search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பென்ஷனர்"

    • வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்களில் சில நேரங்களில், பணம் எடுக்க முடியாமல் நெட் ஒர்க் பிரச்சினை ஏற்படுகிறது
    • ஏ.டி.எம்., எந்திரங்களில், பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகள் தான் வருகிறது.

    அவினாசி :

    தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளுடன், திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், காலாண்டு கூட்டம் நடத்தினார்.

    இதில் கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேசன் சார்பில் அதன் தலைவர் காதர்பாட்சா, பொது செயலர் ராமலிங்கம், நியமன செயலர் கிறிஸ்டோபர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை வருமாறு:-சில வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்களில் சில நேரங்களில், பணம் எடுக்க முடியாமல் நெட் ஒர்க் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் பென்ஷனர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஏ.டி.எம்., எந்திரங்களில், பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகள் தான் வருகிறது.

    சில்லரை செலவினங்களுக்கு தேவையான10, 20, 50, 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை. இதுவும் பல வகைகளில் பிரச்சினையாகவே உள்ளது.எனவே அருகேயுள்ள வங்கி கிளைகளில் 500 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லரை நோட்டு தரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, ஏ.டி.எம்., மையங்களில் சில்லரை ரூபாய் நோட்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.கூட்டத்தில் நுகர்வோர் சார்ந்த செயல்பாடுகளில் சிறப்புற செயல்பட்டமைக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட பாராட்டுச்சான்று, விருது, கேடயம் ஆகியவற்றை சங்க தலைவர் காதர்பாட்சா பெற்று கொண்டார்.

    ×