என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விக்ராந்த்"
- நடிகர் விக்ராந்த் மற்றும் ரித்விகா இணைந்து நடித்த தீபாவளி போனஸ் திரைப்படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியானது.
- தீபக் குமார் தலா இப்படத்தை தயாரித்துள்ளார்.
நடிகர் விக்ராந்த் மற்றும் ரித்விகா இணைந்து நடித்த தீபாவளி போனஸ் திரைப்படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியானது. இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தை ஜெயபால்.ஜே இயக்கியுள்ளார். படத்தின் இசையை மரியா ஜெரால்ட் மேற்கொண்டுள்ளார். தீபக் குமார் தலா இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படம் லோவர் மிடில் கிளாஸ் குடும்பத்தின் நிதர்சத்தையும், எதார்த்தத்தியும் பதிவு செய்துள்ள திரைப்படமாகும். மதுரை மாநகராட்சியில் உள்ள ஒரு குடும்பம் தீபாவளி போனஸை மையமாக வைத்து எடுத்துள்ள திரைப்படமாகும். இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 26 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. படத்தை திரையரங்கில் பார்க்க தவற விட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாரு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திரைப்படத்தின் விமர்சனத்தை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விக்ராந்த் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் நடித்துள்ளார்.
- இவர் இதற்கு முன் வில்அம்பு படத்தை இயக்கியுள்ளார்.
ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விக்ராந்த் மற்றும் விஷ்ணுவிஷால் நடித்து இருந்தனர். விக்ராந்த் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
அடுத்ததாக விக்ராந்த் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் நடித்துள்ளார். இவர் இதற்கு முன் வில்அம்பு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசையை பாலமுரளி பாலு மேற்கொண்டுள்ளார். இவர் இதற்கு முன் ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் கஜினிகாந்த் போன்ற படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் விக்ராந்துடன் யோகி பாபு, பவித்ரா மாரிமுத்து, இனிகோ பிரபாகர் மற்றும் மிப்பு சாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று விஜய் சேதுபதி மற்றும் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.
படத்திற்கு `தி கில்லர் மேன்' என பெயரைட்டுள்ளனர். படத்தின் இறுதி கட்ட பட பிடிப்புகள் நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைபடம் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விக்ராந்த் அடுத்து ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் இசையை பாலமுரளி பாலு மேற்கொண்டுள்ளார்.
ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விக்ராந்த் மற்றும் விஷ்ணுவிஷால் நடித்து இருந்தனர். விக்ராந்த் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
அடுத்ததாக விக்ராந்த் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் நடித்துள்ளார். இவர் இதற்கு முன் வில்அம்பு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசையை பாலமுரளி பாலு மேற்கொண்டுள்ளார். இவர் இதற்கு முன் ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் கஜினிகாந்த் போன்ற படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் விக்ராந்துடன் யோகி பாபு, பவித்ரா மாரிமுத்து, இனிகோ பிரபாகர் மற்றும் மிப்பு சாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்போகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நாளைய தீர்ப்பு, பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ் மோர், பிரியமுடன், கில்லி, பிகில், மாஸ்டர், வாரிசு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஜய், தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும், விஜய்யின் உறவினருமான விக்ராந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்து விஜய்யின் சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Happy birthday dear big brother @actorvijay ??♥️
— Vikranth Santhosh (@vikranth_offl) June 22, 2023
Wishing u only the best #HappyBirthdayThalapathyVijay #Love #Thalapathy pic.twitter.com/LM8izO3BZJ
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் லால் சலாம்.
- இப்படத்தின் புதிய போஸ்டரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 34 நாட்கள் நடைபெற்ற 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவயடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் லால் சலாம் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படப்பிடிப்பில் இன்று ரஜினிகாந்த் இணையவுள்ளதாக இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். தி மனிதன் என்று குறிப்பிட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
THE MAN ..THE MANIDHAN…THE POWER MAGNET ARRIVES MIDNIGHT… #Thalaivar #Appa ❤️ # lalsalaam pic.twitter.com/hX445p0ZLa
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) May 7, 2023
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் லால் சலாம்.
- இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 34 நாட்கள் நடைபெற்ற 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவயடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.
இந்நிலையில் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையித்தில் இருந்து விமானம் மூலம் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- '3', ‘வை ராஜா வை’ போன்ற படத்தை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
- தற்போது இவரின் இயக்கத்தில் ரஜினி இணைந்துள்ளார்.
2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் 'ஓ சாத்தி சால்' என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இவர் 'லால் சலாம்' என்ற புதிய படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
லால் சலாம்
இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் முதல் முறையாக ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#LalSalaam 🫡 to everyone out there!
— Lyca Productions (@LycaProductions) November 5, 2022
We are extremely delighted to announce our next project, with the one & only Superstar 🌟 @rajinikanth in a special appearance!
Directed by @ash_rajinikanth 🎬
Starring @TheVishnuVishal & @vikranth_offl in the leads 🏏
Music by @arrahman 🎶 pic.twitter.com/aYlxiXHodZ
- இயக்குனர் நாகேஸ்வரன் இயக்கத்தில் விக்ராந்த் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இவருக்கு ஜோடியாக ஷிரின் கஞ்ச்வாலா நடிக்கிறார்.
"தொட்டுவிடும் தூரம்" படத்தை இயக்கிய இயக்குனர் நாகேஸ்வரன் இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. எஸ். அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் "டிக்கிலோனா" புகழ் ஷிரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் (ஜெய் பீம்) தமிழ், வேல ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
விக்ராந்த் படத்தின் துவக்க விழா
இந்த படத்தின் இன்னொரு கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். அவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தென் மாவட்டங்களின் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை மற்றும் ஆக்ஷன் கலந்து அதே சமயம் குடும்ப பாங்கான கதை அம்சத்துடன் இந்த படம் உருவாக இருக்கிறது.
விக்ராந்த்
மாசாணி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். இப்படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடர்ந்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- விமானம் புறப்பட்டுச் செல்லுதல் உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற்றன.
- ஆகஸ்ட் 22 முதல் இந்த கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
கொச்சி:
தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் விக்ராந்த் போர் கப்பலை, இந்திய கடற்படை மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தளம் ஆகியவை இணைந்து முற்றிலும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட பாகங்களை கொண்டு உருவாக்கி உள்ளன.
இந்தக் கப்பலின் முதற்கட்ட கடல் ஒத்திகை ஆகஸ்ட் 2021-ல் மேற் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட ஒத்திகை பயிற்சிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 4-ம் கட்ட கடல் ஒத்திகை நேற்று நிறைவடைந்துள்ளது. இந்த ஒத்திகையின்போது, விமானம் புறப்பட்டுச் செல்லுதல் உள்ளிட்ட பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
விக்ராந்த் போர் கப்பல் இந்த மாத இறுதியில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22 அன்று இந்த கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.