை முறையினர்கள் இதுபோன்று அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கி, பயன்பெற்று தங்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், சிவகங்கை, புள்ளி விவர ஆய்வாளர் நாகராஜன், சிவகங்கை தொழில் கூட்டுறவு அலுவலர் ருத்ரமூர்த்தி, தொழில் கூட்டுறவு மேற்பார்வையாளர் முத்துக்குமார், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆடுகள் தரமற்று இருப்பதாகவும், ஒரு ஆட்டின் விலை 1,000 முதல் 1,500 ரூபாய் வரை தான் தேறும் எனவும் பயனாளிகள் கூறினர்.
    • வியாபாரிகளால் கொண்டு வரப்படும் ஆடுகள்,பயனாளிகளுக்கு திருப்தியாக இல்லாவிட்டால், வேறு ஆடுகளை எடுத்து வரச்சொல்லி வாங்கிக் கொள்ளலாம்.

    திருப்பூர் :

    கால்நடை பராமரிப்புத்துறை சார்பில்விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 5 ஆடுகள் வாங்க ஒரு ஆட்டுக்கு ரூ. 3,500 வீதம் 17 ஆயிரத்து 300 ரூபாய் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 பயனாளிகளுக்கு ஆடு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் அவிநாசி வடுகபாளையம், சின்னேரிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கு சமீபத்தில் ஆடுகள் வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட ஆடுகள் தரமற்று இருப்பதாகவும், ஒரு ஆட்டின் விலை 1,000 முதல் 1,500 ரூபாய் வரை தான் தேறும் எனவும் பயனாளிகள் கூறினர்.

    இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறுகையில், ஒவ்வொரு வட்டார அளவிலும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மொத்த வியாபாரிகள் மூலம் ஆடுகள் வினியோகிக்கப்படுகிறது. மொத்த வியாபாரிகளால் கொண்டு வரப்படும் ஆடுகள், பயனாளிகளுக்கு திருப்தியாக இல்லாவிட்டால், வேறு ஆடுகளை எடுத்து வரச்சொல்லி வாங்கிக் கொள்ளலாம். ஆடுகளை தேர்வு செய்வது பயனாளிகள் தான். பயனாளிகள் விருப்பப்பட்டால் சந்தைக்கு சென்றும் கூட ஆடுகளை வாங்கிக்கொள்ளலாம் என்றனர்.

    இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-

    அரசின் ஆடு வழங்கும் திட்டத்தில் முந்தைய ஆட்சியின் போது, ஒவ்வொரு வட்டார அளவில் உள்ள கால்நடை மருத்துவர் கணக்கிலும், அதற்கான தொகை வரவு வைக்கப்பட்டு விடும். பயனாளிகள் தங்களுக்கு விருப்பப்பட்ட சந்தைக்கு சென்று, விரும்பிய ஆடுகளை வாங்கி கொள்ளலாம். அதற்கான தொகையை கால்நடை மருத்துவர்கள் விடுவித்து விடுவர்.தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு பொதுவாக ஒரு மொத்த வியாபாரி மூலம் ஆடுகள் வினியோகிக்கப்படுகிறது.

    அவ்வாறு கொண்டு வரப்படும் ஆடுகள், பயனாளிகளுக்கு திருப்தியளிப்பதாக இல்லை என்ற புகாரும் வருகிறது.விவசாயிகளே நேரடியாக சந்தைக்கு சென்று ஆடுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம் என கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறினாலும் அதற்கான தொகையை விடுவிப்பதில், துறை ரீதியாக நடைமுறை சிக்கல் உள்ளது.எனவே, பழைய நடைமுறைப்படி, அந்தந்த வட்டார கால்நடை மருத்துவர்கள் மூலம் விவசாயிகளே நேரடியாக ஆடுகளை கொள்முதல் செய்து கொள்ளும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கால்நடை வளர்ப்போர் சிலர் கூறியதாவது:-

    அரசால் வழங்கப்பட்ட கால்நடைகளின் உண்மையான சந்தை மதிப்பை கால்நடை பராமரிப்பு துறையினரிடம் இருந்து பெற்று வரும்படி, இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.ஆனால் எங்கிருந்தோ ஒரு வியாபாரியிடமிருந்து வாங்கப்படும் கால்நடைகளுக்கு, சந்தை மதிப்பை நிர்ணயித்து கொடுக்க கால்நடை பராமரிப்புத்துறையினர் தயாராக இல்லை. இதனால், அவை இறந்தால் இன்சூரன்ஸ் தொகையும் கிடைப்பதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆடுகள் வாங்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்கின்றனர்விவசாயிகள்.ஆடு நோஞ்சானாக காணப்பட்டால் விலை குறைவாக போகும். இதனை தவிர்க்க சில வியாபாரிகள் ஆடுகளை சந்தைக்கு கொண்டு செல்வதற்கு முன் லிட்டர் கணக்கில் வாயில் தண்ணீரை ஊற்றுகின்றனர். இதனால் ஆடுகள் வயிறு பெருத்து எடை அதிகமாக காணப்படும்.

    ஆடு வாங்குபவர் ஆடுகள் நல்ல எடையுடன் திடகாத்திரமாக இருப்பதாக நம்பி அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்று விடுவர். கசாப்பு கடைக்காரர்கள் வாங்கியவுடன் ஆடுகளை உடனடியாக அறுத்து விடுகின்றனர்.தற்போது, அரசின் இலவச திட்டத்தில் ஆடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இவற்றை வாங்குவதற்கு, அலுவலர்கள் சந்தைக்கு சென்று ஆடுகளை வாங்கி அவற்றை பயனாளிகளுக்கு வழங்குகின்றனர்.

    இது குறித்து பொங்கலூர் வட்டார விவசாயிகள் சிலர் கூறியதாவது:சில வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வரும் முன் பல லிட்டர் தண்ணீரை வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றுகின்றனர். அவை குடிக்க முடியாமல் முரண்டு பிடிக்கும். இருந்தாலும் நாக்கை இழுத்து பிடித்து தண்ணீரை ஊற்றுவர். தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாக இருக்குமா என்பதும் கேள்விக்குறியே.

    வரும் வழியில் ரோட்டோரங்களில் சாக்கடையில் கிடைக்கும் நீரைக்கூட சிலர் ஊற்றி விடுவதுண்டு. இந்த ஆடுகளுக்கு சில நாட்கள் வயிற்றில் போகும். சரியாக தீவனம் எடுக்க முடியாது.உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் ஆடுகள் இறந்து விட நேரிடுகிறது. ஆடுகள் இறக்க இதுவும் முக்கிய காரணம். ஆடுகள் வாங்கும்போது விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்றனர். 

    ×