என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழகத்தில் மழை"
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மற்றும் நளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
23-ந்தேதி மற்றும் 24-ந்தேதிகளில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
26-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30°-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31°-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
- 21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இதனால் இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.
- மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
சென்னை:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், பரவலாக மழை இன்னும் தீவிரம் அடையவில்லை. அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடலில் தாமதமான தீவிர சூறாவளி புயல்கள், இந்திய பெருங்கடலில் வலுவான சலனங்கள் உருவாகாதது போன்ற காரணங்களால் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையாததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
வருகிற 20-ந்தேதிக்கு (நாளை) பிறகு கடல் சார்ந்த அலைவுகள் இந்திய பெருங்கடலுக்கு சாதகமாக அமையும் என்பதால், இம்மாத இறுதியில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதி வரை அடுத்தடுத்த புயல் சின்னங்களை வங்கக்கடலில் உருவாக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும், வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் 23-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு- வடமேற்கில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு. 21-ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்று சுழற்சி உருவாக கூடும். மேலும் இது மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இதனால் வருகிற 25-ந்தேதி கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதுவரை பெய்த மழைப் பொழிவின் மூலம் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை குறைவாகவே பதிவாகி உள்ளது.
- சென்னையை பொறுத்தவரை 55 செ.மீ. மழை பெய்துள்ளது. சராசரி மழையை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யக்கூடிய மழை மூலம் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி விவசாயத்திற்கு பயன் அளிக்கும். இது தவிர சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய ஏரிகளும் இதனை நம்பிதான் உள்ளன.
அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் வரை பருவமழை காலம் என்றாலும் சில ஆண்டுகளில் ஜனவரி முதல் வாரம் வரை கூட மழை பெய்வது உண்டு.
இந்த வருடம் கடந்த மாதம் 15-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியுடன் பருவமழை தொடங்கியதால் சென்னை உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
அதனை தொடர்ந்து மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த வாரம் உருவாகி மண்டலமாக வலுபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது வலுவிழந்தது. இதனால் வட மாவட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட மழை பொய்த்து போனது.
ஆனாலும் வங்க கடலில் தொடர்ந்து உருவாகி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், உள் மாவட்டங்கள் இயல்பை விட குறைந்த அளவில்தான் மழை பெய்து உள்ளது.
ஏரி-குளம் எதுவும் நிரம்பவில்லை. பருவமழை காலம் மத்திய பகுதிக்கு வந்து விட்ட நிலையில் குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்தடுத்து உருவாகாமல் தாமதம் ஆவதால் எதிர்பார்த்த மழை பொழிவு இல்லை.
இதுவரை பெய்த மழைப் பொழிவின் மூலம் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை குறைவாகவே பதிவாகி உள்ளது.
18 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது. அங்கு 51 சதவீதம் மழை பற்றாக்குறையாக உள்ளது. தென்காசி மாவட்டத்தில் 41 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது. காஞ்சிபுரத்தில் 35 சதவீதமும், நாகப்பட்டினம் 32 சதவீதமும் இயல்பை விட குறைவாகவே மழை பெய்துள்ளது.
சென்னையை ஒட்டிய திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருவாரூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் இயல்பை விட தற்போது வரை மழை குறைவாக பெய்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை 55 செ.மீ. மழை பெய்துள்ளது. சராசரி மழையை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 30 செ.மீ. மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை சராசரியாக 48 செ.மீ. பெய்ய வேண்டும். தற்போதைய நிலவரப்படி 3 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகி உள்ளது.
இந்த வாரத்தில் சென்னை அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை குறைவாகவும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை கணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாதம் இறுதியில் கனமழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- புரசைவாக்கம், வேப்பேரி, பட்டினம்பாக்கம், மந்தைவெளி, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று காலையும் கோடம்பாக்கம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், வடபழனி, புரசைவாக்கம், வேப்பேரி, பட்டினம்பாக்கம், மந்தைவெளி, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
பொன்னேரி, செங்குன்றத்தில் தலா 3 செ.மீ, பூண்டி, திருத்தணி, ஊத்துக்கோட்டை, பூவிருந்தவல்லியில் தலா 2 செ.மீ மழை பதிவு.
ஆர்.கே.பேட்டை, ஆவடி, சோழவரம், திருவாலங்காடு, திருவள்ளூர், தாமரைப்பாக்கம், ஜமீன் கொரட்டூரில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
- வழக்கமாக 2 சுழற்சிகள் ஒன்று சேர்ந்து தாழ்வுப் பகுதியாக வந்த நிகழ்வுகளில் நல்ல மழை கிடைத்திருக்கிறது.
- 24-ந்தேதியோ அல்லது அதற்கு பிறகோ தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகி, புயலாகவும் மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டாலும், பருவமழை தீவிரம் அடையவில்லை. இந்த மாதம் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி பருவமழை தீவிரம் அடையும் என சொல்லப்பட்டது. அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகுவதிலேயே தாமதம் ஆனது. 3 முறை தள்ளிப்போய், கடந்த 11-ந்தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்த தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையமும், தனியார் வானிலை ஆய்வாளர்களும் தெரிவித்தனர்.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் வலு இழந்து போனது. இதனால் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கான காரணம் என்ன? வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் எதிர்பார்த்த மழை கிடைக்காமல் போனது ஏன்? என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
வழக்கமாக 2 சுழற்சிகள் ஒன்று சேர்ந்து தாழ்வுப் பகுதியாக வந்த நிகழ்வுகளில் நல்ல மழை கிடைத்திருக்கிறது. ஆனால் கடந்த வாரத்தில் மியான்மரில் உருவான காற்று சுழற்சி வலு இழந்து, தென்மேற்கு வங்கக் கடலில் இருந்த காற்று சுழற்சியுடன் இணைந்து தாழ்வுப் பகுதியாக இலங்கையை நோக்கி தமிழக கடற்கரை பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தென்மேற்கு வங்கக்கடலில் இருந்த காற்று சுழற்சி வலு குறைந்து, மியான்மரில் இருந்து வந்த காற்று சுழற்சி வலுபெற்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்துவிட்டது. இதனால் எதிர்பார்த்த மழை கிடைக்காமல் போய்விட்டது. இருப்பினும், உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் மழை பெய்து இருப்பதை பார்க்க முடிகிறது.
அடுத்ததாக இலங்கைக்கு தென் கிழக்கில் காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக 16-ந்தேதி (நாளை) வரை மழை இருக்கும். அதிலும் 15-ந்தேதி (அதாவது இன்று) காலை வட கடலோர மாவட்டங்களிலும், பிற்பகலில் 11 மணி முதல் 2 மணி வரை உள் மாவட்டங்களிலும், இரவில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளிலும் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பும் உள்ளது. அதன்பின்னர், ஓரிரு நாட்கள் இடைவெளிவிட்டு கிழக்கு காற்றினால் 20-ந்தேதியில் இருந்து மழை தொடங்கும். 24-ந்தேதியோ அல்லது அதற்கு பிறகோ தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகி, புயலாகவும் மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த புயல் மழையை கொடுக்கக் கூடியதாகவே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன்படி பார்க்கையில் புயலுடன், வடகிழக்கு பருவமழை ஆட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்த தாமதத்தால், அடுத்தடுத்து வரக்கூடிய நிகழ்வுகளும் தள்ளிப்போகிறது.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
8-ந்தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
9-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
11-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31°-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24°-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
- நாளை கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதியிலும் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
- சென்னை மற்றும் புறநகரில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
தமிழகத்தில் பொதுவாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மேலும் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். நாளை (7-ந்தேதி) முதல் 9-ந்தேதி வரை 3 நாட்கள் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதியிலும் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
8-ந்தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
9-ந்தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள், வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் 8-ந்தேதி வரை மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
7-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
8-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
9-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,
புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
10-ந்தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து இருந்தது.
- 8 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து இருந்தது.
அந்த வகையில், இன்று பிற்பகல் 1 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
- தெற்கு வங்கக்கடலில் நவம்பர் முதல் வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.
- நவம்பர் 2வது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு வங்கக்கடலில் நவம்பர் முதல் வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.
காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு பகுதியாக மாறி, நவம்பர் 2வது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை, அதாவது 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.
- 25 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைத்தவிர, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்